Ads
புலோலி விக்னேஸ்வரா முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு பதிவுகள்
புலோலி விக்னேஸ்வரா முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு பதிவுகள்
Empty
Added a post
பல்வலி வந்தாலே தாங்க முடியாத வலியை உருவாக்கி விடுகின்றது.பல் வலி நம் மோசமான வாய் சுகாதாரத்தை மட்டும் சுட்டிக் காட்டுவதோடு, நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தைப் கெடுதலாக அமைகின்றது.சிலர் நிறைய நேரம் பல் துலக்குவதாலும், மிகவும் கடினமான பிரஷ்ஷை உபயோகிப்பதாலும் பற்கள் தேய்ந்து எனாமல் என்னும் வெளிப்புறப் பகுதியை எடுத்து விடுவார்கள். இது உள்ளே இருக்கும் குழாய் போல் பகுதியை திறந்து விடும். இதனால் அப்பற்கள் மிகவும் கூச்சத்தை ஏற்படுத்தி, பின்னர் தாங்க முடியாத வலி உண்டாக்கும்.அந்த வகையில் இதிலிருந்து விடுபட நம்முடைய வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே எப்படி பல் வலியை தீர்க்கலாம். ஒரு பெரிய வெங்காயத்தையோ அல்லது சின்ன வெங்காயத்தையோ வட்ட வடிவில் வெட்டி அதை பற்களுக்குக் கீழே வைத்துக் கொண்டிருந்தால் தலைவலி வேகமாகக் குறையும்.பல் வலி ஆரம்ப காலக் கட்டத்தில் தான் இருந்தால் சின்ன வெங்காயத்தை வாயில் நன்கு மென்று அதன் சாறை விழுங்கினாலே சரியாகிப் போய்விடும்.ஒரு சிறிய காட்டன் பாலில் இரண்டு முதல் 4 சொட்டுக்கள் வரை கிராம்பு எண்ணெயில் நனைத்து பல் வலி இருக்கின்ற இடத்தில் வைத்து நன்கு அழுத்தி மசாஜ் செய்து விட்டால் போதும். உடனடியாக சிறந்த நிவாரணதைப் பெற முடியும்.வெள்ளரிக்காயை ஸ்லைஸ்கள் செய்து அதை பற்களின் அடியின் வைத்திருந்தாலும் பல் வலி உடனடியாகக் குறைந்து விடும்.பல் வலி அதிகமாக இருந்தால் இஞ்சியை சிறு சிறு துண்டாக வெட்டி அதை பல் வலி இருக்கும் இடத்தினில் மென்று வந்தால் வலி குறைய ஆரம்பிக்கும்.வெதுவெதுப்பான டீ பேக்கை எடுத்து பல் வலி உள்ள இடத்தில் வைத்து நன்கு சிறிது நேரம் மசாஜ் செய்து கொடுத்தால் போதும் பல் வலி, வீக்கத்தை வேகமாக சரிசெய்து விட முடியும்.
- 178
Added a post
2024-ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் ரத்தன் டாடா இந்த மண்ணை விட்டு மறைந்தார். இந்நிலையில் அவர் எழுதி வைத்த உயில் தற்போது வெளியாகியுள்ளது.தன் பணியாளர்கள் மீதும் விலங்குகள் மீதும் அவர் கொண்டிருக்கின்ற பிரியத்தையும் நன்றி உணர்வையும் இதை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.ரத்தன் டாடா தனது உயிலில் தனது வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு ரூ.3 கோடிக்கும் மேலான சொத்துக்களை ஒதுக்கி வைத்துள்ளார்.டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள தகவல்களின்படி 7 வருடம் மற்றும் அதற்கும் மேலாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ. 15 லட்சம் வழங்க உயிலில் குறிப்பிட்டுள்ளார். அதோடு அவர்களுடைய சேவை காலத்திற்கு ஏற்ப இந்த தொகை பகிர்ந்தளித்து வழங்கப்பட வேண்டும் என்றும் எழுதி வைத்துள்ளார்.அதோடு பகுதி நேரமாக பணிபுரிந்த ஊழியர்களையும் ரத்தன் டாட்டா மறக்கவில்லை.பகுதி நேரமாக உதவி செய்தவர்கள், கார் சுத்தம் செய்தவர்கள் என அனைவருக்கும் ரூ.1 லட்சம் பகிர்ந்துளித்து வழங்கப்பட வேண்டும் என்றும் எழுதி வைத்துள்ளார். தனது ரூ. 3,800 கோடி மதிப்புள்ள சொத்தின் பெரும் பகுதியை ரத்தன் டாட்டா என்டோமென்ட் பவுண்டேஷன் மற்றும் ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் டிரஸ்ட் ஆகியவற்றிற்கு வழங்கியுள்ளார் நீண்ட காலமாக தனது வீட்டில் சமையல் செய்த ராஜன் ஷாவுக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமான தொகையை வழங்க உயிலில் குறிப்பிட்டுள்ளார். இதில் ரூ.51 லட்சம் கடன் தள்ளுபடியும் அடங்கும்.அவர் வீட்டில் சமையல் செய்த மற்றொரு குக் சுப்பையா கோனார் ரூ.66 லட்சத்தை பெற உள்ளார். இதில் ரூ. 36 லட்சம் கடன் தள்ளுபடியும் அடங்கும். அதே நேரம் அவருடைய செக்கரட்டரி டெல்னாஸ் கில்டருக்கு ரூ.10 லட்சம் வழங்க குறிப்பிடப்பட்டுள்ளது.ஆடைகளை அரசு சாரா நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்க வேண்டும் என்றும், இதனால் ஏழை ஏழை எளியவருக்கு அந்த ஆடை விநியோகிக்கப்படும் என்பதை முன்னிறுத்தி உயில் எழுதி வைத்துள்ளார்.கார்ல்னெல் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பதற்காக ரத்தன் டாடாவின் நிர்வாக உதவியாளர் சாந்தனு நாயுடு ரூ.1 கோடி கடன் வாங்கியுள்ளார். அதையும் தள்ளுபடி செய்ய குறிப்பிட்டுள்ளார். தனது பக்கத்து வீட்டுக்காரர் வாங்கிய கடன் மற்றும் தனது ஓட்டுநர் ராஜூ லியோன் வாங்கிய கடன் ஆகியவற்றையும் தள்ளுபடி செய்ய குறிப்பிட்டுள்ளார்.ரத்தன் டாடாவிற்கு செல்ல பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி அவர் வளர்த்து வந்த டிட்டோ உயிலில் சிறப்பு இடம் பெற்றுள்ளது. அதற்கு ரூ. 12 லட்சம் வழங்க குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு காலாண்டிற்கும் ரூ. 30,000 வழங்கப்படவுள்ளது. டிட்டோவை தனது சமையல்காரர் ராஜன் ஷா பராமரித்து வருகிறார்.
- 166
Added article
நடிகை மலைகா அரோரா கவ்ஹாத்தியில் நடந்த ஐபிஎல் போட்டியை காண வந்ததிலிருந்து ஒரு பெரிய கிசுகிசு தொடங்கியது. முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காராவும், அவரும் ராஜஸ்தான் அணியின் பெஞ்சில் இருந்து போட்டியைப் பார்த்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. சங்கக்காராவுடன் இணைந்து ராஜஸ்தான் ராயல்ஸ் ஜெர்சியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியை மலைகா பார்த்தார். போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.இருவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, இருவரும் டேட்டிங் செய்வதாக வதந்திகள் பரவத் தொடங்கின. முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மலைகா ஸ்டேடியத்திற்கு வந்திருந்த நிலையில், ராஜஸ்தான் அணியுடன் அவருக்கு என்ன தொடர்பு என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனால் இந்த ஜோடியைப் பற்றி பலரும் பேச ஆரம்பித்தனர். ஆனால், மலைகாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்த வதந்தியை மறுத்துள்ளன. இரண்டு பேரை ஒன்றாகப் பார்த்தால் என்னென்னவோ பேசுகிறார்கள். குமார் சங்கக்காரா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். பின்னர் 2025 ஐபிஎல் தொடருக்கு முன்பு ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றதை அடுத்து, அவர் அணியில் வேறு பொறுப்புக்கு மாறினார். முன்னாள் கணவர் அர்பாஸ் கானை பிரிந்த பிறகு மலைகா அர்ஜுன் கபூருடன் காதலில் இருந்தார். இருப்பினும், இருவரும் கடந்த ஆண்டு நவம்பரில் பிரிந்தனர். ஆனால் இது குறித்து இருவரும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.அர்ஜுன் கபூரின் சமீபத்திய படமான 'மேரே ஹஸ்பண்ட் கி பிவி' படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் தான் திருமணம் ஆகாதவர் என்று நடிகர் கூறியிருந்தார். 51 வயதான மலைகாவின் அர்பாஸ் கான் உடனான உறவு 1998 முதல் 2017 வரை நீடித்தது. அவர்களுக்கு அர்ஹான் கான் என்ற மகன் உள்ளார். நடிகை மலைகா அரோரா, மணிரத்னம் இயக்கிய உயிரே திரைப்படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து ‘தையா தையா’ பாடலுக்கு நடனமாடியதன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 187
Added a news
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் பல பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் மற்றும் சிறப்பு பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக உள்ளதாக இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது.பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். "இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் ஏப்ரல் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தப் பயணத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கை பொலிஸ் விசேட போக்குவரத்துத் திட்டத்தையும் சிறப்புப் பாதுகாப்புத் திட்டத்தையும் செயல்படுத்தும். அதன்படி, ஏப்ரல் 4 ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் வீதி ஆகியவை அவ்வப்போது மூடப்பட வேண்டியுள்ளது. "இந்த காலகட்டத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் மக்கள், இந்த வீதிகள் மூடப்படுவதைக் கருத்தில் கொண்டு தங்கள் பயண ஏற்பாடுகளைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். "ஏப்ரல் 5 ஆம் திகதி, கொழும்பு - காலி முகத்திடல் பகுதி, சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதி மற்றும் பத்தரமுல்லையில் உள்ள அபே கம வளாகத்திற்கு அருகில் உள்ள வீதிகள் அவ்வப்போது மூடப்பட வேண்டியிருக்கும்." "இந்த விசேட போக்குவரத்துத் திட்டத்திற்கு அனைத்து சாரதிகளும் பொதுமக்களும் ஆதரவளிக்குமாறு இலங்கை பொலிஸ் கோரியுள்ளது" என்றார்.
- 197
Added a post
டிராகன் பழம் சுவைக்காத ஏராளமான மக்கள் இன்னும் தமிழகத்தில் உள்ளனர். அதனாலேயே பலருக்கும் இந்த பழத்தை தன் வாழ்வில் ஒருமுறையாவது சுவைத்து பார்க்க வேண்டும் என்பது ஆசை. இணையத்தில் டிராகன் பழத் தோலை உரித்து, அதன் உள்ளிருக்கும் சதையை பார்க்கும் போது, நம்மையும் அறியாமல் நாவில் எச்சில் ஊறும்..சமீபத்தில், செஃப் குணால் கபூரும் இந்த பழத்தைப் பற்றி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். அதன் தனித்துவமான தோற்றம் மற்றும் சுவைக்காக மக்கள் அதை ரசித்தாலும், அது ஆரோக்கிய நலன்களையும் வழங்கக்கூடும் என்று சான்றுகள் தெரிவிக்கின்றன. இங்கே சில ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு வெட்டுவது என்பதை பகிர்ந்துள்ளேன்.எப்படி வெட்டுவது?டிராகன் பழங்களை வெட்டுவது எப்படி என்று செஃப் அந்த வீடியோவில் செய்து காட்டினார்.முதலில் கட்டிங் போர்டில் டிராகன் பழங்களை வைக்கவும்.ஒரு கூர்மையான செஃப் கத்தியைப் பயன்படுத்தி இரண்டு முனைகளிலும் இருக்கும் காம்பு பகுதியை வெட்டவும். இப்போது வீடியோவில் காட்டியபடி டிராகன் பழத்தின் தோலில், கத்தியைக் கொண்டு நேராக வெட்டி அப்படியே உங்கள் விரல்களை பயன்படுத்தி, ஆரஞ்சு பழத்தோலை உரிப்பது போல தோலை உரிக்கவும்.இப்படி செய்வதால் எளிதாக டிராகன் பழத்தின் தோலை உரிக்கலாம். பின்னர் உள்ளே இருக்கும் அந்த சுவையான சதைப் பகுதியை உங்களுக்கு பிடித்த வடிவத்தில் வெட்டி அப்படியே ருசிக்கலாம் அல்லது ஒரு கிண்ணத்தில் வைத்து ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல ஸ்பூன் கொண்டும் பழத்தை சாப்பிடலாம்.நீங்கள் ஏன் அதை சாப்பிட வேண்டும்?ஊட்டச்சத்து நிபுணர் சோனியா பக்ஷி கூறுகையில், டிராகன் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், புற்றுநோய் மற்றும் முன்கூட்டிய முதுமை போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களால் செல்களை சேதப்படுத்தாமல் பாதுகாக்க உதவுகிறது.இன்னும் சில பலன்கள்*இது இயற்கையாகவே கொழுப்பு இல்லாதது மற்றும் நார்ச்சத்து அதிகம். இது உணவுக்கு இடையில் நீண்ட நேரம் உங்களை முழுதாக வைத்திருக்க உதவும்.*இது உங்கள் இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது.*இதில் ப்ரீபயாடிக்குகள் உள்ளன, அவை உங்கள் குடலில் உள்ள புரோபயாடிக்ஸ் எனப்படும் ஆரோக்கியமான பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கிறது. உங்கள் உடலில் அதிக ப்ரீபயாடிக்குகள் இருந்தால், உங்கள் குடலில் உள்ள நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்களின் சமநிலையை மேம்படுத்தலாம்.*இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். டிராகன் பழத்தில் வைட்டமின் சி மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகம் உள்ளன, அவை உங்கள் நோயெதிர்ப்பு அமைப்புக்கு நல்லது. இது உங்கள் இரும்புச் சத்தையும் அதிகரிக்கலாம்.சாப்பிட சிறந்த நேரம்செரிமான அமைப்பு, பழங்களின் சர்க்கரையை விரைவாக உடைத்து, அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குவதால், பழங்களை சாப்பிடுவதற்கு காலை சிறந்த நேரமாக கருதப்படுகிறது. டிராகன் பழத்தை மதியம் அல்லது இரவிலும் சாப்பிடலாம். உண்மையில், இரவில் சாப்பிடும்போது, அது சிறந்த தூக்கத்தைத் தூண்ட உதவுகிறது, என்று பக்ஷி குறிப்பிட்டார்.எப்படி சாப்பிடலாம்?*அன்னாசி மற்றும் மாம்பழம் போன்ற பிற வெப்பமண்டல பழங்களுடன் உங்கள் ஃப்ரூட் சாலட்டில் சேர்க்கலாம்.*ஐஸ்கிரீம் செய்து சாப்பிடலாம்.எலுமிச்சை போல சுவையை அதிகரிக்க ஜூஸ் மற்றும் தண்ணீரில் பிழியலாம்சாலட், தயிரில் டாப்பிங்காக பயன்படுத்தலாம்.*இதை உறைய வைத்து ஸ்மூத்தியாக பிளெண்ட் செய்யலாம்.முக்கிய எச்சரிக்கைபக்ஷியின் கூற்றுப்படி, டிராகன் பழம் வயிற்று உப்பிசம் மற்றும் வயிற்றுப்போக்குடன் தொடர்புடையது என்பதால் ஒருவர் அதிகமாக சாப்பிடுவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் செரிமான அமைப்பு அனுமதிப்பதை விட அதிகமாக உட்கொள்வது, அதன் நார்ச்சத்து, சர்க்கரை மற்றும் ப்ரீபயாடிக் உள்ளடக்கம் காரணமாக வயிற்று உபாதைக்கு. வழிவகுக்கும் என்று பக்ஷி கூறினார்.
- 393
Added a post
மேஷம்குடும்பத்தில் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றமான சிந்தனைகளால் லாபத்தை மேம்படுத்துவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அலைச்சல் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் ரிஷபம்விவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்புகள் திருப்தியை ஏற்படுத்தும். சங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை குறைத்துக்கொள்ளவும். நிம்மதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் மிதுனம்மாமன்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். உணவு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் தடைகள் விலகும். பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத மாற்றங்கள் நேரிடும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். ரகசியமான சில ஆய்வுகள் தெளிவை உருவாக்கும். பாராட்டு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : வெண்மை கடகம்பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் சார்ந்த பணிகளில் லாபம் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சமூக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். இலக்கியம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் சிம்மம்வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். பேராசை இன்றி செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கௌரவ பதவிகள் மூலம் செல்வாக்கு மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். வேளாண்மை சார்ந்த ஆலோசனைகள் மூலம் தெளிவு உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு கன்னிமறைமுகமான தடைகளை வெற்றி கொள்ளுவீர்கள். மற்றவர்கள் கருத்துக்களுக்கு உணவுப்பூர்வமாக செயல்படுவதை விட சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். கணவன், மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் கைகூடும். லாபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : பச்சை துலாம்எதிர்பாராத அலைச்சல்களால் மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கணிதம் தொடர்பான துறைகளில் சிந்தித்து செயல்படவும். கனிவான பேச்சுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். உத்தியோகத்தில் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். மற்றவர்கள் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். தனம் சார்ந்த விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் விருச்சிகம்வாழ்க்கைத் துணைவருடன் சிறுதூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். போட்டிகளில் ஈடுபட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். கற்பனைத் துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூரில் பணி வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை தனுசுவியாபாரம் சார்ந்த பணிகளில் புதிய ஒப்பந்தங்கள் கைக்கூடும். கனிவான பேச்சுக்களால் காரியத்தை சாதிப்பீர்கள். வழக்குகளில் சில திடீர் திருப்பம் ஏற்படும். பழைய சிக்கல்களுக்கு தெளிவு பிறக்கும். ஆன்மிக பணிகளில் சில புரிதல் உண்டாகும். கடன் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மகரம்புதிய கலைகளை கற்பதில் ஆர்வம் உண்டாகும். தன வரவுகளால் மேன்மை ஏற்படும். குடும்ப சூழ்நிலை அறிந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் பொறுமையை கையாளவும். அரசு அதிகாரிகளுக்கு நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகத்தில் முயற்சிகளால் அலைச்சல் அதிகரிக்கும். பரிவு மேம்படும் நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் கும்பம்உயர் பொறுப்பில் இருப்பவர்களின் சந்திப்பு ஏற்படும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பணிவு வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு மீனம்புதுவிதமான காதணிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலமான சூழ்நிலை ஏற்படும். எழுத்துசார்ந்த துறைகளில் முன்னேற்றம் கிடைக்கும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஈடுபாடு உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மறைமுகமாக இருந்துவந்த தடைகளை அறிந்துகொள்வீர்கள். ஓய்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
- 396
Added a post
குரோதி வருடம் பங்குனி மாதம் 19 ஆம் தேதி புதன்கிழமை 2.4.2025.சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார்.இன்று காலை 07.45 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.இன்று பிற்பகல் 01.51 வரை கிருத்திகை. பின்னர் ரோகிணி.சித்திரை சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
- 402
Added a post
மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை கட்டியாளும் அரசன் அவன். அவன் மகள் பட்டத்து இளவரசி திருமணம் செய்துகொள்வதில் நாட்டமில்லாமல் இருந்தாள். தனது குலகுருவின் ஆலோசனையை அடுத்து பல ஆலய திருப்பணிகளை செய்தான் அரசன். இதையடுத்து அரச குடும்பத்தினர் யாவரும் வியக்கும் வண்ணம், இளவரசிக்கு திருமணம் செய்துகொள்ளும் ஆசை எழுந்தது. ‘தனக்குரியவனை தானே தேர்ந்தெடுக்க வேண்டும், அவன் அனைத்திலும் சிறந்தவனாக இருக்கவேண்டும்’ என்று கருதினாள். தன் தந்தையிடம் தனது விருப்பத்தை தெரிவித்து, “அப்பா… அழகோ, பணமோ, பட்டமோ, பதவியோ இவைகள் மட்டுமே என்னை மணப்பவரின் தகுதியாக இருக்கக் கூடாது. அதற்கு மேலும் நான் அவரிடம் சில விஷயங்களை எதிர்பார்க்கிறேன். எனவே எனக்கேற்றவரை தேர்ந்தெடுக்க நீங்கள் உதவவேண்டும் அப்பா” என்றாள்.‘மகள் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாளே அதுவே சந்தோஷம். மேலும் தனது கணவனை தேர்ந்தெடுக்க நம்மையும் ஆலோசனை கேட்கிறாளே… அது அதைவிட சந்தோஷம்’ என்று மகிழ்ந்த மன்னன் தனது மகளுக்கு திருமணம் செய்துவைக்கும் திட்டத்தை பற்றி குறிப்பிட்டு தகுதியுடையவர்கள் சுயம்வரத்துக்கு விண்ணப்பிக்கலாம் நாலாபுறமும் செய்தி அனுப்பினான்.பல விண்ணப்பங்கள் வந்தன. அவற்றை மிக கவனமாக பரிசீலித்து ஐந்து விண்ணப்பங்களை மட்டும் இறுதி செய்தான் மன்னன். அவர்களை தனது அரண்மனைக்கு வரச் சொல்லி தகவல் அனுப்பினான்.இதைக் கேள்விப்பட்ட இளவரசி, மிகவும் குழப்பமடைந்தாள். “அப்பா இது எனக்கு உண்மையில் சவாலான ஒன்று தான். ஐந்து பேரில் யாரை தேர்ந்தெடுப்பது என்று எனக்கு புரியவில்லை. நீங்களே இவர்களுள் மிகச் சிறந்த ஒருவரை தேர்ந்தெடுத்துவிடுங்கள்” என்றாள்.பந்து தன் பக்கமே திரும்பியதையடுத்து மன்னன் மீண்டும் குழப்பமடைந்தான்.தனது குலகுருவை அரண்மனைக்கு வரவழைத்து அவரது பாதங்கள் பணிந்து, தனக்கு முன்னுள்ள சவாலை குறிப்பிட்டான்.அனைத்தையும் நன்கு கேட்ட குரு, மன்னனுக்கு சில ஆலோசனைகள் வழங்கினார். அதைக் கேட்டு முகம் மலர்ந்த மன்னன், “அப்படியே செய்கிறேன் குருவே!” என்றான்.அரண்மனை குதிரைப் பயிற்சியாளர்களை அழைத்து, “நம்மிடம் பழக்குவதற்கு கடினமான குதிரை எதாவது இருக்கிறதா?” என்று கேட்டான்.சற்று யோசித்த பயிற்சியாளர்கள் “ஆம்… அரசே அரேபியாவிலிருந்து வந்த சில குதிரைகள் இருக்கின்றன. மிகவும் அஜானுபாகவான குதிரைகள் அவை. பழக்குவதற்கு மிகவும் கடினமாக முரட்டுத் தனமாக இருக்கின்றன. எதற்கும் கட்டுப்படாத அக்குதிரைகள் பல பயிற்சியாளர்களை உதைத்து கீழே தள்ளி காயப்படுத்தியிருக்கின்றன. அவற்றை என்ன செய்வதென்றே எங்களுக்கு தெரியவில்லை” என்றார்கள்.விபரத்தை குறித்துக்கொண்டான் மன்னன்.மறுநாள் தான் இறுதி செய்த ஐந்து பேரையும் வரவழைத்து குதிரைகள் பற்றி சொல்லி, “உங்களுக்கு தரப்படும் முரட்டுக் குதிரையை யார் அடக்கி அதில் என் மகளையும் ஏற்றிக்கொண்டு சவாரி செய்கிறீர்களோ அவரே என் மகளை மணக்கமுடியும்” என்று அறிவித்தான்.இந்த போட்டியை பற்றி கேள்விப்பட்டவுடன் இளவரசி மிகவும் குழப்பமடைந்தாள். ஏனெனில் சிறு வயதில் குதிரை மீது அமர்ந்து, அது மிரண்டு ஓடி, கீழே விழுந்து அடிப்பட்டதிலிருந்து தனக்கு குதிரையின் கனைப்பு சத்தமோ குதிரையில் ஏறி அமர்ந்து சவாரி செய்வதோ பிடிக்காது என்பது தந்தைக்கு தெரியும். அப்படியிருக்க ஏன் இந்தப் போட்டியை அறிவித்தார் என்று குழப்பமடைந்தாள்.ஆனாலும் தனது தந்தையின் முடிவின் பின்னணியில் நிச்சயம் ஏதாவது அர்த்தமிருக்கும் என்று மனதை சமாதானப்படுத்திக்கொண்டு போட்டிக்கு ஒப்புக்கொண்டாள்.குறிப்பிட்ட நாளன்று அரண்மனை மைதானத்தில் ஒரு குதிரை கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.மணமகன்கள் ஐந்து பேரும் விருந்தினர் மாளிகைக்கு வரவழைக்கப்பட்டார்கள். இளவரசியை மணம் புரிய அவர்கள் செய்யவேண்டிய சிலவற்றை குறிப்பிட்டு இறுதியில் குதிரையை அடக்கி அதில் இளவரசியுடன் சவாரி செய்யவேண்டியதை பற்றியும் விவரிக்கப்பட்டது.மகளை நோக்கி, “போட்டியின் போது இவர்களுடன் நீ கூட இருக்கவேண்டும்” என்றும் கூறினார். போட்டியாளர்கள் யாருக்குமே இளவரசிக்கு குதிரை மீது இருந்த பயம் பற்றி மூச்சு கூட விடவில்லை. தனித்தனியே பந்தய மைதானத்திற்கு அனைவரும் வெவ்வேறு நேரங்களில் வருவதற்கு ஏற்பாடானது.முதலாமவன் வந்தான். பார்க்க கட்டுமஸ்தாக இருந்தான். இளவரசியை பார்த்தான். குதிரையை சுற்றி சுற்றி வந்தான். குதிரையின் பிடரியை பிடித்து இழுத்தான். குதிரை பலமாக கனைத்தது. இளவரசி பயந்து நடுங்கினாள். அடுத்த சில வினாடிகளில் எப்படியோ குதிரையை அடக்கிவிட்டான். இளவரசியின் கையை பற்றி அனைத்து மேலே ஏற்றினான். இளவரசி மருட்சியுடன் அவனுடன் ஏறினாள். வெற்றிக் களிப்பில் மைதானத்தை சுற்றி சுற்றி வந்தான். ஆனால், இளவரசியோ அச்சம் நீங்காதவளாக கண்களை மூடியபடியே இருந்தாள்.இரண்டாமவன் வந்தான். அவன் தான் இந்த நாட்டிலேயே மிகப் பெரிய செல்வந்தனின் ஒரே மகன் அவன். திடீரென்று கைகளை தட்டினான்… எங்கிருந்தோ ஒரு கட்டுமஸ்தான ஆசாமி வர, அவனிடம், “இந்த குதிரையை அடக்கு” என்று கூற, அவன் சில வினாடிகளில் குதிரையை அடக்கிவிட, அவன் துணையுடன் இளவரசியை குதிரை மீது ஏற்றிக்கொண்டவன் அந்த ஆசாமிக்கு பணமுடிப்பை தந்து அனுப்பினான்.“கையை சொடுக்கினால் நாம் இட்ட வேலையை செய்து முடிக்க பலர் இருக்கும்போது, நாம் ஏன் நமக்கு தெரியாத வேலைகளை செய்ய ரிஸ்க எடுக்கவேண்டும்.. இது தான் என்னோட பாலிஸி” என்றான் இளவரசியை பார்த்து புன்னகைத்து. ஒரு வகையில் இவன் சொல்வது வாஸ்தவம் தான் என்று தோன்றியது இளவரசிக்கு.மூன்றாமவன் வந்தான். பார்க்க மன்மதன் போல இருந்தான். மிக நேர்த்தியாக அழகாக ஆடையுடுத்தியிருந்தான். பந்தயத்தை பற்றி கேள்விப்பட்டதும், “எனக்கு குதிரையேற்றமெல்லாம் தெரியாது. ஆனால், நீ என்னுடன் இருக்கும் நேரத்தை உன்னால் மறக்க முடியாததாக செய்யமுடியும்” என்று கூறி, இளவரசியை பல்லக்கில் ஏற்றி தானும் ஏறி மலைப்பாங்கான இடத்திற்கு சென்றான். அங்கு அருவிகளையும் இயற்கை காட்சிகளையும் அவளுக்கு காண்பித்தான். அரைமணி நேரம் கழித்து மீண்டும் திரும்பினார்கள். சொன்னது போல இளவரசிக்கு மனதுக்கு இதமாக இருந்தது.நான்காமவன் வந்தான். பந்தயத்தை பற்றி கூறியதும், இளவரசியை பார்த்தான். இளவரசி இவனை மருட்சியுடன் பார்த்தாள். குதிரை மீது ஏறுவது என்றால் அவளுக்கு பயம் என்று அவனுக்கு புரிந்துவிட்டது. உடனே “எனக்கு ஒரு பலகையும், தூரிகையும், வண்ணப் பொடிகளும் வேண்டும்” என்று கூறினான். அடுத்த சில நொடிகளில் அவை வந்துவிட சுமார் ஒரு மணிநேரம் செலவிட்டு அந்த இடத்திலேயே, அந்த குதிரை மீது இளவரசி அமர்ந்திருப்பதைப் போல ஒரு தத்ரூபமான அழகான ஓவியத்தை வரைந்துவிட்டான். ஓவியத்தில் தன் அழகை பார்த்து தானே வியந்து வெட்கப்பட்டாள் இளவரசி. அவளுக்கு நெகிழ்ச்சியில் கண்ணீரே வந்துவிட்டது.கடைசியாக ஐந்தாமவன் வந்தான். அவனிடம் பந்தயத்தை பற்றி சொல்லப்பட்டது. குதிரையை சுற்றி வந்து தடவிக்கொடுத்தான். குதிரை பலமாக கனைத்தது. இளவரசி அச்சத்தில் கண்களை மூடிக்கொள்வதை கவனித்தான். குதிரையை மீண்டும் தடவிக்கொடுத்தான். இந்த முறை குதிரை விட்டது ஒரு உதை. தூரப்போய் விழுந்தான். உடைகளை துடைத்துக்கொண்டு எழுந்தான்.நேரே இளவரசியிடம் சென்று “வா நாம் இரண்டு பேரும் தானே ஏறப்போகிறோம். இரண்டு பேரும் குதிரையிடம் செல்வோம்” என்றான். இளவரசி மறுத்தாள். “வேண்டாம்… எனக்கு குதிரைகள் என்றாலே அலர்ஜி. குதிரைகளுக்கும் என்னைக் கண்டால் அலர்ஜி. என்னால் நீங்கள் தோற்றுவிடுவீர்கள்….”“பரவாயில்லை… அதனால் என்ன? ஏற்கனவே கீழே தள்ளிவிட்டுடுச்சு. இதுக்கும் மேல என்ன இருக்கு? பரவாயில்லே வா..” என்று கூறி குதிரையிடம் இளவரசியை அழைத்துக் கொண்டு தானும் சென்று, அதைத் தடவிக்கொடுத்து இருவருமே அதன் மீது ஏறப்போவதால், இருவரையும் அதற்கு பரிச்சயமாக்க முயற்சிகள் செய்தான். குதிரை அந்நியோன்யமாகி ஓரளவு சமாதானமானது தெரிந்தவுடன், தைரியமாக அதன் மீது தானும் ஏறி இளவரசியையும் ஏற்ற முயற்சித்தான்.இளவரசி… “வேண்டாம் எனக்கு பயமாயிருக்கு… வேண்டாம் எனக்கு பயமாயிருக்கு” என்று அச்சத்தில் தயங்கினாள்.“பயப்படாதே… நான் விழுந்தாலும் உன்னை விழ விட மாட்டேன்” என்றபடி அவளை ஆசுவாசப்படுத்தி தான் ஏறி இளவரசியையும் ஏற்ற முயற்சிதான். அவன் கொடுத்த உத்வேகத்தில் இளவரசி எப்படியோ குதிரை மீது ஏறிவிட்டாள். பந்தயப்படி இன்னும் குதிரை ஒரு அடி கூட எடுத்து வைக்காத நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம், குதிரை கனைத்தது. கனைப்பு சத்தத்தை கேட்ட இளவரசி பயத்தில் “வீல்” என்று அலறிவிட்டாள். குதிரை மிரண்டு போய் திமிறியதில் இருவரும் கீழே விழுந்தார்கள். இருவரையும் ஒரு உதை விட்டுவிட்டு குதிரை சில அடிகள் தள்ளிப் போய் நின்றது. இருவருக்குமே லேசான அடி. சிராய்ப்புக்கள்.காவலர்கள் ஓடி வந்தார்கள். குதிரை அப்புறப்படுத்தப்பட்டு, இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது.கீழே விழுந்து குதிரையிடம் உதையும் வாங்கியதில் இளவரசிக்கு கோபம் + சோகம் என்றாலும் போட்டியின் விதிப்படி தோற்றுவிட்ட அவனுக்காக சிறிது பரிதாபப்பட்டாள்.அனைத்தும் முடிந்த பின்னர் மாளிகைக்கு திரும்பினாள் இளவரசி.“எப்படியம்மா போட்டி நடந்தது? உனக்கு ஏற்ற மணமகனை தேர்ந்தேடுத்துவிட்டாயா?”“அப்பா… எனக்கு சற்று குழப்பமாக இருக்கிறது. போட்டியில் வெற்றி பெற்றவர்கள் என்னைக் கவரவில்லை. என்னைக் கவர்ந்தவர்கள் போட்டியில் வெற்றிபெறவில்லை. ஒவ்வொருவரும் ஒரு வகையில் சிறந்தவர்களாக தெரிகிறார்கள்.” என்றாள்.“என்ன செய்யலாம்? நீயே சொல்…”“எனக்கு குழப்பமாக இருக்கிறது அப்பா. நீங்களே எனக்குரியவரை தேர்ந்தேடுத்துவிடுங்கள். உங்கள் முடிவு மீது நான் முழு நம்பிக்கை வைக்கிறேன்”.“சரியம்மா… உனக்கு பொருத்தமானவரை நான் தேர்ந்தெடுத்து அனுப்புகிறேன்.” என்றான்.தனது மாளிகையில் இளவரசி காத்திருந்த வேளையில், மன்னர் தேர்ந்தெடுத்த நபர் வந்திருப்பதாக காவலாளி கூற, இவள் ஆர்வமுடன் வாயில் சென்று பார்த்தாள். அங்கு ஐந்தாவதாக வந்த இளைஞன் நின்றுகொண்டிருந்தான்.போட்டியின் நிபந்தனைப்படி இவர் வெற்றி பெறவில்லையே… எப்படி தந்தை இவரை தேர்ந்தெடுத்தார்? குழப்பமடைந்தவள், அப்பாவிடம் சென்றாள்.“என் முடிவை நீ ஏற்றுக்கொள்ளவில்லையா அம்மா?” என்றான் மகளை நோக்கிய அரசன்.“இல்லை இல்லை அப்பா. நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இவரை நீங்கள் இறுதி செய்ததன் காரணத்தை அறிய ஆவலாய் இருக்கிறேன்”.அரசன் சொன்னான்… “முதலாவதாக வந்தவன் மிக சிறந்த குதிரையேற்ற வீரன். திறமைசாலி. ஆனால் அது அவனைப் பொருத்தவரை நல்லது. ஆனால் உனக்கு நல்லதில்லை. உன்னை முதன் முதலில் பார்த்தவன், தனது திறமையை நிரூபிப்பதில் தான் கவனம் செலுத்தினானே தவிர, உனக்கு அது பிடிக்குமா பிடிக்காதா என்பதை பற்றியெல்லாம் அவன் யோசிக்கவில்லை. அவனிடம் உனக்கு கொடுப்பதற்கு அன்போ அக்கறையோ எதுவும் இல்லை”.“இரண்டாமவன் மிகப் பெரிய பணக்காரன். அவனிடம் உள்ள செல்வம் காலத்தால் அழியக்கூடியது. பணத்தால் எதையும் வாங்க முடியும் என்கிற மனப்பான்மை அவனிடம் இருக்கிறது. பணத்தால் உனக்கு வசதியான வாழ்க்கை கிடைக்குமே தவிர மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு, மனநிறைவான வாழ்க்கைக்கு அதையும் தாண்டி சில விஷயங்கள் தேவை. அதை அவனால் அளிக்க முடியாது.”“மூன்றாமவன் உன்னை சற்று களிப்புடன் வைத்திருந்தான். ஆனால் உன் தோழிகளுடனும் நண்பர்களுடனும் செல்லும்போது கூட உனக்கு அந்த களிப்பும் மகிழ்ச்சியும் கிடைக்காதா என்ன? மேலும் இவன் கடமையை மறந்துவிட்டான். நம் கண் முன்னே உள்ள சவால்களையும் கடமைகளையும் இப்படி புறக்கணிப்பது சரியல்ல. காரணம், நமது மகிழ்ச்சியான தருணங்கள் முடிந்தவுடன் அவை மீண்டும் நம் முன்னே வரும். மைதானத்தில் குதிரை எப்படி அடக்கப்படுவதற்கு காத்திருந்ததோ அதே போல பிரச்னைகளும் வாழ்க்கையில் காத்திருக்கும். அவற்றை சந்தித்தே தீரவேண்டும்!”“நான்காம் நபர் மிக பெரிய கலைஞன். திறமைசாலி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவனிடம் உனக்கோ எதிர்காலத்தில் அவன் உன்னிடம் கொள்ளக் கூடிய பந்தத்திற்கோ கொடுப்பதற்கு ஒன்றுமில்லை.”“ஆனால், ஐந்தாவதாக வந்தானே அவன் தான் உன் உணர்வுகளை புரிந்துகொண்டான். குதிரை மீது நீ கொண்டிருந்த அச்சத்தை கவனித்து அதை போக்குவதற்கு முயற்சித்தவன் அவன் மட்டுமே. அவன் போட்டியில் ஜெயித்தானா இல்லையா என்பது பிரச்னையல்ல. ஆனால் குதிரையை அடக்க முயற்சித்த போராட்டத்தில் நீங்கள் இருவரும் ஒன்றாக இருந்தீர்கள். ஒன்றாக விழுந்தீர்கள். கற்றுக்கொண்டீர்கள். இது தான் வாழ்க்கை துணை என்பதற்கு சரியான அர்த்தம் மகளே!” என்றார்.‘வாழ்க்கை துணை’ என்ற சொல்லுக்கு தகுதியானவர் அழகும் செல்வமும் செல்வாக்கும் திறமையும் கலைத்திறனும் நகைச்சுவை உணர்வும் கொண்டவர் அல்ல. உங்கள் பலத்தையும் பலவீனத்தையும் புரிந்துகொண்டு கடினமான காலகட்டங்களில் உங்களுடன் இருந்து உங்கள் ஆற்றலை வெளியே கொண்டு வரக்கூடியவர் எவரோ அவரே ‘வாழ்க்கைத் துணை’ என்ற பதத்திற்கு உண்மையான அர்த்தம் கொண்டவர்.புறத்தோற்றம், பணம், உத்தியோகம், வசதி வாய்ப்புக்கள் இதெயெல்லாம் அளவுகோலாக வைத்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்தவர்கள் பலர் ஒன்று உதை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது நீதிமன்றத்தின் படியேறிக்கொண்டிருக்கிறார்கள்.
- 586
Added article
பிரபல தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத். இவர், போக்கிரி, பிசினஸ் மேன், டெம்பர் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். 2022-ம் ஆண்டில், பான் இந்தியா படமாக ‘லைகர்’ படத்தை இயக்கி இருந்தார். இதில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடித்திருந்தனர். இதையடுத்து அவர் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில் அதைப் படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை சார்மியுடன் இணைந்து புரி ஜெகன்நாத் தயாரிக்கிறார். இதில் விஜய் சேதுபதி இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடந்துவரும் நிலையில், ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
- 594