-
- 2 friends

மஞ்சள் அருகம்புல் பரிகாரம்
ஒரு சிலருக்கு ஏனோ எதைத் தொட்டாலும் நஷ்டம் ஆகிக்கொண்டே இருக்கும்.எந்த தொழில் செய்தாலும் அதில் நஷ்டம் தான் கிடைக்கும். வீடு கட்ட வேண்டும் என்று ஆரம்பித்தால் அதுவும் பாதியிலே நின்று விடும் வீட்டில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் எல்லாம் தள்ளி போய் கொண்டே இருக்கும். கையில் உள்ள பணம், நகை எல்லாம் எப்படி போகிறது எதற்காக செலவாகிறது என்று தெரியாமல் போய்க் கொண்டே இருக்கும்.
இப்படி ஆன பிரச்சினை அடுக்கிக் கொண்டே போகும் அளவிற்கு இருந்தால்......
பிரச்சனைகளில் வெளிவர செய்யக் கூடிய மிக எளிய சாதாரணமான ஒரு பரிகாரம் தான் இந்த மஞ்சள் அருகம்புல் பரிகாரம்.
இந்த பரிகாரத்திற்கு தேவையானது மூன்றே பொருள் தான். அருகம்புல், மஞ்சள் கிழங்கு, மஞ்சள் நூல்.
இந்த பரிகாரத்தை செய்வதற்கு, காலையில் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து குளித்து முடித்த பிறகு உங்கள் பூஜை அறையில் விளக்கேற்றி உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு, இந்த மஞ்சளையும் அருகம்புல்லையும் ஒன்றாக வைத்து மஞ்சள் நிற நூலால் கட்டி பூஜை அறையில் வைத்து விடுங்கள் போதும்.எந்த ஒரு மங்கள காரியங்களிலும் இந்த மஞ்சள் இல்லாமல் இருக்காது. அதே போல் எந்த காரியம் தொடங்கினாலும் அதற்கு முழுமுதற் கடவுள் விநாயகர் அவருக்கு இஷ்டமான ஒரு பொருள் இந்த அருகம்புல் இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து இப்படி வைக்கும் பொழுது உங்களின் எந்தக் காரிய தடைகளையும் இது உடைத்து விடும்.
இதை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் இல்லை அருகம்புல் காய்ந்து விட்டால் மட்டும் அருகம்புல்லை மாற்றி வேறு அருகம்புல் வைத்துக் கொள்ளலாம். மஞ்சள் பூச்சி உடைந்து விட்டால் மட்டும் மாற்றுங்கள் இல்லை என்றால் அதை மஞ்சளிலே வைத்து கட்டலாம் இந்த அருகம்புல்லை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள் மஞ்சளை நீங்கள் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த எளிய பரிகாரத்தை நீங்கள் செய்து வைத்தாலே போதும் உங்களின் தடைபட்ட சுபகாரியங்கள், தொழில், வியாபாரம் அனைத்துமே சிறந்து உங்களுக்கு கை மேல் பலன் அளிக்கக்கூடிய தாக இருக்கும்.
இந்த எளிய பரிகாரத்தை செய்து நீங்கள் தொடங்கும் அனைத்து காரியத்திலும் வெற்றி அடைந்து நல்ல ஒரு வளமான வாழ்க்கையை வாழுங்கள..sv

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·