தாயிலாந்து விமான நிலையத்தில் திருப்பாற் கடலை கடையும் சிற்பங்கள்.
தாய்லாந்து பாங்காக் விமான நிலையத்தில் பிரம்மாண்டமான பாற்கடலில் அமுதம் கடையும் நிகழ்வு பற்றிய சிலைவடிவம் உள்ளது.சுவர்ணபூமி விமான நிலையம் Suvarnabhumi Airport . இது பேங்காக் சர்வதேச விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமாக 15 செப்டம்பர் 2006 இல் உள்நாட்டு விமான சேவை திறக்கப்பட்டது.வண்ணமயமான சிலைகளோடு, பார்ப்பவர் மனம் மயங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.படத்தில் காணுவது தேவர்களும், அசுரர்களும் வாசுகிப்பாம்பை மந்தர மலையில் கட்டி இரு புறமும் பிடித்து அமுதம் கடைகின்றனர்.நடுவில் விஷ்ணு, கீழேஆமையும்முன்னோர் காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பெரிய யுத்தம் நடந்தது.இரண்டு பக்கமும் பெரும் இழப்புகளும், நிறைய பேர் இறந்தனர். தேவர்கள் ஏரளமாக இறந்தபோது கவலைகொண்ட இந்திரன் விஷ்ணுவை அணுகி காப்பாற்றும்படி கோரினார். அப்போது விஷ்ணு சொன்னார்.பாற்கடலைக் கடைந்தால் அமுதம் கிடைக்கும். அதைக் குடித்தால் சாவே கிடையாது.இந்த தகவல் அசுரர்களுக்கும் எட்டியது.தேவர்கள் மட்டும் பாற்கடலைக் கடைய முடியாது, அசுரர்களும் சேர்ந்துதான் அதைச் செய்யமுடியும். தேவர்கள் அசுரர்களின் உதவியை நாடினார்கள்.அசுரர்கள் ஒப்புக்கொள்ளவே இரண்டு பக்கத்தாரும் ஒருநாள் பாற்கடலைக் கடைய சம்மதித்தார்கள்.மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப்பாம்பை நாணாக்கி பாற்கடலைகடையவும் ஆரம்பித்தார்கள்.படத்தில் காணுவது தேவர்களும் அசுரர்களும் நாக தலவனின் இரு புறமும் பிடித்து அமுதம் கடைகின்றனர்.புராணக் கூற்றுகள்முந்தைய காலத்தில் வேதங்கள் தழைத்தோங்கியிருந்தன. அச்சமயம் ஒற்றுமையுடன் இருந்த தேவர்களும், அசுரர்களும் அமிர்த பானத்தினை பாற்கடலில் இருந்து எடுக்க முயற்சிக்கும் பொழுது அமிர்த பானமிருந்த கிண்ணத்தினை அசுரர்கள் களவாடிச் செல்கின்றனர்.இவர்களைத் துரத்திச் செல்லும் தேவர்களும் பன்னிரண்டு நாட்களும் சென்றதாம் பன்னிரண்டு இரவுகளும் பூவுலகில் (12 ஆண்டுகளுக்குச் சமம்) வானுலகில் போர் செய்தனர்.அச்சமயம் வானுலகிலிருந்து அமிர்த பானம் சொட்டிக் பூலோகத்தில் விழுந்ததெனவும் அதனால் மகா கும்பமேளா ஒவ்வொரு பன்னிரண்டு ஆண்டுகளும் கொண்டாடப்படுகிறது.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·