·   ·  1465 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

கமகமவென்று ஆரோக்கியமான பொரி அல்வா

முன்பெல்லாம் இனிப்பு என்றாலே பாயாசம் கேசரி போன்றவை தான் ஞாபகத்திற்கு வரும். இப்போதெல்லாம் நிமிடத்தில் செய்யக்கூடிய பல ஸ்வீட் ரெசிபிகள் வந்து விட்டது. எப்படியும் ஆயுத பூஜைக்கு வாங்கிய பொறி நிச்சயம் மீதம் இருக்கும் அதை வைத்து எப்படி ஒரு அல்வா செய்வது என பார்க்கலாம்.

முதலில் ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு கப் பொரியை சேர்த்து ஐந்து நிமிடம் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள். பொரி ஊறிக் கொண்டிருக்கும் நேரத்தில் அடுப்பை பற்ற வைத்து கடாயை சூடு படுத்தி கொள்ளுங்கள்.

முக்கால் கப் வெல்லத்தை சேர்த்து அரைக்கப் தண்ணீர் ஊற்றி வெல்லம் கட்டிகள் இல்லாமல் கரைந்து வரும் வரை கொதிக்க விடுங்கள். வெல்லம் கரைந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். சூடு ஆறட்டும் இந்த அல்வா செய்வதற்கு வெல்லம் பாகுபதம் வர வேண்டிய அவசியம் கிடையாது.

கேரட்டை துருவி கால் கப் வரும் வரை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பொரியை எந்த கப்பில் அளந்தீர்களோ அதே கப்பில் மற்ற பொருள்களையும் அளந்து கொள்ளுங்கள் அளவு சரியாக இருக்கும். பொரியை தண்ணீர் இல்லாமல் சுத்தமாக வடித்து விட்டு அதை மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பொரி நன்றாக ஊறி இருக்க வேண்டும். பொரி ஊறா விட்டால் அல்வா சரியான பதத்திற்கு வராது. மிக்ஸி ஜாரில் சேர்த்த பொரியுடன் துருவிய கேரட்டையும் கொதிக்க வைத்து ஆற வைத்த வெல்லத் தண்ணீரையும் வடிகட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நல்ல பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்றக் கூடாது.

நீங்கள் அரைக்கும் இந்த பேஸ்ட் திப்பி திப்பியாகவும் இருக்கக் கூடாது.   முந்திரியை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். முந்திரி நன்றாக சிவந்து வந்தவுடன் கோதுமை மாவை சேர்த்து நன்றாக சிவந்து வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அரைத்தவைகளை இதில் சேர்த்து கை விடாமல் கலந்து கொள்ளுங்கள்.

ஏலக்காய் தூளையும் சேர்த்து விடுங்கள். இந்த கலவையில் நாம் கேரட் சேர்த்து இருப்பதால் நிறத்திற்காக வேறு எந்த பொருளையும் சேர்க்க வேண்டாம். அது மட்டும் இன்றி கேரட் சேர்ப்பதால் அல்வாவின் சுவை இன்னும் நன்றாகவே இருக்கும். அரைத்த விழுது அனைத்தையும் சேர்த்த பிறகு அடுப்பை மீடியம் ஃபிளேமில் வைத்து 10 நிமிடம் வரை கைவிடாமல் கலந்து கொண்டே இருங்கள்.

மீதமிருக்கும் இரண்டு ஸ்பூன் நெய்யையும் இடையிடையே சேர்த்துக் கொள்ளுங்கள். பத்து நிமிடத்திற்குள்ளாகவே இந்த பேஸ்ட் நல்ல ஒரு அல்வா பதத்திற்கு வந்து விடும். அதன் பிறகு அதை எடுத்து வாழை இலையில் வைத்து கட்டி விடுங்கள். ஐந்து நிமிடம் கழித்து வாழையிலை பிரித்துப் பாருங்கள். நல்ல சுவையுடன் கமகமவென்று ஆரோக்கியமான பொரி அல்வா தயாராகி இருக்கும்.

இதில் சேர்த்திருக்கும் பொருட்கள் அனைத்துமே ஆரோக்கியமானது தான் இனிப்பே சாப்பிடக்கூடாது என்பவர்கள் கூட இந்த அல்வாவை தாராளமாக சாப்பிடலாம். நல்ல சுவையுடன் ஆரோக்கியமான ஒரு உணவை தயாரித்து தந்து மகிழ்ச்சியும் நிச்சயம் உங்களுக்கு இருக்கும்.

  • 597
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய