Ads
 ·   ·  19 poems
  •  ·  6 friends
  • S

    N

    R

    7 followers

பெண்

உன்னை நான்

மதிக்கிறேன்

அதனால் நான்

பேசாமல்

இருக்கிறேன்

பெண் என்றால்

பெருமைக்குரியவளே!

நானும் பெருமையாக

பேசுவேன்

நீயும் யாரையும்

இகழ்ந்து பேசாதே!



உன்னிடம்

திறமையுண்டோ?

செய்து காட்டு

மற்றவர்களை

புகழ்ந்து காட்டு

புண்பட பேசாதே!

நீயும் ஒரு பெண்ணே!

பெண்ணின் பெருமை

தாய்மையே!

தாய்மையுனக்குமுண்டு

தப்பாய் பேசாதே!



தனித்திறமைகளை

வெளிக்கொண்டு வர

களம்பலவுண்டு

ஆடு,விளையாடு

உன்னைப்போற்ற

பலர் வருவார்

நீ பொறாமை

கொள்ளாதே பெண்ணே!



பொறாமையென்பது

வெற்றுத்தாள்

இதில் ஏதாவது

எழுது

பொறாமை நீங்க

நீயும் முயற்சி செய்

யாரையும் பிரிக்க

நினைப்பதும்

உன்னைப்பிரிவதும்

இதில் மகிழ்ச்சியும்

இகழ்ச்சியும்

உனக்கே சொந்தம்...



பத்தினியாள் செய்வினைக்கு

பழிவாங்க எண்ணாமல் 

புத்தகம்தனை எழுதி

புத்திதனைப்புகட்டுகிறேன்

இப்படியும்

பெண்கள் இப்புவியில்

இருக்கிறார்கள்

தப்பிடுங்கோ காளையரே

தப்பிவிட்டோம்

நாமெல்லோ!


  • 1197
  • More
Comments (0)
Login or Join to comment.
Ads
Ads