Category:
Author:
ஸாலிஹ் அஸீம்
Created:
Updated:
I
விடிந்தது முடிகிறது
பொழுது
மடிந்து புதைகிறது
கனவு
விடியலின் புலர்வில்
மடிந்து விழுகிறது
மகிழ்ச்சி மட்டுமே
ஏமாற்றங்களின்
கைக்குலுக்கள்கள்
நம்பிக்கை துரோகங்கள்
ஏமாற்றங்களின்
ஏர்பிடிப்புக்கள்
தினமும் சந்திக்கும்
சகோதரர்கள்
மாற்றங்கள் துரு
நாற்றங்களாய் வீசுகிறது
திட்டாங்கள்
சதி வலைகளை
பின்னுகிறது
அன்பானவர்கள்
அரக்கர்களாகி விட
அதிர்ச்சி கிடங்கில்
சவமாய் விழுகிறோம்
வாழும் எண்ணம்
வாடி விழ
லட்சியங்கள்
மூச்சைடைத்து
முகவரி தொலைக்கிறது