-
- 3 friends

இன்றைய ராசி பலன்கள் - 23.5.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வெளியூர் சார்ந்த பயண வாய்ப்புகள் மேம்படும். பிறருக்கு உதவி செய்யும்போது சிந்தித்து செயல்படவும். பிறமொழி மக்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரம் ரீதியான முயற்சிகள் கைகூடும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
ரிஷபம்
எதிராக இருந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வழக்கு விஷயங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வெளிநாட்டு வர்த்தகத்தில் மேன்மை உண்டாகும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். துணிவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மிதுனம்
வியாபாரம் தொடர்பான பணிகளில் பொறுமையை கடைபிடிக்கவும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களில் சிந்தித்து செயல்படவும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
கடகம்
கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். இழுப்பரியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரம் நிமிர்ந்தமான செயல்களின் பொறுமை வேண்டும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தருணங்கள் அமையும். சக ஊழியர்களிடத்தில் மதிப்பு உயரும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
உடன்பிறந்தவர்களின் இடத்தில் அனுசரித்து செல்லவும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். புதிய தொழில்நுட்பக் கருவிகளால் விரயங்கள் உண்டாகும். இனம்புரியாத சிந்தனைகளால் மனதளவில் குழப்பங்கள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் மாற்றம் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள்
கன்னி
குடும்பத்தில் அமைதி உண்டாகும். தோற்றப்பொலிவு மேம்படும். புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வரவுகளின் மூலம் சேமிப்புகள் உண்டாகும். பொது காரியங்களில் ஒத்துழைப்பு ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தனவெள்ளை
துலாம்
வரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வீடு, மனை விற்பனையில் லாபம் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். எதிர்ப்பாலின மக்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கோபம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
விருச்சிகம்
விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளிடத்தில் பொறுமை வேண்டும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் தாமதம் ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. நெருக்கமானவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். உயர்கல்வியில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
தனுசு
சமூகம் தொடர்பான புதிய கண்ணோட்டம் ஏற்படும். வாகனம் சார்ந்த வசதிகள் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மகரம்
மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். விற்பனையில் மாற்றமான சூழல் ஏற்படும். புதிய தொழில்நுட்ப தேடல்கள் அதிகரிக்கும். கணிதம் சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். மாமனார் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு கற்பனைத்திறன் மேம்படும். போக்குவரத்தில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கும்பம்
பயணங்களால் ஏற்பட்ட சோர்வுகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். நவீன சாதனங்கள் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான வியூகங்களை புரிந்து கொள்வீர்கள். உழைப்பிற்கான மதிப்பு கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தனவெள்ளை
மீனம்
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். செயல்பாடுகளில் பதற்றமின்றி செயல்படவும். உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். எதிலும் திருப்தியின்மையான சூழல் அமையும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·