-
- 3 friends

இன்றைய ராசி பலன்கள் - 6.4.2025
மேஷம்
புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் கைகூடும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். நீர்நிலை சார்ந்த பணிகளில் சற்று கவனம் வேண்டும். அதிரடியான செயல்கள் மூலம் போட்டிகளை சமாளிப்பீர்கள். புதிய உணவுகளில் கவனம் வேண்டும். விவசாய பொருட்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
ரிஷபம்
முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். சிறுதூர பயணம் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வியாபாரத்தின் போக்கினை மாற்றி அமைப்பீர்கள். பணி நிமிர்த்தமான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கடகம்
வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் உள்ள தடைகளை அறிவீர்கள். பொது வாழ்வில் மாறுபட்ட சூழல்கள் உண்டாகும். விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தற்பெருமையான பேச்சுக்களை தவிர்க்கவும். எதிலும் முழுமை இன்றி ஈடுபடுவீர்கள். குண நலன்களில் மாற்றம் காணப்படும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
சிம்மம்
எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாகனங்களால் சில விரயங்கள் உண்டாகும். வியாபாரம் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். பயனற்ற கருத்துக்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கன்னி
தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளை முடிப்பீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் மீதான ஆர்வம் மேம்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் பிறக்கும். மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
வீடு, மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உருவாகும். பேச்சுவன்மை மூலம் காரியசித்தி உண்டாகும். சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தினர் ஆதரவாக செயல்படுவார்கள். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
விருச்சிகம்
தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். முன் யோசனை இன்றி செயல்படுவதை தவிர்க்கவும். தீர்த்த யாத்திரைகளில் ஆர்வம் ஏற்படும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் கிடைக்கும். புதிய துறை சார்ந்த தேடல்கள் உருவாகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
தனுசு
மறைமுகமான எதிர்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளால் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். பிறரை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வெளியிடங்களில் அமைதி காக்கவும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். சிந்தித்து செயல்படவேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மகரம்
இலக்கியம் சார்ந்த பணிகளில் கற்பனை வளம் மேம்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். கணவன், மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். மனதில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கும்பம்
முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். யோகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மீனம்
மனதில் புதுவிதமான தேடல்கள் உருவாகும். உறவினர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். இலக்கியப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உயர் கல்வியில் தெளிவுகள் பிறக்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·