
அமலா பால் வீட்டில் கல்யாணம்
சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி அவரது முதல் படமாக இருந்தாலும் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘மைனா’ படம் மூலம் அமலா பால் ரசிகர்களால் அதிகம் புகழ் பெற்றார். அது மட்டுமல்லாமல் இந்தப்படம் அமலாவிற்கு நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது. இந்த படத்தில் நடித்ததற்காக அமலா சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதைப்பெற்றார். இந்த படத்திற்காக தம்பி ராமையாவிற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
அதன்பின்னர் தெய்வ திருமகள், தலைவா, பசங்க 2 என விஜய், சூர்யா, விக்ரம் ஆகிய முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து இவரும் முன்னணி நடிகையானார். மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே 2014ல் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், மூன்றே ஆண்டுகளில் இவரது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. பின்னர் கடந்த ஆண்டு பவீந்தர் சிங் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள அதோ அந்த பறவை போல் படம் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர மலையாளப்படம் ஒன்றிலும் நடித்துவருகிறார் அமலா பால். இந்நிலையில் நடிகை அமலா பாலின், தம்பி அபிஜித் பாலுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. இதனை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார் அமலா பால்.
மேலும் இந்த வீடியோவில் தனது தம்பியை திருமணம் செய்யவிருக்கும், மணப்பெண்ணையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். ரசிகர்கள் பலரும் இதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva