·   ·  10 recipes
  •  ·  5 friends
  • I

    9 followers

நாக்கில் எச்சில் ஊறவைக்கும் பூண்டு மிளகு குழம்பு

பூண்டு மிளகு குழம்பு கண்டிப்பாக அனைவரும் அடிக்கடி செய்து சாப்பிட வேண்டும். ஏனெனில் இதில் சேர்க்கும் பூண்டு, மிளகு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போன்ற அனைத்துமே நம் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவி செய்யக் கூடியது. 

ஆனால் பெரும்பாலனோருக்கு பூண்டின் வாடை பிடிக்காது அல்லது பூண்டு சேர்த்த குழம்பின் வாடையே கூட பிடிக்காது. இந்த சமையல் குறிப்பு பதிவில் உள்ளது போல வறுத்து அரைத்து இந்த குழம்பை வைக்கும் போது அதன் சுவை நிச்சயம் அனைவரையும் சாப்பிடத் தூண்டும். 

ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். பத்து சின்ன வெங்காயத்தையும் 15 பல் பூண்டையும் தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் கடாய் வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானவுடன் அரை டீஸ்பூன் கடுகு, கால் டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து உரித்து வைத்து வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். 

வெங்காயம் லேசாக வதங்கியவுடன் பூண்டையும் ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள். கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் குழம்பு மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி விடுங்கள்.  இதை வதக்கிய பிறகு இரண்டு மீடியம் சைஸ் தக்காளி சின்ன துண்டுகளாக நறுக்கி சேர்த்த பின்பு அரை டீஸ்பூன் உப்பையும் சேர்த்து தக்காளி குழைய வதங்கும் வரை வதக்க வேண்டும். 

அரைப்பதற்கு, அடுப்பில் கடாய் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம், ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு, ஒரு டேபிள் மல்லி, கால் டீஸ்பூன் வெந்தயம், இரண்டு காய்ந்த மிளகாய் என அனைத்தையும் சேர்த்து நிறம் மாறாமல் வாசம் வரும் வரை வறுத்து அதை தட்டில் கொட்டி ஆற வைத்து மிக்ஸியில் நைசான பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள். 

தக்காளி நன்றாக வதங்கிய பிறகு அரைத்து வைத்த இந்த பவுடரை சேர்த்து ஒரு முறை கலந்து விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி குழம்பை ஒரு கொதி விடுங்கள். அதன் பிறகு கரைத்து வைத்த புளித்தண்ணீரையும் இதில் சேர்த்து குழம்பிற்கு உப்பை சரி பார்த்த ஐந்து நிமிடம் இந்த நன்றாக கொதிக்க விடுங்கள். கடைசியாக ஒரு சின்ன கட்டி வெல்லத்தை இதில் சேர்த்து கரைந்து ஒரு கொதி வந்ததும் ஒரு கொத்து கருவேப்பிலை கொஞ்சம் கொத்தமல்லி தழைகளையும் தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். 

இந்தக் குழம்பு நல்ல கம கம வென்று வாசத்துடன் சாப்பிட அப்படி ஒரு சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது மட்டும் கொஞ்சமாக நல்லெண்ணெய் சேர்த்துக் கொடுங்கள். நீங்களும் ஒரு முறை இதே பக்குவத்தில் இந்த குழம்பை வைத்து பாருங்கள் சுவை அட்டகாசமாக இருக்கும்.

  • 283
  • More
Reviews (0)
Login or Join to comment.
Ads
Latest Recipes (Gallery View)
1-12
Ads