·   ·  2009 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

பித்த வெடிப்பு பிரச்னை ஏற்படாமல் இருக்க......

• கால்களில் தோல்பகுதி வறண்டு காணப்பட்டால் இரவில் படுக்கும் முன்பு தேங்காய் எண்ணெயை லேசாகத் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் கால் மிருதுவாக மாறுவதோடு வெடிப்பு ஏற்படாமல் இருக்கும்.

• இரவு நேரங்களில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு அந்த நீரில் கால்களை சில நிமிடங்களுக்கு வைத்திருந்து கால்கள் சுத்தமான பின் எடுத்து துடைக்க வேண்டும். இதேபோல் சுடுநீரில் ஷாம்பு கலந்தும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் பாதங்கள் மற்றும் விரலிடுக்கில் உள்ள அழுக்குகள் வெளியேறும். இதனால் பாதங்கள் மென்மையாகும்.

• மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை படிக்கல்லால் (Pumice Stone) பாதங்களின் ஓரம் மற்றும் அடிப்பகுதியில் தேய்த்து மசாஜ் செய்வதால், இரத்த ஓட்டம் சீராவதோடு வெடிப்புகளும் நீங்கும். மசாஜ் செய்த பின்பு வெதுவெதுப்பான நீரில் பாதங்களை கழுவிக் கொள்ள வேண்டும். கால்களை அவ்வப்போது மசாஜ் செய்து வந்தால் எந்த பிரச்னைகளும் ஏற்படாது.

• வாசலின் அல்லது பெட்ரோலியம் ஜெல்லியை தூங்குவதற்கு முன்பாக பாதங்களில் தடவி வந்தால் பித்த வெடிப்பு பிரச்னையிலிருந்து விடுபடலாம். தினமும் பாதங்களில் மாய்ச்சரைசிங் க்ரீம்களை தடவிக் கொள்ளும்போது சருமத்தின் ஈரப்பதம் காக்கப்படுவதால் வெடிப்புகள் உண்டாகாது.

• மாய்ச்சரைசர்கள் பயன்படுத்தும்போது சருமம் சற்று ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். குளித்த உடன் ஈரப்பதம் இருக்கும் போதே மாய்ச்சரைசரை தடவ வேண்டும். அப்போது தான் இது தோலின் அடி ஆழம் வரை சென்று நல்ல பலனைக் கொடுக்கும்.

• ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் அல்லது வைட்டமின் இ ஆயிலும் பயன்படுத்தலாம். இவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் தடவி வரலாம் அல்லது இவற்றை மாற்றி மாற்றி ஒரு நாள் க்ரீம், ஒரு நாள் ஆயில் என்றும் தடவி வரலாம்.

• பொதுவாக, அனைவருக்குமே பாதத்தில் வெடிப்புகள் சிறிய அளவில் இருக்கும். இது இயல்பானதுதான். இத்தகையவர்கள் வெந்நீரில் உப்பு போட்டு கால்களை சுத்தப்படுத்துவது, க்ரீம்கள் தடவுவது போன்றவற்றை செய்யலாம். பாத வெடிப்பு அதிகமாக இருக்கும்போது ஒயிட் பீல்ட் க்ரீமை தேங்காய் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தலாம். யூரியா சேர்த்த மாய்ச்சரைசிங் க்ரீம்கள் போன்றவற்றை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால், வெடிப்பு அதிகமாகும் பட்சத்தில் கட்டாயம் மருத்துவரை சந்தித்து மருத்துவ ஆலோசனைகள் எடுப்பது நல்லது. அவரின் பிரச்னையின் அளவைப் பொறுத்து மருத்துவர் சிகிச்சை அளிப்பார்.

• குளிக்கும்போது கால் பாதங்களையும் நன்கு சுத்தப்படுத்த வேண்டும். ஃபுட் பிரஷ் அல்லது ஸ்க்ரப்பர் கொண்டு பாதங்களை தேய்க்கும் போது உலர்ந்த செல்கள் உதிர்ந்து அங்கே புது செல்கள் உருவாகும். ப்யூமிக் கற்கள் கொண்டும் தேய்க்கலாம். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்து வர வெடிப்பு மறையும். ஆழ்ந்த வெடிப்பு இருப்பவர்கள் ரொம்ப ஸ்க்ரப் பண்ணக் கூடாது.

• இரவில் வெந்நீரில் கல் உப்பு, எலுமிச்சைச்சாறு, தேன் போன்றவற்றை சேர்த்து அந்த நீரில் பாதங்களை சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். எலுமிச்சை சுத்தப்படுத்தும் இயல்புடையது என்பதால் பாதங்களில் உள்ள அழுக்குகளை வெளியேற்றிவிடும். உப்பு நோய்த் தொற்றுகளை தடுக்கும். கிருமிகளைக் கொல்லும். தேன் காயங்களை குணப்படுத்தும் தன்மை உடையது. எனவே, பாத வெடிப்புகள் குறையும்.

• பாதங்களின் சருமம் வறண்டு விடாமல் இருக்க, சுத்தப்படுத்திய பாதங்களை துடைத்துவிட்டு பாதங்களில் சோற்றுக்கற்றாழையின் ஜெல் எடுத்து தடவ வேண்டும். வீட்டிலே சோற்றுக்கற்றாழை இருந்தால் அதன் சோற்றினை எடுத்து நன்கு தண்ணீரில் அலசிய பின் அதனையும் தேய்க்கலாம். இதுபோன்று பாதங்களில் ஈரப்பதத்தைப் பாதுகாக்க மேலும் சில வழிமுறைகளையும் பின்பற்றலாம்.

• பாதங்களின் ஈரப்பதத்தை பாதுகாக்க வாசலைன், ஃபுட் கிரீம், மாய்ச்சரைசர்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதை விடவும் வீட்டில் நாம் சாதாரணமாக பயன்படுத்தும் விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்களில் எதாவது ஒன்றை ஒரு கிண்ணத்தில் சிறிதளவு ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சிறிது நேரத்தில் அது கெட்டியாக மாறி விடும். அதனை க்ரீம் போல தினமும் இரவில் படுக்க போகும் முன் பாதங்களில் தடவிக் கொள்ளலாம்.

• அகலமான பாத்திரத்தில் பொறுக்கும் சூட்டில் வெந்நீருடன் எலுமிச்சைச் சாறை கலந்து 15 நிமிடங்கள் பாதங்களை வைத்திருந்து பீர்க்கன் நாரைக் கொண்டு தேய்க்கவும். (நாட்டு மருந்து கடைகளில் இந்த பீர்க்கன் நார் கிடைக்கும்). இதனால் பாதங்களில் உள்ள அழுக்குகள், வெடிப்புகள் நீங்கி பாதம் பொலிவாக அழகாக இருக்கும். தினமும் இப்படி செய்தால் பாதத்தில் இருக்கும் கெட்ட செல்கள் நீங்கி பாதம் பளிச்சென்று இருக்கும்.

• வெந்நீருடன் சிறிது கல் உப்பு, கெமிக்கல் கலக்காத ஷாம்புவை (பேபி ஷாம்பு) பயன்படுத்தி மிதமான வெந்நீர் பதத்தில் கால் பாதத்தை 10 நிமிடம் மசாஜ் பண்ண வேண்டும், முடிந்தால் மெல்லிய ப்ரஷ் கொண்டு அழுக்கு போக பாதங்களைத் தேய்த்தால் இன்னும் நல்லது. மசாஜ்க்குப் பின் பாதங்களை ஈரம் போக சுத்தமான துணியில் துடைத்துவிட்டு கடுகு எண்ணெய் தேய்த்து 10 நிமிடம் மசாஜ் செய்தால் படிப்படியாக பாதவெடிப்பு நீங்கும். பாதத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

• கிளிஞ்சல் மெழுகு என்றொரு மருந்து நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அதனை விளக்கெண்ணெயுடன் கலந்து தடவலாம்.

• அதிகப்படியான வெடிப்புகளை நீக்க கிழங்கு மஞ்சளைப் பொடியாக்கி சுத்தமான விளக்கெண்ணெய் /நல்லெண்ணெயில் குழைத்து வெடிப்பு இருக்கும் இடங்களில் இரவு தடவி மறுநாள் காலை வெந்நீரில் கழுவி வந்தால் எரிச்சலும், வலியும் குறைவதோடு நாளடைவில் வெடிப்பும் மறைய தொடங்கும்.

* விளக்கெண்ணெய் /நல்லெண்ணெய் இரண்டுமே அதிக குளிர்ச்சிதரும் என்று நினைப்பவர்கள் எண்ணெயை இலேசாக சூடு செய்து பிறகு தடவலாம். அல்லது வேப்ப எண்ணெயையும் பயன்படுத்தலாம்.

• மருதாணி இலையுடன் கிழங்கு மஞ்சளைப் பொடியாக்கி அம்மி அல்லது மிக்ஸியில் வைத்து அரைக்கவும். இரவு நேரங்களில் உறங்க செல்வதற்கு முன்பு பாதங்களை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்து வெடிப்பு இருக்கும் இடங்களில் பற்று போடுங்கள். அவை காய்ந்ததும் சுத்தமாக கழுவி எடுங்கள். வாரத்துக்கு இரண்டு நாட்கள் இப்படிச் செய்துவந்தால் நாளடைவில் வெடிப்பு மறைய தொடங்கும்.

*குறிப்பு :* மருதாணி அதிக குளிர்ச்சியை உண்டாக்கும் என்பதால் இரவு முழுவதும் பாதத்தில் பற்று போட வேண்டிய தில்லை. குறிப்பாக உடல் குளிர்ச்சி உடையவர்கள் அதிகம் பயன்படுத்தும் போது ஜன்னி கண்டுவிடவும் வாய்ப் புண்டு. கவனமாக பயன்படுத்துங்கள்.

நம் நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு நாம் அனைவரும் வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுப்பது உடல் சூட்டினை குறைக்கும். அத்தோடு உடலின் ஈரப்பதமும் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் பாதங்களின் ஈரப்பதத்தை பாதுகாக்க வேண்டும். பாதுகாப்பான காலணிகளை அணிவதும் மிக அவசியம்.

  • 444
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங