Ads
வடமராட்சி வயல்கள்
வடமராட்சி வயல்கள்
Empty
முள்ளிவாய்க்கால் அவலம் எதிர்காலத்திற்கான படிப்பினையாக அமைய வேண்டும் என்று இன்று(18.05.2025) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், உப்பு மாபியாவிற்கும் முடிவு கட்டப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.மேலும், "முள்ளிவாய்க்கால் அவலம் நினைவு கூரப்பட்டு வருகின்றது. 2009 ஆண்டு இதே காலப் பகுதியில் இடம்பெற்ற முள்ளிவாய்கால் அவலம் காரணமாக ஆயிரக்கணக்கான எமது மக்கள் உயிரிழந்திருந்தனர். அவ்வாறு உயிரிழந்தவர்களை நினைவுகூருவதும் அவர்களுக்கான பிரார்த்னைகளை முன்னனெடுப்பதும் யாராலும் விமர்சிக்கப்பட முடியாதது. அதேபோன்று அந்த பேரவலம் தொடர்பாக அடுத்த சந்ததிக்கும் கடத்தப்பட வேண்டும் என்பதற்காக முள்ளிவாய்க்கால் கஞ்சி பல்வேறு இடங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றது.இவ்வாறான நினைவேந்தல் நிகழ்வுகள், எமது இனத்தின் எதிர்காலத்திற்கான படிப்பினைகளாக அமைய வேண்டும். இவ்வாறான அவலங்கள் எவ்வாறு இடம்பெற்றன? இந்த அவலத்தை தடுப்பதற்கான முயற்சிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன? முள்ளிவாய்க்கால் பேரவலத்தை எம்மால் தடுத்து நிறுத்தியிருக்க முடியாதா? போன்ற கேள்விகளுக்கு சுயவிமர்சன அடிப்படையில், பதில்களை கண்டறிந்து அவற்றையும் எமது அடுத்த சந்திக்கு கடத்துவதன் மூலம், எதிர்காலத்தில் எமது மக்கள் இந்த மண்ணில் கௌரவமாக வாழ்வதற்கான சூழலை உறுதிப்படுத்த முடியும்.ஆனால், முள்ளிவாய்க்கால் அவலம் போன்ற நிகழ்வுகள், சில தரப்புக்களினால் தங்களின் குறுகிய அரசயல் நலன்களுக்கும் சுய விளம்பரத்திற்கும் பயன்படுத்தப்படுவது வேதனையான விடயம். இதனை மக்கள் புரிந்து கொண்டு இவ்வாறான நிகழ்வுகளை அறிவுசார்ந்து சிந்தித்து புத்திசாதுர்யமாக கையாள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அதேபோன்று, யுத்தம் நிறைவடைந்த சூழலில் ஆனையிறவு உப்பளத்தினை மீளச் செயற்படுத்துவதற்கான முயற்சிகளை அப்போது பாரம்பரிய சிறுகைத்தொழில் முயற்சி அமைச்சராக இருந்த எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்னெடுத்திருந்தார். அவரின் முயற்சியினால் வடக்கின் வசந்தம் செயற்றிட்டத்தின் ஊடாக 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ப்பட்டு வேலைகள ஆரம்பிக்கப்பட்டிருந்தன. எனினும், 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னரே ஆனையிறவில் உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பு, மாந்தை போன்ற பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பதனிடப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டு வநதது.இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஆனையிறவில் உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பை ஆனையிறவிலேயே பதனிடுவதற்கான இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வேலைகள் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. எனினும், புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும், அதுவரையில் ஆனையிறவில் பதனிடல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.அதேவேளை கடந்த சில தினங்களாக ஆனையிறவு உப்பு உற்பத்தியில் ஈடுபடும் பணியாளர்கள், தமக்கு தொடர்ச்சியாக தொழில் வழங்கப்படுவதில்லை எனவும், அடிப்படை உரிமைகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை எனவும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.ஆகவே, உப்பை பதனிடுவதற்காக புதிதாக பொருத்தப்பட்ட பதனிடும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டமை, வாரம் முழுவதும் உப்பு உற்பத்தியில் ஈடுவதற்கான சூழல் இருக்கின்ற போதிலும், பணியாளர்களின் வேலை நாட்கள் மட்டுப்படுத்தல் போன்ற செயற்பாடுகளின் பின்னணியில் உப்பு மாபியா செயற்படுகின்றதோ என்ற பாரிய சந்தேகம் உருவிகியுள்ள நிலையில், அவை தொடர்பாக உரிய விசாரணை முன்னெடுக்கப்பட்டு பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்" என்று தெரிவித்துள்ளார்
- 73
செய்த தவறுக்கு, தண்டனை வழங்குவதில் இறைவன் சரியான நீதிபதி. இதற்கு, மஹாபாரத்திலேயே உதாரணம் இருக்கிறது.குருஷேத்திரம் யுத்தம் முடிந்துவிட்டது. ஹஸ்தினாபுரத்து அரசனாக, தருமன் முடிசூட்டிக் கொண்டு விட்டான். பாண்டவர்களின் வம்சத்தையே அழிக்க முயன்றதால், மன நிம்மதியின்றி, துரோணரின் மகன், அஸ்வத்தாமன் அலைந்து கொண்டிருந்தான். அவன் மனதில் ஒரு சந்தேகம் ஆட்டிப்படைத்தது. ‘என் தந்தை சத்தியவான்; செஞ்சோற்று கடன் தீர்ப்பதற்காகவே, துரியோதனனுக்கு ஆதரவாக போர் புரிந்தார். ஆனால், அவரை, பாண்டவர்கள், நான் இறந்ததாக பொய் சொல்லி, அநியாயமாக கொன்று விட்டனர். என் தந்தை செய்த தவறு என்ன’ என, மனதுக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தான். ஒருநாள், கிருஷ்ண பரமாத்மாவை சந்தித்தான். கிருஷ்ணன் மீது அவனுக்கு கோபம் இருந்தது. அதனால், அவனிடமே, தன் மனதில் இருந்த சந்தேகத்தை கேட்டான். ‘என் தந்தையை பாண்டவர்கள் அநியாயமாக கொன்றதற்கு நீதானே காரணம். அவர் செய்த தவறு என்ன?’ என கேட்டான்.கிருஷ்ணன் சிரித்து விட்டு, ‘செய்த பாவத்துக்கு யாராக இருந்தாலும், தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும்’ என்றான். ‘அப்படி என்ன என் தந்தை பாவம் செய்துவிட்டார்’ கேட்டான் அஸ்வத்தாமன். கிருஷ்ணன் மீண்டும் சிரித்தான்.'உன் தந்தை, அனைத்து சாஸ்திரங்களையும் கற்றவர். ஆனால், ஏழையாக இருந்தார். அவரை, கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் குருவாக, பீஷ்மர் நியமித்தார். அதன் பின் தான், அவரது வாழ்க்கையில் வளம் ஏற்பட்டது.கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் சகல, வில்வித்தை உட்பட அனைத்தையும் கற்றுக் கொடுத்தார் உன் தந்தை. ஒருநாள் அவரை ஏகலைவன் என்ற வேடுவர் இனத்தை சேர்ந்த சிறுவன் சந்தித்தான். ‘எனக்கும் வில்வித்தை கற்றுக் கொடுங்கள்’ என, உன் தந்தையிடம் கேட்டான்.அரச குமாரர்களுக்கு சொல்லி தருவதால் ஏகலைவனுக்கு கற்று தர, துரோணர் மறுத்துவிட்டான். ஆனால், ஏகலைவன், உன் தந்தையை போல் மண்ணில் சிலை செய்து, குருவாக வழிபட்டு, வில்வித்தையை தானாக கற்றுக் கொண்டான். சில ஆண்டுகளுக்கு பின், ஒரு சந்தர்ப்பத்தில், ஏகலைவனின் வில் வித்தை திறமை, அர்ஜூனனுக்கு தெரிந்தது. அவன், துரோணரிடம் கோபம் அடைந்தான். ஏகலைவன் தானே கற்றுக் கொண்டதை அர்ஜுனனிடம் தெரிவித்து, அவனை உன் தந்தை சமாதானப்படுத்தியிருக்க வேண்டும்.ஆனால், என்ன செய்தார். வில்வித்தைக்கு மிகவும் தேவையான, கட்டை விரலை, குரு காணிக்கையாக, ஏகலைவனிடம், உன் தந்தை கேட்டார். அவனும், மகிழ்ச்சியாக கொடுத்து, குரு பக்திக்கு நீங்காத புகழை பெற்றார்.அரண்மனை பணி போய்விடும் என்ற சுயநலத்தில் உன் தந்தை, சுயநலமாக நடந்து கொண்டு, ஒரு வேடனின் திறமையை பாழடித்தார். ஏகலைவனுக்கு பெருமை கிடைத்தாலும், அவனது எதிர்காலம் வீணானதுக்கு, உன் தந்தை தான் காரணம். இந்த பாவம் தான், உன் தந்தையை, போர்களத்தில், மகன் இறந்ததாக எண்ணி ஏற்பட்ட சோகத்தில் மரணமடைய வைத்தது. துரோணர், தியானத்தில் இருந்த போது, அவரை திரவுபதியின் சகோதரரன் அநியாயமாக கொலை செய்தான். அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால், பாணடவர்கள், தங்களின் வாரிசுகளை இழந்தனர் என்று கூறி நிறுத்தினான் கிருஷ்ணன். உண்மைதான் என ஒப்புக் கொண்ட அஸ்வத்தாமன், ‘நீ நினைத்திருந்தால், இந்த யுத்தம் நடக்காமல் தடுத்திருக்கலாம். ஆனால் ஒரு வம்சமே அழிவதை வேடிக்கை பார்த்தாய். உனக்கு தண்டனை கிடையாதா ’என, கேட்டான் அஸ்வத்தாமன்.‘ஏன் இல்லை . ஒரு வம்சம் அழிவதற்கு காரணமாக இருந்ததால், என் வம்சம் அழிவதை பார்த்த பின் தான் எனக்கு மரணம் ஏற்படும்’ என்றான் கிருஷ்ணன். உண்மைதான், யாதவ வம்சம் அழிந்து, காட்டில் தனிமையில்* தியானத்தில் அமர்ந்திருந்த போது, மான் என நினைத்து வேடன் எய்த அம்பால் ,கிருஷ்ணின் உயிர் பிரிந்தது. செய்த தவறுக்கு, தெய்வமாக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆம், உப்பு தின்னவன், தண்ணீர் குடித்து தான் ஆகனும்.
- 262
மேஷம்மனதளவில் உற்சாகம் ஏற்படும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் கிடைக்கும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடும். மருத்துவம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வான சூழல் அமையும். தடைப்பட்ட வேலைகளை முடிப்பீர்கள். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு ரிஷபம்மனதில் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டும் நீங்கும். செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நண்பர்களிடத்தில் அதிக உரிமைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். உத்தியோகப் பணிகளில் திருப்பங்கள் ஏற்படும். சில இழுபறிகளுக்கு பின்பு எதிர்பார்த்த வரவுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடத்தில் பொறுமை வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம் மிதுனம்குழந்தைகளால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பயணங்களின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். உயர்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஊதா கடகம்பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் ஈடேறும். கலைத்துறையில் பொறுமை வேண்டும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சமூகம் பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். கவலை விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் சிம்மம்எழுத்துத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளால் அலைச்சல்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். நேரம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். சுகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு கன்னிமனதளவில் தெளிவு ஏற்படும். குடும்பத்தில் ஆதரவு உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் சரிவை சரி செய்வதற்கான சூழல் உண்டாக்கும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். மாற்றம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு துலாம்சவாலான விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் சிலருக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். அரசு தொடர்பான விஷயங்களில் அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரத்தில் நிதானத்தை கையாளவும். உத்தியோகத்தில் சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். எதையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும். மறதி விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை விருச்சிகம்நண்பர்களுக்குள் அனுசரித்து செல்லவும். உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் வரவுகள் உண்டாகும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் மதிப்பு உயரும். பொன், பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். ஞாபக மறதி சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். துணிவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் தனுசுஉடலில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். கனிவான பேச்சுகள் நன்மதிப்பை உண்டாக்கும். கடன் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வீடு மாற்றம் குறித்ததான எண்ணங்கள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களால் மாற்றமான தருணங்கள் உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் மகரம்நினைத்த பணிகளில் தாமதம் உண்டாகும். சகோதரர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சில மாற்றமான சூழல் அமையும். முயற்சி ஈடேறும் நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் கும்பம்மனதளவில் உற்சாகம் பிறக்கும். பெற்றோரின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பூமி விருத்திக்கான சூழல் ஏற்படும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். மற்றவர்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் மதிப்பு உயரும். இரக்கம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம் மீனம்பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உறவுகள் வழியில் ஆதாயம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை தரும். மருத்துவப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். சொத்து சேர்க்கை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையாட்களின் மாற்றம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை
- 298
விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 3 ஆம் தேதி சனிக்கிழமை 17.5.2025.இன்று அதிகாலை 03.34 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.இன்று மாலை 03.49 வரை பூராடம். பின்னர் உத்திராடம்.நட்சத்திரம் : இன்று மாலை 03.49 வரை பூராடம். பின்னர் உத்திராடம்.நாமயோகம் : இன்று அதிகாலை 05.20 வரை சாத்தியம். பிறகு சுபம்.கரணம் : இன்று அதிகாலை 03.34 வரை பாலவம். பின்னர் மாலை 03.34 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.அமிர்தாதியோகம்: இன்று முழுவதும் சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 07.30 முதல் 08.30 மணி வரை காலை : 10..30 முதல் 11.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
- 308
இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த ஹர்ஜீத் சிங் (Harjit Singh Dhadda, 50), கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள Mississauga நகரில் ட்ரக் சேவை நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். இந்நிலையில், புதன்கிழமை தனது அலுவலகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த தனது காரின் அருகே சிங் நின்றுகொண்டிருக்கும்போது, அங்கு ஏற்கனவே கார் ஒன்றில் காத்திருந்த சிலர் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்கள்.இந்த சம்பவத்தைக் கண்ணால் கண்டவர்கள், அந்த நபர்கள் சிங்கை நோக்கி 15 முதல் 16 முறை சுட்டதாகவும், பின்னர் தாங்கள் வந்த காரிலேயே தப்பியோடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த சிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதற்கிடையில், சிங்குக்கு ஏற்கனவே கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. பொலிசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடிவருகிறார்கள்.
- 519
நடிகை ருக்மிணி விஜயகுமாரின் காரில் இருந்து வைர மோதிரங்கள் உட்பட ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், கப்பன் பார்க் காவல்துறையினர் முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளனர். பெங்களூருவில் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரியும் முகமது மஸ்தான் என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட அனைத்துப் பொருட்களையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
- 548
இலங்கை மலையகத்தில் வாழும் மலையகத் தமிழ் மக்களுக்கு காணி உரிமங்கள் வழங்கப்பட்டு அவர்களும் இன் நாட்டின் இறைமை மிக்க மக்களாக வாழ்வதற்கு அனுர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரத தேசத்தில் செயற்பாடுகளை முன்னெடுக்கும் காந்திய சமதர்ம இயக்கத்தின் (இந்தியா) அரசியல் ஆலோசகர் சட்டத்தரணி சிவஞானசம்பந்தம் வலியுறுத்தியுள்ளார்.இலங்கையில் பல்வேறு இடர்பாடுகளுடன் வாழும் மலையக மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை காணுவது தொடர்பில் அக்கறை கொண்டு தாம் இங்கு வந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அப்பிரச்சினைகளை இனங்கண்டு வெளிக்கொணரும் வகையிலேயே யாழ் ஊடக அமையத்தில் குறித்த சந்திப்பை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.இது குறித்து அவர் மேலும் கூறுகையில் - மலையக மக்கள் இலங்கையின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் பெரும் சக்தியாக இருக்கின்றபோதும், அவர்களின் வழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் அரசுகள் எதனையும் செய்வதில்லை.இதனால் நாளந்த வருமானத்தை பெறுவதில் கூட பெரும் அசௌகரியங்களை சந்திக்க நேரிடுகின்றது. இந்த நிலையை அரசு மாற்றி அமைக்க வேண்டும். இந்த கோரிக்கையை இந்திய தரப்பினருக்கும் முன்வைக்க இருக்கின்றேன்.மலையக மக்களுக்கு அரசினால் இலவச வீடுகள் கட்டிக் கொடுக்கபடுகின்றன. ஆனால் அவ்வீடுகளுக்கான காணி உரிமங்கள் அவர்களுக்கு சொந்தமானாதாக இல்லை.இருப்பிடங்களுக்கான தனியான முகவரிகள் கூட பலருக்கு இல்லை.அதுமட்டுமல்லாது வறுமையின் கரணமாக கல்வியைக் கூட இடை நடுவில் கைவிடும் நிலையில் வாழ்கின்றனர்.இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்பட வேண்டியது அவசியம். இந்தப் பிரச்சினைக்கு அனுர தலைமையிலான இன்றையாரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகின்றோம்.இதேனேரம் இந்திய கடற்றொழிலாளர் இலங்கை கடற்ரப்பில் நுழைந்து கடல் வளங்களை சூறையாடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடையம். இலங்கை தொழிலாளர்கள் நிம்மதியாக வாழ நிரந்தர ஏற்பாடுகள் அவசியம். இது தொடர்பில் தமிழக அரசுடனும் கோரிக்கைவிட இருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
- 698
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவர்கள் மீது அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தாக்கியதில் 5க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆண் ஆசிரியர், வகுப்பு ஒன்றிற்கு சென்று சத்தம் எழுப்பிய மாணவர்கள் யார் என கேள்வி கேட்டபோது மாணவர்கள் பதில் வழங்காத நிலையில் மாணவர்கள் மீதுகதிரையால் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரை தொடர்பு கொண்டு கேட்டபோது ஆசிரியர் மாணவர்கள் மீது தாக்கியது உண்மை எனவும் ஆனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவித்தார்.சம்பவம் தொடர்பில் பாடசாலை என்ற வகையில் நிர்வாக ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தாம் எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
- 792
யாழ். அரியாலை - செம்மணி சிந்துபாத்தி மயானத்தில், மனித எச்சங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று (15) முதல் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. செம்மணி ௲ சிந்துபாத்தி மயானத்தில், கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காகக் குழிகள் வெட்டப்பட்ட போது, அதற்குள் இருந்து மனித எலும்பு எச்சங்கள் அவதானிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி சம்பவ இடத்தில் நீதவான் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். இதன்போது, மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஸ்கேன் ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று (15) அங்கு அகழ்வாய்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதிகளில் அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு, மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டன. தொடர்ந்து வரும் நாட்களில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன000
- 795
இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த 4 இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த ஆண், பெண் மற்றும் இரு சிறுமிகள் என நால்வர் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்குச் சென்ற நிலையில் , இந்தியக் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு , மண்டபம் அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த நால்வரும் இந்தியாவிலிருந்து மீண்டும் இலங்கைக்குச் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாகத் திரும்பியுள்ளனர். சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த காவல்துறையினர் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் புகுந்த நால்வரையும் , அவர்களை அழைத்து வந்த படகோட்டிகளையும் கைது செய்து, வல்வெட்டித்துறை காவல்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.000
- 793
இலங்கையில் சிறுவர்களிடையே தற்போது இன்ப்ளூயன்ஸா, டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்குன்குனியா ஆகிய மூன்று நோய்களின் பாதிப்பும் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த விடுமுறை நாட்களில் சிறுவர்கள் அதிகமாக பயணம் செய்தமை மற்றும் அதிக கொண்டாட்டங்களில் ஈடுபட்டமையே இதற்கு காரணமாகும்.இந்த வைரஸ் நோய்களில், இன்ப்ளூயன்ஸாவின் பாதிப்பு அதிகமாக காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மழையுடனான காலநிலை மற்றும் நுளம்புகளின் அதிகரிப்பு காரணமாக பல தொற்று நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு நோய்களின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சிக்குன்குனியாவின் அறிகுறிகளில் காய்ச்சல், கடுமையான மூட்டு வலி, உடல் வலிகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில், மூக்கில் ஏற்படும் கறுப்பு நிற அடையாளம், கைகள் மற்றும் கால்களில் கருப்பு புள்ளிகள் ஆகியவை அடங்கும்.மேலும், டெங்கு காய்ச்சலும் அதிகரித்து வருவதால், சுகாதாரத் துறை விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.எனவே, அத்தகைய சிறுவர்களை, மாணவர்கள் கூடும் பிற இடங்களுக்கும் அனுப்புவதற்கு முன்பு, அவர்களை குணப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது000
- 775
அச்சுவேலி விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கையின் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எடுத்துரைக்கும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அச்சுவேலி, பத்தைமேனி விவசாயிகள் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரிடம் எடுத்துரைகும் கலந்துரையாடலை இன்று பத்தைமேனி பொது நோக்கு மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்தனர். இதன் போது விவசாயிகள் கடந்த காலத்தில் தமக்கு உரமானியம், விவ்வசாய உள்ளீடுகளுக்கான மானியம் போன்றவை வழங்கப்பட்டது. ஆனால் இன்று எது வகையான மானியங்களும் வழங்கப்படுவதில்லை. அத்துடன் வழங்கப்படும் விவசாய உள்ளீடுகள் கிருமிநாசினிகள் தரமற்றவை. இதனால் தமது உற்பத்திகளில் பாரிய மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடுவதாக எடுத்துரைத்தனர். குறிப்பாக வெங்காய உற்பத்தி, உருளைக்கிழங்கு உற்பத்திகளின்போது விளைச்சலைப் பெறுகின்ற காலத்தில் அரசாங்கம் தடைகளின்றி வெளிநாடுகளில் இருந்து வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை இறக்குமதி செய்கிறது. இதனால் எமது உற்பத்திக்கு கேள்விகளற்றுப் போய் விடுகிறது. எனவே இவ் விடயங்களை பாராளுமன்றில் எடுத்துரைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதற்குப் பதிலளித்த சிவஞானம் சிறிதரன்,விவசாயிகளின் உற்பத்திகள் பாதிப்படைவது போல் கடல்வளங்களும் வெளிநாட்டு இந்திய மீனவர்களினால் அழிக்கப்படுகிறது. இங்கு உங்களது உற்பத்திகளுக்கு கேள்விகளற்றுப் போகிறது. வெளிநாட்டு உற்பத்திகள் இறக்குமதி செய்யப்படுவதால் உள்ளூர் உற்பத்திகள் தேங்கி அழிவடைந்து செல்கிறது. குறித்த விடயங்கள் பற்றி நிச்சயமாக பாராளுமன்றில் எடுத்துரைப்பேன் என்றார். 000
- 778
ஒரு உப்புப் பாக்கெட் 60 ரூபாயாக விலை நிர்ணயம் செய்ய 76 ஆண்டுகள் ஆனது என்றும், எனினும், 60 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக மாற வெறும் ஏழு மாதங்கள் மட்டுமே ஆனது என்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கூறுகிறார்.மற்ற அரசாங்கங்கள் எவ்வளவுதான் இலஞ்சம் கொடுக்க முயன்றாலும், ஒரு பாக்கெட் உப்பு அல்லது ஒரு கிலோ அரிசிக்கு ஒருபோதும் லஞ்சம் கொடுத்ததில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், தற்போதைய அரசாங்கத்தின் எந்தவொரு திறமையின்மைக்கும் முந்தைய அரசாங்கங்கள் மீது பழி சுமத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.மோசடி மற்றும் ஊழல் இல்லாதது என்று கூறும் அரசாங்கம், உண்மையில் அவ்வாறு செய்வதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தினால், ஒரு பாக்கெட் உப்பு, ஒரு கிலோ அரிசி மற்றும் ஒரு தேங்காய் எப்படி இவ்வளவு விலை உயர்ந்ததாக இருக்கும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கவுள்ளதாகவும், இதுபோன்ற சூழ்நிலையில், பொது மக்களின் வாழ்க்கை மட்டுமல்ல, முழு தொழில்துறை அமைப்பும் பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் லாபம் ஈட்டிய மின்சார சபை, 7 மாதங்களில் எப்படி நஷ்டத்தைச் சந்தித்திருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். எதிர்காலத்தின் மின் கட்டணம் இன்னும் அதிகரிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.000
- 808