·   ·  39 recipes
  •  ·  5 friends
  • I

    9 followers

அசத்தலான தக்காளி குருமா

கிராமத்து சுவையில் சில பொருட்களை எல்லாம் வறுத்து போட்டு அரைத்து இப்படி ஒரு தக்காளி குருமா வைத்துப் பாருங்க. இதனுடைய வாசம் சும்மா கறி குழம்பு போல வீசும். இரண்டு இட்லி சாப்பிட வரவங்க கூட, இன்னும் இரண்டு இட்லி சேர்த்து சாப்பிடுவாங்க. சுவை சும்மா சூப்பரா இருக்கும்.

முதலில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் அரிசி 1 ஸ்பூன், போட்டு அது வெள்ளையாக பொரிந்து வரும் அளவுக்கு வறுத்துக் கொள்ளவும். அதே கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வர மிளகாய் 6, கருவேப்பிலை 1 கொத்து, சின்ன வெங்காயம் தோல் உரித்தது 100 கிராம், போட்டு நன்றாக வதக்க வேண்டும். இந்த மூன்று பொருட்களும் வதங்கியவுடன், ஒரு தட்டில் கொட்டுங்கள். 

அடுத்து அதே கடாயில் இன்னும் 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பட்டை 1 சின்ன துண்டு, கிராம்பு 2, மிளகு 1/2 ஸ்பூன், வர மல்லி 2 ஸ்பூன், போட்டு ஒரு நிமிடம் வரை வருங்க. அடுத்து இந்த பொருட்களோடு சோம்பு 1 ஸ்பூன், சீரகம் 1 ஸ்பூன், கசகசா 1 ஸ்பூன் போட்டு லேசாக வறுத்து உடனடியாக அடுப்பை அணைத்து இதையும் ஒரு தட்டில் கொட்டிக்கோங்க. 

கசகசா இல்லை என்றால் 1 ஸ்பூன் பொட்டுக்கடலையோ, அல்லது ஐந்தாறு முந்திரிப்பருப்பு சேர்த்துக் கொள்ளலாம் அடுத்து அதே கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி 4 நறுக்கிய பழுத்த பெரிய தக்காளி பழத்தை போட்டு வதக்கவும். தக்காளி குழய குழைய வதங்கியவுடன் ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்து விடுங்கள். இப்போது நாம் வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் தக்காளி மட்டும் தனியாக இருக்கட்டும். 

மசாலா பொருட்கள் எல்லாம் ஒரு தட்டில் தனியாக ஆறட்டும். மிக்ஸி ஜாரை எடுத்து முதலில் வறுத்து வைத்திருக்கும் மசாலா பொருட்களை போட்டு கொரகொரப்பாக முதலில் ஒரு ஓட்டு ஓட்டிக் கொள்ளவும். பிறகு தண்ணீர் ஊற்றி அதை விழுதாக அரைக்கவும். இந்த மசாலா விழுதோடு எடுத்து வைத்திருக்கும் வெங்காயம் தக்காளியையும் போட்டு இப்போது எல்லா பொருட்களையும் ஒன்றாக அரைத்து அப்படியே தனியாக வைத்துக் கொள்ளுங்கள். 

அடுத்து குருமாவை தாளிக்கலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு 1 ஸ்பூன், போட்டு தாளித்து மிகப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 2 கைப்பிடி போட்டு, இரண்டு நிமிடம் வதக்கி கருவேப்பிலை ஒரு கொத்து சேர்க்கவும். அடுத்து மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை இந்த வெங்காயத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். தேவையான அளவு தண்ணீரையும் இதில் ஊற்றுங்கள், கூடவே 1/4 ஸ்பூன் மஞ்சள் பொடி போட்டுக்கோங்க. குழம்பு கொதித்துக் கொண்டே இருக்கட்டும். 

இதற்குள் மிக்ஸி ஜாரில் 1/2 மூடி தேங்காயை போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் ஊற்றி, இந்த குருமாவுக்கு தேவையான அளவு உப்பு தூள் தூவி, மீண்டும் 5 லிருந்து 7 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விட்டால், சூப்பரான தக்காளி குருமா தயார். இது ஒரு வித்தியாசமான சுவையில் இருக்கும். 

  • 382
  • More
Reviews (0)
Login or Join to comment.
Ads
Latest Recipes (Gallery View)
1-12
Ads