Ads
 ·   ·  19 poems
  •  ·  6 friends
  • S

    N

    R

    7 followers

வறுமை தோழன்


வறுமை
உன்னிடம் 
தோழமை கொண்டால் 
பலபேர் உன்னை விட்டு 
தூரமாய் போய் 
விடுவார்கள்



பாசம் வைத்தவர்கள் கூட
பயந்து விடுவார்கள் 



மடியில் தூங்கியவர்கள்
மறந்து போவார்கள் 



இதயத்தில் இருந்தவர்கள்
இறங்கி விடுவார்கள்



தலை குனிந்து
தவம் கிடந்தவர்கள்
தலை நிமிர்த்தி
தள்ளி விடுவார்கள்



நலம் விசாரிக்க
நடுங்குவார்கள்



நீ உறவுகளை
உணர்ந்து கொள்வாய்



உலகத்தை
புரிந்து கொள்வாய்



அன்பை
அறிந்து கொள்வாய்



மனிதர்கள் இப்படித்தான்
என்பதை
நீ பாடமாய் 
படித்துக் கொள்வாய்


  • 1378
  • More
Comments (0)
Login or Join to comment.
Ads
Ads