கவிதை
Latest Poems
 •  · 
 •  · beesiva
உன்னை நான்மதிக்கிறேன்அதனால் நான்பேசாமல்இருக்கிறேன்பெண் என்றால்பெருமைக்குரியவளே!நானும் பெருமையாகபேசுவேன்நீயும் யாரையும்இகழ்ந்து பேசாதே!உன்னிடம்திறமையுண்டோ?செய்து காட்டுமற்றவர்களைபுகழ்ந்து காட்டுபுண்பட பேசாதே!நீயும் ஒரு பெண்ணே!பெண்ணின் பெருமைதாய்மையே!தாய்மையுனக்குமுண்டுதப்பாய் பேசாதே!தனித்திறமைகளைவெளிக்கொண்டு வரகளம்பலவுண்டுஆடு,விளையாடுஉன்னைப்போற்றபலர் வருவார்நீ பொறாமைகொள்ளாதே பெண்ணே!பொறாமையென்பதுவெற்றுத்தாள்இதில் ஏதாவதுஎழுதுபொறாமை நீங்கநீயும் முயற்சி செய்யாரையும் பிரிக்கநினைப்பதும்உன்னைப்பிரிவதும்இதில் மகிழ்ச்சியும்இகழ்ச்சியும்உனக்கே சொந்தம்...பத்தினியாள் செய்வினைக்குபழிவாங்க எண்ணாமல் புத்தகம்தனை எழுதிபுத்திதனைப்புகட்டுகிறேன்இப்படியும்பெண்கள் இப்புவியில்இருக்கிறார்கள்தப்பிடுங்கோ காளையரேதப்பிவி
 •  · 
 •  · beesiva
கருவறையினுள்ளேமடக்கி நீ இருந்த போதும் கை வைத்துப் பார்த்த வேளை உன் அசைவு காணாத போது துடித்து தான் போனாள்தன் துடிப்பால் உனக்கு உயிர் தந்து விட்டாள். மரணவலி சுமந்து மழலை உன்னைப் பெற்ற பின்னர் மயங்கி அவள் கிடந்த போதும்மனம் துடிக்கும் பாரு உன் குரல் கேட்க தானே. வயிற்றை கிழித்த போதுவலி அவளை தாக்கும்அவள் மடியும் உன்னை தாங்கும் அவள் மார்பும் உணவை ஊட்டும் .கத்தி கொண்ட காயங்களை உன்பிஞ்சு கால்கள் உதையும் போது பட்டு போன்ற பாதங்களுக்கு முத்தமொன்று தந்துசுகமென தாங்கிடுவாள் .சிறுநீர் கழித்து விட்டால்சிறிதும் நீ தூங்க மாட்டாய் அர்த்த ராத்திரியில் அழுது ஆர்ப்பரிப்பாய் துடித்துப்போய் எழுந்திடுவாள் துயரத்தை போக்கிடுவாள். வாய் திறந்து பேசாத வயதினில் உன் அசைவுகளை மொழி பெயர்த்து வேண்டிய அனைத்தையும் செய்திடுவாள்.
 •  · 
 •  · beesiva
மெய் சொல்லும்வாயில்பொய் அடிக்கடிவந்தால்,வாய்மைவெறுமையே!..உழைப்போன்உறங்கினால்ஊர் கோவில்உண்டியலும்உண்டிடும்வாயும் வயிறும்வெறுமையே!..பத்திரிகைத்தாளில்செய்தியின்றிதணிக்கைசெய்தால்சுதந்திரமில்லாவார்த்தைகளும்எழுத்துக்களும்வெறுமையே!...வைக்கோல்பட்டடைக்குள்வைத்தவிதை நெல்லைதிருடன்திருடினால்வயல் வெளியும்பசுமைகாணாவெறுமையே!....பந்திக்குமுந்தாமல்கடைசிவரைஇருந்துவிட்டால்பானையில்சோறில்லை..அங்கும்வெறுமையே!...மழைநீரைகுளம் கட்டிசேமிக்காமல்கைகட்டி நின்றால்மாரிகாலத்தில்கொட்டிய மழைநீரும்காய்ந்துவெறுமையே!....பஞ்சணையில்நெஞ்சணையின்றிபத்தினிப்பெண்படுத்துறங்கினால்அவள்உள்ளமும் உயிரும்வெறுமையே!கையேந்திபிச்சைகேட்கும்தாயில்லா குழந்தைக்குதானம் தர்மம்கொடுக்காவிட்டால்அவர்கள்வயிறும் வெறுமையே!
 •  · 
 •  · beesiva
ஓடித்திரிந்த சீருடைக் காலம்.பாடித்திருந்த பள்ளிக் கூடக் காலம்.பருவம் கலைந்து உருவம் மாறிய காலம்.சர்வத்தில் நிமிர்ந்திட கற்கை நெறிக் காலம்..சுமைகள் அறியாத சுதந்திரக் காலம்.சம தர்மம் நிலைத்த இனிமைக் காலங்கள்.வித்தகராகிட புத்தகப் பைகள் முதுகினில் சுமந்த சுகமான காலங்கள்..நட்பின் பிடியில் சிரிச்ச காலம்நீ, நான் எனும் பேதமை அறியாத காலம்..எல்லாமே இன்று கனாக்காலம்...காண்பவர் யாவர்க்கும் கஸ்ட காலங்களாம்..கடந்த காலங்கள் திரும்பிடாக் காலங்கள்.வரும் காலங்கள் ஏனோ விரும்பிடாக் காலமானது.
அப்பா...!
 •  · 
 •  · beesiva
காட்டிக் கொள்ளாத பூட்டிய அன்பினைஈட்டிய வெற்றிகள் கண்டு புழுகாமல்பூரிக்கும் பெரு மகன்..!பழுதாகாமல் இருந்திட விழுதான உந்தனைவிரட்டி விரட்டி படி படி என தினம்பாசப் பந்தாடியவன்.!பார்வையும் உறுமலும் உன் பார்வைக்கு விரும்பாத வில்லனாய் வெறுமனே நடிப்பால்புடம் போட்டவன்..தடம் மாறிய வேளைகளில் வேதனையால்நொந்தழுதவன்தனக்கு எட்டாத தூரங்களை எட்ட வைத்து வளர்த்தவன்.!உயர் நிலை தொட்டதும் ஓரமாய் ஒதுங்கிஈரமான வார்த்தைகளுக்குதவமிருப்பவன்.!நேசி!  பூசி!  யோசி ! வாசி அவர் வாழ்க்கை உனக்குபெரும் பாடம்..!
பணிவு
 •  · 
 •  · Ramya
அவள்
வார்த்தைகளின்ஒலி வடிவத்தைவற்ற செய்தவள்பட படப்பாய் என்றும் என்படர்ந்த மார்பினில் ஓர்இறுக்கத்தை தருபவள்சிந்திக்க சிந்திக்கஇதழினில் ஈரப்பதம் குறைந்திடஇரவெல்லாம் விழிக்க செய்பவள்
பாரதியார் கவிதைகள்
பாரதியார் கவிதைகள்
பாரதியார் கவிதைகள்
பாரதியார் கவிதைகள்
பாரதியார் கவிதைகள்
பாரதியார் கவிதைகள்
நட்பு
நட்பு
Add Poem
Poems Categories