- · 5 friends
-
I

யார் அவர்? (குட்டிக்கதை)
சுற்றுலா பயணிகளை அவரவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு டூர் அனுப்பி வைக்கும் டிராவல் ஏஜென்சியின் உரிமையாளர் ரமேஷ் மிகுந்த சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தான்.
அந்த மாதத்திற்கான அனைத்து டூர் பேக்கேஜ்களும் நிரம்பி இருந்தன. அடுத்த மாதத்தில் எந்தெந்த இடங்களுக்கு டூர் பேக்கேஜ் போடலாம் என யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அலுவலகத்திற்கு வெளியே தயக்கத்துடன் நின்றிருந்த ஒரு முதிய தம்பதியினர் கண்களில் பட்டனர்.
உற்றுக் கவனித்தான்.
இருவரும் ஒட்டி நிற்காமல் தள்ளி தள்ளி நின்று அலுவலக முகப்பு கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த டூர் பேக்கேஜ் லிஸ்ட்டுகளை வாசித்து கொண்டிருந்தார்கள்.
வாசித்து முடித்து டூர் பேக்கேஜுக்கான விலையை பார்த்ததும் இருவரும் பெருமூச்சு விட்டார்கள்.
ரமேஷுக்கு புரிந்து போனது. அவர்களிடம் பணம் இல்லை. டூர் போவது சம்பந்தமாக அவர்களுக்குள் ஏதோ மனக்கசப்பு இருக்கிறது. அதான் ஒற்றுமையாக நிற்காமல் தள்ளி தள்ளி நின்று கோபத்தை மௌனமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ரோலிங் சேரை விட்டு எழுந்து வெளியே போனவன் அந்த முதிய தம்பதியினரை உள்ளே அழைத்து அமர சொன்னான்.
தயக்கத்துடன் தள்ளி தள்ளி அமர்ந்தார்கள். அவர்களிடம் பேசினான்,
'என்னுடைய டூர் பேக்கேஜ் எல்லாமே இன்ட்ரஸ்டிங்காவும் ரொம்ப பாதுகாப்பாவும் இருக்கும். ஆனால் விலை ரொம்ப காஸ்ட்லி. உங்களால அந்த அளவுக்கு பணம் தர முடியாது.
உங்களைப் பார்த்தால் டூர் போகணும்னு ஆசைப்படுறவங்க மாதிரி தெரியுது. இந்த மாசம் எனக்கு அதிக அளவு லாபம் வந்திருக்கு. அதனால என் செலவிலேயே உங்களை டூருக்கு அனுப்பி வைக்கப் போறேன். உங்களுக்கு சம்மதமா?'
'சம்மதம்' என அவர்கள் சந்தோஷமாக தலையாட்டினார்கள்.
அவர்கள் கண்ணெதிரிலேயே இரண்டு விமான டிக்கெட்டுகளைப் புக் செய்தான். வெளிநாட்டில் அவர்கள் தங்குவதற்கு மிகச்சிறந்த ரூமை புக் செய்தான்.
டூர் செல்வதற்கான நாள் வந்தது.
அந்த முதிய தம்பதியினர் டூர் கிளம்பி போனார்கள்.
வயதான கணவன் மனைவி தம்பதியினரின் நீண்ட நாள் ஆசையை தீர்த்து வைத்த ஒரு திருப்தி அவனுக்குள் வந்தது.
ஒரு மாதம் கழித்து அந்த தம்பதியரில் வயதான பெண்மணி மட்டும் ரமேஷை பார்க்க வந்திருந்தாள்.
ரமேஷ் அந்த பெண்மணியை உற்சாகமாக வரவேற்று கேட்டான்,
'டூர் எப்படி இருந்தது?'
அந்தப் பெண்மணி கண்களை அகல விரித்துக் கொண்டு சந்தோஷமாக பதில் சொன்னாள்,
'ரொம்ப அருமையா இருந்தது. சிறப்பான விமான பயணம். சொகுசுக்கு ஒரு சிறிதும் குறையாத ஆடம்பர லாட்ஜ். எவ்வளவு சாப்பிட்டாலும் சுவை குறையாத உணவு பதார்த்தங்கள் தருகின்ற ஹோட்டல். இதைவிட வேறு என்ன வேண்டும்..?
என் வாழ்க்கையில் இது மாதிரியான ஒரு டூரை நான் அனுபவித்ததே இல்லை. இந்த சந்தோஷ அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது.
ஆனாலும் எனக்கு ஒரு சின்ன சந்தேகம் இருக்கிறது. உன்னிடம் கேட்கலாமா?'
ரமேஷ் உற்சகத்தோடும் ஆவலோடும் பதில் சொன்னான்,
'என்ன சந்தேகம்? கேளுங்க..! உடனே பதில் சொல்றேன்'
அந்த வயதான பெண்மணி கேட்டாள்,
'டூருக்கு என் கூட வயசான பெரியவர் ஒருத்தரை அனுப்பி வச்சியே..! யார் அந்த பெரியவர்?'

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·