-
- 3 friends

இன்றைய ராசி பலன்கள் - 7.4.2025
மேஷம்
கால்நடை வியாபாரத்தில் லாபம் மேம்படும். புதிய வாகனம் மற்றும் வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உருவாகும். மாணவர்களுக்கு உயர் கல்வி தொடர்பான புரிதல் அதிகரிக்கும். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் அனுகூலமாக முடியும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது உத்தமமாகும். வழக்கு சார்ந்த பணிகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். ஆசை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
ரிஷபம்
உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மிதுனம்
வெளியூர் பயணங்களால் புதிய அனுபவங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். கல்வி பணிகளில் புதிய கண்ணோட்டம் பிறக்கும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். வாடிக்கையாளர்களின் ஆதரவு மேம்படும். தானிய விற்பனையில் லாபம் உண்டாகும். தோல்வி விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கடகம்
வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். சிறுதூர பயணம் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான தைரியம் கூடும். எதிர்பாராத சில திருப்பங்கள் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
சிம்மம்
தன வருவாயில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். இயந்திர பணியில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். குடும்ப விவகாரங்களை பகிர்வதை குறைத்துக்கொள்வது நல்லது. உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். செய்யும் தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கன்னி
சமூகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் உண்டாகும். மனதளவில் தெளிவான சிந்தனைகள் பிறக்கும். செய்த தொழிலில் மேன்மை உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பயணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
துலாம்
சமூகம் சார்ந்த பணிகளில் புதுமையான சூழல் ஏற்படும். வியாபாரம் தொடர்பான சரக்குகளை விற்று லாபம் அடைவீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகம் சார்ந்த பணிகளில் தவறிய வாய்ப்புகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகளை குறைக்க முயல்வீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் மனதளவில் மாற்றத்தை உருவாக்கும். பயம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
விருச்சிகம்
வாழ்க்கைத்துணைவரின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உடல் தோற்றப்பொலிவில் சில மாற்றம் காணப்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். தேர்ச்சி பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தனுசு
பழைய பிரச்சனைகள் மீண்டும் தொடங்கும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். பேச்சுகளில் கனிவு வேண்டும். வியாபாரத்தில் புதிய முடிவுகளை தவிர்க்கவும். அதிகாரிகளிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். அனுபவம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மகரம்
புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். செயல்களில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணி நிமிர்த்தம் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் விவேகம் வேண்டும். திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கும்பம்
சுபகாரியம் சார்ந்த விரயங்கள் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆன்மிக காரியங்களால் மன அமைதி அடைவீர்கள். தொல்லை தந்தவர்கள் விலகி செல்வார்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பயனற்ற செலவுகளால் சேமிப்புகள் குறையும். பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மீனம்
உத்தியோகம் மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். கடன் தொடர்பான சில பிரச்சனைகள் குறையும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இழுபறி குறையும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·