-
- 2 friends
கடனை அடைக்க நாம் செய்ய வேண்டிய வழிபாடு
கடனை அடைக்க நாம் செய்ய வேண்டிய வழிபாடு முருகன் வழிபாடு. பிறவி கடனையும் நம்மோடு வைத்துக்கொள்ளக்கூடாது. வாங்கிய கடனிலும் பாக்கி வைத்துக் கொள்ளக் கூடாது. நாளைய தினம் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கக்கூடிய கந்த சஷ்டி விரதத்தின் நான்காவது நாள்.
மற்ற 6 நாட்களும் உங்களால் வழிபாட்டை மேற்கொள்ள முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. நாளைய தினம் முருகப்பெருமானை வழிபாடு செய்யுங்கள். பின் சொல்லக்கூடிய திருப்புகழ் பாடலைப் படியுங்கள். நிச்சயம் உங்களுடைய கடன் சுமையை அந்த முருகப்பெருமான் தீர்த்து வைப்பார்.
முருகப்பெருமானுக்கு உகந்த தானியம் துவரம் பருப்பு. உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு சின்ன கிண்ணத்தில் துவரம் பருப்பு போட்டு முருகனின் முன்பாக வைத்து விடுங்கள். முருகனுக்கு வெற்றிலை தீபம் ஏற்றி வழிபாடு செய்வது மிக மிக சிறப்பு. வெற்றிலை தீபம் வழிபாடு வெற்றியை கொடுக்கும்.
6 வெற்றிலை வாங்கி, 6 வெற்றிலைக்கு மேல் ஒவ்வொரு மண் அகல் விளக்கு வைத்து தீபம் ஏற்றலாம். முடியாதவர்கள் ஒரே ஒரு மண் அகல் விளக்கு வைத்து, தீபம் ஏற்றி விடுங்கள். ‘ஓம் சரவணபவ’ மந்திரத்தை 6 முறை சொல்லுங்கள். முருகனுக்கு செவ்வரளி பூக்களை வாங்கி வையுங்கள்.
இரண்டே இரண்டு செவ்வாழைப்பழங்களை வைத்துவிட்டு, மனக்க மனக்க சாம்பிராணி தூபம் போட்டு விட்டு, முருகனின் முன்பு அமர்ந்து கொள்ளுங்கள். என்னுடைய கடன் பாரம், என்னால் தாங்க முடியவில்லை. கடன் சுமையை குறைக்க நீ தான் எனக்கு வழியை காட்ட வேண்டும் முருகா என்று உள்ளம் உருகி வேண்டி இந்த பாடலை படியுங்கள்.
திருப்புகழ் 90 வது பாடல் மாலோன் மருகனை, மன்றாடி மைந்தனை, வானவர்க்கு மேலான தேவனை, மெய்ஞான தெய்வத்தை மேதினியிற் சேல்ஆர் வயல்பொழில், செங்கோடனைச் சென்று, கண்டு, தொழ, நாலாயிரங்கண் படைத்திலனே அந்த நான்முகனே ! மனம் உருகி முருகப்பெருமானை நினைத்து இந்த பாடலை ஒரே ஒரு முறை பாடி இறுதியாக தீப தூப ஆராதனை காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
செவ்வாழை பழத்தை யாருக்கேனும் தானம் கொடுக்கலாம். பசு மாட்டிற்கு கொடுக்கலாம். எதுவுமே முடியாது என்றால் பிரசாதமாக நீங்களே சாப்பிட்டுக் கொள்ளலாம். அந்த துவரம் பருப்பு இருக்கிறதல்லவா அதை எடுத்து, அதோடு கூடுதலாக துவரம் பருப்புகளை சேர்த்து, ஒரு சாம்பார் சாதம் செய்யுங்கள்.
பத்து பேருக்கு உங்கள் கையாலேயே நெய் சேர்த்து, செய்த சாம்பார் சாதத்தை அன்னதானம் செய்யுங்கள். ஏழைக்கு இந்த சாதம் போய் சேரும்படி பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கையாலேயே செய்யும் இந்த அன்னதானம், உங்களுடைய கோடி கடனை கூட எளிதில் அடைக்க கூடிய சக்தி வாய்ந்தது.
நம்பிக்கை உள்ளவர்களுக்கு மேல் சொன்ன இந்த வழிபாடு நிச்சயம் அடுத்த கந்த சஷ்டி விரதம் வருவதற்குள், நல்ல பலனைத் தரும். எவ்வளவு கடனாக இருந்தாலும் அதை நீங்கள் அடுத்த வருடத்திற்குள் திருப்பிக் கொடுத்து விடுவீர்கள். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·