இவ்வாண்டு கந்தசஷ்டி விரத ஆரம்பம் எப்போது?
-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-இவ்வாண்டு கந்தசஷ்டி விரத ஆரம்பம் எப்போது என்பதில் ஒரு சிறிய குழப்பம் ஏற்பட்டிருக்;கிறது. எமது நாட்டில்; வெளிவரும்; வாக்கிய, கணித பஞ்சாங்கங்கள் இரண்டிலும் ஐப்பசி மாதம் 09 ஆம் திகதியே (26.10.2022) விரத ஆரம்பம் என்றும் ஐப்பசி மாதம்; 13 ஆம் திகதி (30.10.2022) விரத நிறைவு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால், திருச்செந்தூர் ஆலயத்தில் இம்முறை ஐப்பசி மாதம்; 08 ஆம் திகதியிலிருந்து (25.10.2022) ஐப்பசி மாதம் 13 ஆம் திகதி வரை (30.10.2022) கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுவதாய் அறிவிக்கப்பட்டுள்ளது. குழப்பத்திற்குக் காரணம் இதுவேயாம்;.ஐப்பசி மாதம் 25 ஆம்; திகதியே பிரதமை திதி கூடி அடுத்தநாளாகிய 26 ஆம் திகதி வரை அத் திதி நிற்பதே, இவ்வாறு இரண்டு திகதிகளில் விரத ஆரம்ப நிர்ணயம் செய்யப்பட்டதன் காரணமாம். 25 ஆம் திகதி விரத ஆரம்பம் செய்தால் ஆறு நாட்கள் கந்தசஷ்டி விரதம்; அனுஷ்டிக்கலாம். நம் பஞ்சாங்கங்கள் சொல்கிறபடி 26 ஆம் திகதி விரத ஆரம்பம்; செய்தால் இம்முறை கந்தசஷ்டி விரதம் 5 நாட்களாக மட்டுமே இருக்கும். (இடையிடையே அப்படி வருவதும் உண்டு.)மேற் சொன்ன இரண்டு திகதிகளில் எத்திகதியில் விரத ஆரம்பத்தினைச் செய்வது சரியாகும்? என்பதுதான் தற்போது எழுந்திருக்கும் கேள்வி. நமது பஞ்சாங்கங்களைக் கொண்டு விரதம் அனுஷ்டிப்பதா? அல்லது திருச்செந்தூர் ஆலயத்தின்படி விரதம் அனுஷ்டிப்பதா? என்று அடியார்கள் சிலர்; கேட்டதாலேயே இக்கட்டுரையை வரைகிறேன்.மேற்சொன்ன இரண்டு நிர்ணயங்களிலும் நமது பஞ்சாங்கங்கள் சொல்லும் கந்தசஷ்டி நிர்ணயமே சரியானது என்பது எனது கருத்து. கந்தசஷ்டி விரதநிர்ணயம் பற்றி நூல்களும் அறிஞர்களும் விரிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.கந்தசஷ்டி விரதத்தினை சாந்திரமான, ஐப்பசி மாதத்து, சுக்கில பட்ஷ (வளர்பிறை), பிரதமை முதல், சஷ்டி ஈறாகிய ஆறு நாட்களும் அனுஷ்டிக்க வேண்டும் என்பதுதான் பொதுவான விரதநிர்ணய விதியாகும். ஆனால் இதில் வேறு சில விடயங்களையும் நாம் கவனிக்கவேண்டும் என்று ஆகம அறிஞர்கள் கூறுகிறார்கள்.முக்கியமாக விரத ஆரம்;பத்தினை வெறுமனே ஐப்பசி மாத சுக்கிலபட்சப் பிரதமையில் தொடங்க இயலாதென்றும், ஐப்பசி மாதத்தில் வரும் ‘கிருத்திகா சுத்தப் பிரதமையில்’ தான் கந்தசஷ்டி விரத ஆரம்பத்தினைக் கொள்ள வேண்டும் என்றும்; அவர்கள் உறுதியாயக் குறிப்பிட்;டிருக்கிறார்கள்.நமது நாட்;டைச் சேர்ந்த ஆகமப் பேரறிஞர் அமரர் அச்சுவேலி சிவஸ்ரீ குமாரசாமிக் குருக்கள் அவர்கள் இவ்விரதம் பற்றிக் குறிப்பிடுகையில்; ‘கிருத்திகா சுத்தப் பிரதமையில் கந்தசஷ்டி ஆரம்பத்தினைக் கொள்வதே ஆகம சம்மதமாகும்.’ என்று பதிவு செய்திருக்கிறார்.அதன்படி இவ்வாண்டு கந்தசஷ்டி விரதத்தினை, வெறுமனே பிரதமை திதி வரும் நாளாகிய 25.10.2022 செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்க முடியாது. கிருத்திகா சுத்தப் பிரதமை வரும் நாளாகிய 26.10.2022 புதன்கிழமை அன்றுதான் ஆரம்பிக்கவேண்டும். அதுவே சரியான விரத ஆரம்ப நிர்;ணயமாகும்;.ஒருசில தினங்களுக்கு முன்பு இணையவெளியில் லண்டனிலிருந்து பேசிய ஓர் அந்தணர் அங்கு 25 ஆம் திகதி ‘கிரகணம்’ வருவதால் அந்நாளைத்; தவிர்த்;து அடுத்த நாளாகிய 26 ஆம் திகதியே கந்தசஷ்டி விரதத்தினை ஆரம்;பிக்கவேண்டும் என்று பேசியிருந்தார். கிரகணத்;திற்காக விரதத்தைத் தள்ளிப்போடவேண்டும் என்று சொல்வது தவறு! இன்னும் சொல்லப் போனால் கிரகண நாட்களில்; ஆலயங்களில் வழிபாடியற்றவேண்டும் என்பதே நம் ஆகம நெறிப்படுத்தலாம். இதனை ஆகமநூல்களும்; பேரறிஞர்களான அச்சுவேலி குமாரசாமிக் குருக்கள், பேராசிரியர் கைலாசநாதக் குருக்கள் ஆகியோரும் உறுதி செய்துள்ளனர்;. எனவே 25 ஆம் திகதி, பிரதமை திதி கூடிய போதும், கிருத்;திகா சுத்தத்துடன் கூடிய பிரதமைதிதி வரும் 26 ஆம் திகதியே இவ் ஆண்டு கந்தசஷ்டி விரத ஆரம்பத்தினைச் செய்யவேண்டும்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·