·   ·  2211 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

தெரிந்தது அவள் வெள்ளை மனசு (குட்டிக்கதை)

பைக் ஸ்டார்ட் பண்ணி வெளிய கிளம்பலாம்னு நினைக்கும்போது பின்னாடி இருந்து ஒரு அலறல் மாதிரி சத்தம் கேட்டுச்சு… “ஏட்டான் ப்ளீஸ் என்னையும் கூட்டிக்கிட்டு போங்க…” சத்தம் கேட்ட திசையில அருவருப்போட நான் பார்த்தேன். நந்துவோட முகம் அங்க தெரிஞ்சதும் எனக்குள்ள வெறுப்பு பொங்கி வந்துச்சு… திரும்பவும் நந்துவோட கூச்சல் கேட்டதும் நான் காரி துப்பினேன். சட்டன்னு நிறுத்தின மாதிரி அவ அமைதியாயிட்டா….

“கருத்து கருகருன்னு இருக்கற உன்ன என் பைக்கு பின்னாடி உக்கார வெச்சுட்டு எல்லாரும் என்ன கேலி பண்ணனும். நாசமாப் போனவளால மத்தவங்க முன்னாடி தலை நிமிர்ந்து நடக்கக்கூட முடியல…”

அவ மனசு வலிக்கும்னு தெரிஞ்சுதான் நான் அப்படி சொன்னேன். எதிர்பார்த்தது மாதிரியே நடந்துச்சு.

மூங்கில் பிளக்குற மாதிரி வெடிச்சு அழுதுட்டு உள்ள எங்கேயோ நந்து மறைஞ்சா. கொடூரமான ஒரு சந்தோஷத்தோட பைக்க நான் முன்னாடி எடுத்தேன்….

சின்ன வயசுல அப்பாவையும் அம்மாவையும் இழந்த நந்து வளர்ந்தது என் வீட்லதான். அம்மாவுடைய அண்ணனோட பொண்ணு. சின்ன வயசுல இருந்தே எனக்கு அவளப் பார்த்தா வெறுப்பா இருக்கும். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் கிள்ளி, வார்த்தைகளால காயப்படுத்துறது எனக்கு ஒரு ஹரமா இருந்துச்சு. கரிக்கட்டன்னு அவள ரெட்டை பேர் சொல்லி கூப்பிட்டது மத்தவங்களும் ஏத்துக்கிட்டது என்ன ரொம்ப சந்தோஷப்படுத்துச்சு… ஸ்கூல் முடிஞ்சு காலேஜ் லைஃப்ல போயும் அந்த வெறுப்பு எனக்குள்ளேயே இருந்துச்சு. மத்தவங்க கிண்டல் பண்ணும்போதும் அவ கண்ணுல இருந்து கண்ணீர் வரல. ஆனா நான் அப்படி பண்ணும்போது அவளுக்கு தாங்க முடியாத வேதனையா இருந்துச்சு…

நான் படிக்கிற காலேஜ்ல அவள சேர்த்தபோதும் நான் ரொம்ப எதிர்த்தேன். ஆனா அப்பாவோட வார்த்தைக்கு முன்னாடி நான் அமைதியாயிட்டேன். என் வீட்ல வேலைக்காரின்னுதான் நான் நந்துவ அங்க வெச்சு கேலி பண்ணினேன்… என் எதிர்பார்ப்புகள தவிடுபொடியாக்கி டிகிரி பரீட்சைல நான் தோத்துட்டு நந்து அதிக மார்க் வாங்கி பாஸ் பண்ணினது என்ன ரொம்ப அதிர்ச்சிக்குள்ளாக்கிச்சு.

அன்னிக்குல இருந்து என் கிராப் இறங்கிடுச்சு….

வீட்ல என்னவிட அவளுக்குத்தான் முக்கியத்துவம். அது எனக்குள்ள இன்னும் அதிகமா கோபத்த ஏத்துச்சு. அவ முன்னாடி தோள் வெள்ளையா இருக்கற பொண்ணோட காதலனா நடிச்சேன். அங்கேயும் ஏமாந்து நான் தோத்துட்டேன்… நந்துவுக்கு கவர்ன்மென்ட் வேலை கிடைச்சப்போ நான் ஒரு சேல்ஸ்மேனா இருந்தேன். வீட்டுக்காரங்க என்ன இன்னும் அதிகமா ஷாக் ஆக்கினது நந்துவுக்கும் எனக்கும் கல்யாணம் நிச்சயம் பண்ணினதுதான். எனக்கு உன்னப் பிடிக்கலன்னு நான் பல தடவை அவகிட்ட சொல்லியிருக்கேன். என் வீட்டுக்காரங்க காரணமாத்தான் அவளுக்கு ஒரு வாழ்க்கை கிடைச்சிருக்குன்னும் அவங்க வார்த்தைகள என்னால மீற முடியாதுன்னும் அவ சொன்னா…

நான் விலக முயற்சி பண்ணியும் அப்பாவோட முடிவு மாறல. கடைசியா விருப்பமில்லாம நந்துவுக்கு தாலி கட்டினேன். ஒரு தடவை கூட அவள தொட்டது இல்ல. தரையில பாய் விரிச்சு அவ அங்க தூங்குவா. நான் எந்திரிக்கிறதுக்கு முன்னாடி அவ அங்க இருந்து போயிருப்பா. நந்து ஒரு துளி தண்ணி கொடுத்தா கூட நான் குடிக்க மாட்டேன். பல ராத்திரிகள்ல அவள குத்தலான வார்த்தைகளால காயப்படுத்துவேன். நடு ராத்திரியில அவளோட சின்ன அழுகை என் காதுல விழும்போது மனசுக்குள்ள நான் சத்தமா சிரிப்பேன்…. ஞாபகங்கள் காடு மாதிரி வளர்ந்ததால எதிரே ஸ்பீடா வந்த கார நான் கவனிக்கல.

பைக்ல காலை வெச்சதுக்கு முன்னாடியே கார் என்ன இடிச்சு தூக்கிப் போட்டுச்சு…. எனக்கு சுயநினைவு வரும்போது நான் ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். காலுக்கும் கைக்கும் தலைக்கும் எனக்கு ஃபிராக்சர். எழுந்து நடக்க குறைஞ்சது மூணு நாலு மாசம் ஆகும்…

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஹாஸ்பிடல்ல அதிக நேரம் இருக்க முடியாது. அவங்களுக்கு சின்ன சின்ன உடம்பு சரியில்லாத பிரச்னைகள் இருக்கு.

நந்துதான் என்ன கவனிச்சுக்கிட்டா. என் காலும் கையும் அவதான். மத்தவங்க உதவி இல்லாம எதுவும் பண்ண முடியாதுன்னால நந்துவ தவிர்க்கவும் முடியல…

அன்னிக்கு முதல் தடவையா அவ ஊத்தி கொடுத்த கஞ்சி என் தொண்டைக்குழி வழியா இறங்குச்சு. நான் கேட்காம என் மனச புரிஞ்சு ஒவ்வொன்னும் அவ செஞ்சா.

எனக்கு இப்படி ஆனதுல அவளுக்கு ரொம்ப கஷ்டம். வெளியில காட்டிக்க மாட்டான்னு மட்டும் தான்.

நந்துவ நான் இன்னும் நெருக்கமா தெரிஞ்சுக்கிட்டேன். பாவம், எந்த குறையும் சொல்லாம, சண்டை போடாம லீவு போட்டு எனக்காக அவ கூட இருந்தா. உள்ளுக்குள்ள வருத்தத்தீ என் மனசுல எரியுறத நான் புரிஞ்சுக்கிட்டேன். அந்த பாதங்கள்ல விழுந்து ஒரு மன்னிப்பு கேட்க மனசு துடிச்சாலும் உடம்பு கேட்கல…. அவ மேல இருந்த என் வெறுப்புகள் எல்லாம் கரைஞ்சு போச்சு. ஏதோ ஒரு நிமிஷத்துல நானும் நந்துவ தெரியாமலேயே விரும்ப ஆரம்பிச்சேன்….

பேசி ஆரம்பிச்சப்போதான் அவ அந்த உண்மைய சொன்னா… “மனுவுக்கு இப்போ நேரம் சரியில்லையாம், விபத்து நடக்க வாய்ப்பு நிறைய இருக்காம்னு ஜோசியர் சொன்னாரு. ரெண்டு பேரும் சேர்ந்து மாசத்துக்கு ஒரு சனிக்கிழமை சிவ கோவில்ல கும்பிடணும், அதுதான் பரிகாரம்னு அவர் சொன்னாராம். அதுக்காகத்தான் அன்னிக்கு அவ கூட வர கெஞ்சினா…” என் கண்ணுல கண்ணீர் பெருகிச்சு, அவ உதடுகள் எல்லாத்தையும் துடைச்சு எடுத்துச்சு. நாலு மாசம் கழிச்சு நான் பூரண குணமடைந்து திரும்பி வந்தேன்.

அப்போதான் நந்து என்கிட்ட ஒரு விஷயம் சொன்னா…

“நான் மனுவுக்கு ஏத்த பொண்ணு இல்ல. சேர்ந்து டைவர்ஸ் கேஸ் ஃபைல் பண்ணா சீக்கிரமா பிரிச்சு விட்டுடுவாங்க. இந்த மனுவுல நான் சைன் பண்ணிட்டேன். மனுவும் சைன் பண்ணா இன்னைக்கு வக்கீல் கிட்ட கொடுக்கலாம்” அவ குரல் தழுதழுத்துச்சு. கூடவே நான் ரொம்பவும் அமைதியாயிட்டேன்….. கொஞ்ச நேரம் கழிச்சு சுயநினைவு வந்துச்சு. அவ கொடுத்த மனுவ நான் சின்ன சின்னதா கிழிச்சு தூக்கிப் போட்டேன். நந்துவ இழுத்து என் மார்போட சேர்த்து அவ உதட்டுல முத்தங்கள் வெச்சேன்….

முதல்ல ஷாக் ஆன நந்து என்கிட்ட இருந்து விலக முயற்சி பண்ணா. விடாம திரும்பவும் நான் இறுக்கிப் பிடிச்சு உதட்டுல இருந்து என் உதடுகள எடுக்காம… “என்ன விட்டுட்டு போகணும் இல்ல உனக்கு. அப்புறம் நீ என்ன லவ் பண்ணினது, விருப்பத்தோட என் தாலி கட்டினது எல்லாம்?”… ஆயிரம் கேள்விகள்…. எல்லாத்துக்கும் சேர்த்து அவளுக்கு ஒரு பதில்…. ”இந்த வெறுப்புல இருந்து ஒரு நாள் என்னை நீங்க விரும்புவீங்கன்னு எனக்குத் தெரியும்.

அந்த ஒரு நிமிஷத்துக்காக எவ்ளோ காலம் வேணும்னாலும் நான் காத்திருப்பேன்” “அப்போ டைவர்ஸ் நாடகமா இருந்துச்சா…” “இல்ல மனு.. அது உனக்கு சந்தோஷம் கொடுக்கும்னா அந்த சந்தோஷம்தான் எனக்கு திருப்தி….” மனசு நிறைய நந்துவ இன்னும் இறுக்கமா கட்டிப்பிடிச்சு அவ நெத்தியில முத்தம் வெச்சேன்…. “இனி ஒரு தடவை கூட உன்ன விட மாட்டேன், விலைமதிப்பில்லாத என் கருப்பு வைரமே…..” அப்போ அவ முகபாவம் ஆயிரம் பௌர்ணமி நிலா ஒண்ணா உதிச்ச மாதிரி இருந்துச்சு…..”

  • 141
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங