- · 5 friends
-
I
பத்தே நிமிடத்தில் சுவையான வீட் அல்வா
பத்தே நிமிடத்தில் ரொம்ப ரொம்ப சுவையாக நாவில் கரையக் கூடிய ஒரு ஸ்வீட் எப்படி செய்வது என்பதைத் தெரிந்துக் கொள்வோம். ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவு இருந்தால் சட்டென வீட் அல்வா செய்து அசத்தி விடலாம்.
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பேனில் ஒரு கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். தண்ணீர் கொதித்து சர்க்கரை கரைய வேண்டும்.
ஒரு ஐந்து நிமிடம் சர்க்கரை நன்கு கரைந்து வந்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். இப்பொழுது மற்றொரு பேனில் கால் கப் அளவிற்கு பாதி நெய்யும், பாதி எண்ணெயும் சேர்த்து கொள்ளுங்கள்.
லேசாக காய்ந்ததும் ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவு சேர்த்து நன்கு கிண்டி விடுங்கள். நெய்யுடன் சேர்த்து கோதுமை மாவு பச்சை வாசம் போக நன்கு கலந்து விட வேண்டும். இந்த சமயத்தில் நீங்கள் பொடித்து தூளாக்கி வைத்துள்ள ஏலக்காய் தூள் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
நன்கு கலந்து விட்டு தயார் செய்து வைத்துள்ள சர்க்கரை பாகை ஒரு முறை வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை பாகில் இருக்கும் நுண் துகள்கள் நீங்கும்.
பின்னர் மூன்று பங்காக கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரை தண்ணீரை ஊற்றி கோதுமை மாவை கிண்டி விட வேண்டும். நீங்கள் பாகை ஊற்றும் பொழுதே கோதுமை மாவு அனைத்தையும் உறிஞ்சிக் கொண்டு அல்வா பதம் போல பேனில் ஒட்டாமல் திரண்டு வரும்.
எல்லா பாகையும் சேர்த்து கிண்டியதும், நெய்யில் வறுத்த முந்திரி பருப்புகளை பொடி பொடியாக நறுக்கி தூவி, கை பொறுக்கும் சூடு வந்தவுடன் அப்படியே சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வையுங்கள்.
ரொம்ப ரொம்ப சுலபமாக பத்து நிமிடத்தில் நாவில் கரையக் கூடிய அசத்தலான வீட் ஹல்வா இப்படி ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்க, இனி அடிக்கடி உங்க வீட்டில் குழந்தைகளும், பெரியவர்களும் குழந்தை போல கேட்டு அடம் பிடிக்க துவங்கி விடுவார்கள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·