·   ·  1407 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

நெகட்டிவ் எனர்ஜிகள் சேராமல் வீடு கோவிலாக மாற எளிய வழி

வீடு கோவில் போன்றவற்றை கட்டுவதற்கு நாம் அந்த காலத்தில் இருந்தே சில வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். அதுவே தற்காலத்தில் வாஸ்து முறைகள் என்று பிரபலமாக இருக்கிறது.

வாஸ்து என்பது அந்தந்த இடங்களில் அதற்கான பொருள்களை சரியான முறையில் அமைப்பதே. இதன் மூலம் வீட்டில் தேவையற்ற நெகட்டிவ் எனர்ஜிகள் தங்காமல் வீடு எப்போதும் நல்ல நேர்மறை ஆற்றலுடன் இருக்கும்.

சில நேரங்களில் நாம் பார்த்து பார்த்து செய்தாலும் எங்கோ சில இடங்களில் தவறு நேர்ந்து விடும். வீடு கட்டிய பிறகு நாம் செய்யும் சிறு தவறுகளாலும் இந்த நெகட்டிவ் எனர்ஜி நம் வீட்டில் குடிக்கொண்டு விடும்.

அவற்றை அகற்றக் கூடிய எளிய ஒரு வாஸ்து குறிப்பு பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். வீட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜி போக நம் வீட்டில் செய்யக் கூடிய மிகப்பெரிய தவறு. இறந்த முன்னோர்களின் புகைப்படங்களை பூஜை அறையிலோ அல்லது வீட்டில் உள்ளே நுழையும் இடத்தில் வைப்பது தான்.

அப்படி நீங்கள் வைத்திருந்தால் அதை எடுத்து விடுங்கள். இறந்தவரின் புகைப்படங்களை எப்போதும் தெற்கு பார்த்தவாறு அதுவும் தனியாகத் தான் மாட்ட வேண்டும்.

பூஜை அறையில் எப்போதும் காய்ந்த பூக்களை வைத்திருக்க வேண்டாம். ஆகையால் பூக்களை வைத்து பூஜை செய்த பிறகு வாடிய உடனே பூஜை அறையில் இருந்து அகற்றி விடுங்கள்.

பூஜை அறையில் சங்கு வைத்து வழிபடுவது நல்லது. அதுவும் பூஜை செய்த சங்கு வைத்து வழிபடுவது மிகவும் நல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சங்குகளை வைத்து வணங்க வேண்டாம்.

சனி பகவானின் படமோ அல்லது சிலையோ வீட்டில் வைத்து வணங்கக் கூடாது. இது நெகட்டிவ் எனர்ஜியை அதிகரிக்க கூடியது. இத்துடன் உடைந்த சிலைகள், கிழிந்த பாழடைந்த கடவுளின் திருவுருவ படங்களை வைத்து வணங்க கூடாது.

பூஜை அறையை எப்போதும் சுத்தமாகவும் நறுமணத்துடன் வைத்திருக்க வேண்டும். இது வீட்டிற்கு நல்ல ஒரு நேர்மறை ஆற்றலை ஏற்படுத்தும்.அதே போல் வீட்டில் உடைந்த பர்னிச்சர்கள் வாசல் கதவுகள் போன்றவற்றை உடனே அப்புறப்படுத்த வேண்டும் அல்லது சரி செய்து விட வேண்டும்.

வரவேற்பு அறையில் அலங்காரத்திற்கென பிளாஸ்டிக் குவிக்கிறார்கள்.இதன் மூலம் வீட்டில் சனியின் ஆதிக்கம் தான் ஏற்படும். பர்னிச்சர் கதவு போன்றவற்றையெல்லாம் மரத்திலால் ஆனதாக இருந்தால் நல்லது.

வரவேற்பறையில் நாம் மாட்டி வைக்கும் புகைப்படங்களும் வீட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜி அதிகப்படுத்தும் சோகமான நிகழ்வுகளை வெளிப்படுத்தும் எந்த விதமான படங்களையும் மாட்டக் கூடாது.

இயற்கை காட்சிகள், ஆடும் மயில், ஓடும் குதிரை இப்படியான நேர்மறை ஆற்றலை அதிகரிக்க கூடிய படங்களாக வரவேற்பறையில் மாட்டி விடுவது நல்லது. அதே போல் வரவேற்பு அறையில் மணி பிளான்ட், ஸ்பைடர் பிளான்ட் ,அள்ளிச் செடி போன்றவற்றை வளர்ப்பது காற்றை சுத்திகரித்து தருவதுடன் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

இந்த செடிகள் வீட்டில் வைப்பதன் மூலம் வீட்டில் நல்ல நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் கற்றாழை போன்றவற்றை வளர்க்கலாம் என்று சொல்லப்படுகிறது.   வீடு கோவில் போன்றது. அதை பராமரிக்கும் விதத்தில் பராமரித்ததால் கோவிலாக மாறும் இல்லை என்றால் அதுவே நமக்கு தீங்காக மாறி விடும்.

இந்த சின்ன சின்ன விஷயங்களை சரி செய்து விட்டாலே நமக்கு ஏற்படக்கூடிய பெரிய நஷ்டங்களை தவிர்த்து விடலாம் இதற்கென அதிக பணம் செலவழித்து வாஸ்து பார்த்து கொண்டிருக்க தேவையில்லை.

  • 270
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய