·   ·  1465 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

தூங்கும் முறையும், தூங்கும் நேரத்தையும் வைத்து தான் நமது ஆரோக்கியம் மேம்படும்

தூங்கும் முறையும், தூங்கும் நேரத்தையும் வைத்து தான் ஒருவர் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறார் என சொல்ல முடியும். ஒருவர் சரியான நேரத்திற்கு சரியான முறையில் தூங்குகிறார் என்றால் கண்டிப்பாக அவர் உடல் ஆரோக்கியத்திலும், மனநலத்திலும் சிறந்தவராக இருப்பார்.

அந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்கும் இந்த தூங்கும் முறை எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கக் கூடாது? என்பதை பார்க்கலாம். பொதுவாக தூங்கும் முறை பல்வேறு விதங்களில் இருந்தாலும், அதிகமாக தூங்குபவர்கள் ஒருக்களித்தும் அல்லது மல்லாக்க படுத்தும் அல்லது குப்புறப்படுத்தும் தூங்குவார்கள்.

ஒரு சிலர் உடலை சுருக்கிக் கொண்டும், காலை அகட்டிக் கொண்டும் அல்லது படுக்கையில் இருந்து காலை தொங்கவிட்டபடியும் தூங்குவார்கள். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான முறையில் தூங்குவது வழக்கம். வலது புறம் ஒருக்களித்து படுக்கும் போது சீரான ஆக்சிஜன் உங்களுக்கு கிடைக்காமல் போகலாம், இதனால் உடல் வேகமாக குளிர்ந்து, செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். வாய்வு தொல்லை, வயிற்று உப்பசம் போன்ற பிரச்சனைகளை அனுபவிக்க நேரிடும்.

குப்புறப்படுத்து தூங்கும் பொழுது வயிற்றுப் பகுதியில் அழுத்தம் உண்டாகும், இதனால் இரைப்பை தன் வேலையை சரியாக செய்யாது. அஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்தும். மல்லாக்க படுத்து கொண்டு கால்களை அகற்றி வைத்து படுப்பவர்களுக்கும் சுவாச பிரச்சனைகள் ஏற்படும், இதனால் குறட்டை தொந்தரவும் உண்டாகிறது.

கால்களை தொங்க விட்டபடி அல்லது உடலை சுருக்கிக் கொண்டு தூங்குபவர்களுக்கு மேற்கூறிய எல்லா பிரச்சனைகளும் ஏற்படும். சரியான முறையில் தூங்காமல் போவதால் தான் எழுந்ததும் சிலருக்கு சுறுசுறுப்பு இல்லாமல், உடல் முழுவதும் வலி இருப்பது போல உணர்வு இருக்கும். வெறும் தரையில் படுப்பது, தலையணை இல்லாமல் படுப்பது போன்றவற்றையும் செய்யக் கூடாது. இவர்களுக்கு கழுத்து சுளுக்கு, முதுகு பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் தசைப்பிடிப்பு, முதுகு தண்டுவடத்தில் வலி போன்ற பிரச்சனைகளும் இருக்கும்.

ஒரு மனிதன் சரியான முறையில் தூங்குவது என்பது நேராக மல்லாக்கப்படுத்து தூங்கும் பொழுது கால்கள் ஒட்டியபடி, கைகள் உடம்பின் மீது வைத்து நல்ல தலையணையின் மீது சரியாக தலையை வைத்து படுத்து உறங்க வேண்டும். இப்படி உறங்கும் பொழுது உடலில் ஆக்சிஜன் சரியாக சென்றடையும். இதனால் ரத்த ஓட்டமும் உடலில் சீராக வேலை செய்து உள்ளுறுப்புகளை பாதுகாக்கும்.

ஒருக்களித்து படுக்கும் பொழுது இடது புறம் திரும்பி படுக்க வேண்டும். கால்களை நீட்டியபடி, இரு கைகளையும் தலைக்கு அருகில் வைத்து கொண்டு படுக்கலாம். கால்களுக்கு அருகில் தலையணை வைத்து வலது காலை மட்டும் தூக்கி தலையணை மீது வைத்தும் படுத்துக் கொள்ளலாம். இதனால் உடலுக்கு பிராணவாயு முழுமையாக கிடைக்கும். உள்ளுறுப்புகள் சரியாக வேலை செய்யும். காலையில் எழுந்திருக்கும் பொழுது உடல் வலி இல்லாமல், சுறுசுறுப்பாக உடம்பு வேலை செய்யும்.

தூங்கும் பொழுது நம்முடைய உடல் தன்னை தானே சீர் செய்து கொள்ளும். இது ஒரு மெக்கானிசம் போன்ற அமைப்புதான். இரவு நேரத்தில் மூளைக்கும், கண்களுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும். ஒலி மற்றும் ஒளி போன்றவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும். மனதை லேசாக்கி, உடல் உள் உறுப்புகளுக்கு சீரான ரத்த ஓட்டத்தை பாய செய்து, முழுமையான ஆக்சிஜனை கொடுத்து, ஒவ்வொரு நாளையும் புத்தம் புதியதாக உங்களுக்கு கொடுக்க சரியான முறையில் தூங்கி பழகுங்கள்.

  • 770
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய