-
- 3 friends

இன்றைய ராசி பலன்கள் - 5.4.2025
மேஷம்
மனதில் தன்னம்பிக்கை மேம்படும். சிறுதொழில் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். அக்கம், பக்கம் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். பொருளாதார முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
ரிஷபம்
நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் அனுபவம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
மிதுனம்
இனம்புரியாத சிந்தனைகள் மூலம் தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். சமூகப்பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். பணிகளில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். ரசனையில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். எதிர்பாராத திடீர் வாய்ப்புகள் மூலம் புதுமை பிறக்கும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கடகம்
கடன் சார்ந்த செயல்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். செல்வாக்கை வெளிக்காட்டுவதற்காக செலவுகள் செய்வீர்கள். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது மன அமைதியை தரும். வெளியூர் பயணத்தால் உடலில் சோர்வு உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
சிம்மம்
புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அடமான பொருட்களை மீட்பதற்கான சூழல் அமையும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். கலைப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கன்னி
பெரியோர்களின் ஆலோசனைகளால் செயல்களில் இருந்துவந்த குழப்பம் விலகும். புதுவிதமான சிந்தனைகள் மூலம் சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் வேகத்தை விட விவேகத்தை கடைபிடிக்கவும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும், புரிதலும் மேம்படும். உறவினர்கள் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். வியாபார பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
துலாம்
எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். துணைவர் வழி உறவினர்களால் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். வரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். வியாபார பணிகளில் விவேகம் வேண்டும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
விருச்சிகம்
எண்ணிய பணிகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். வெளியூர் பயணத்தில் புதிய அனுபவம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செயல்களில் தடைகள் உண்டாகும். குடும்ப விஷயத்தை பகிர்வதை தவிர்க்கவும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
தனுசு
குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் தோன்றும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். வெளிவட்டார நட்பு மேம்படும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபகரமான சூழல் அமையும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்
மகரம்
தன வரவுகள் அதிகரிக்கும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அணுகுலம் ஏற்படும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் தேவைகள் நிறைவேறும். எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். தாமதம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கும்பம்
பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உருவாகும். அரசு பணிகளில் அனுகூலம் உண்டாகும். செயல்பாடுகளில் பதற்றமின்றி செயல்படவும். வியாபாரம் சார்ந்த பணிகளில் பொறுப்புகளும், அலைச்சலும் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். அனுபவம் அதிகரிக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மீனம்
வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். எதிர்காலம் தொடர்பான சில பணிகளை மேற்கொள்வீர்கள். தொழில்நுட்ப செயல்பாடுகள் மீது ஆர்வம் உண்டாகும். திட்டமிட்ட பணிகளில் சில மாற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·