- · 6 friends
-
S
N
R
அப்பா...!
காட்டிக் கொள்ளாத பூட்டிய அன்பினை
ஈட்டிய வெற்றிகள் கண்டு புழுகாமல்
பூரிக்கும் பெரு மகன்..!
பழுதாகாமல் இருந்திட விழுதான உந்தனை
விரட்டி விரட்டி படி படி என தினம்
பாசப் பந்தாடியவன்.!
பார்வையும் உறுமலும் உன் பார்வைக்கு
விரும்பாத வில்லனாய்
வெறுமனே நடிப்பால்
புடம் போட்டவன்..
தடம் மாறிய வேளைகளில் வேதனையால்
நொந்தழுதவன்
தனக்கு எட்டாத தூரங்களை எட்ட வைத்து வளர்த்தவன்.!
உயர் நிலை தொட்டதும் ஓரமாய் ஒதுங்கி
ஈரமான வார்த்தைகளுக்கு
தவமிருப்பவன்.!
நேசி! பூசி! யோசி !
வாசி அவர் வாழ்க்கை உனக்கு
பெரும் பாடம்..!
Ads
Latest Poems (Gallery View)
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
Ads