காது குத்திக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட நயன்தாரா
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் துபாய்க்குச் சென்றுள்ளார். அங்கு நடந்த சைமா விருதுகள் 2024 விழாவில் கலந்து கொண்ட அவர்கள், இன்னும் இந்தியாவுக்குத் திரும்பவில்லை. அங்கு எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தினமும் தங்களது இன்ஸ்டாகிராமில் இருவரும் பகிர்ந்து வருகின்றனர்.
நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமில் தான் காது குத்திக் கொண்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றது. ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த ஜவான் திரைப்படம் சக்கை போடு போட்டு ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை அள்ளி குவித்தது. நயன்தாரா நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் அன்னபூரணி ஓரளவுக்கு வசூல் செய்தது.
அன்னபூரணி படத்தில் நடித்ததற்காக அவருக்கு, 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான சைமா விருது வழங்கப்பட்டது. அதேபோல் கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெளியான, ஜெய்லர் படத்தில் ரத்தமாரே பாடலை விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார்.
அவருக்கும் சிறந்த பாடலாசிரியருக்கான சைமா விருது கொடுக்கப்பட்டது. சைமா விருதுகள் 2024 நிகழ்ச்சியில் நயன்தாராவுக்கு விருது வழங்கப்பட்ட பின்னர் மேடைக்குச் சென்ற விக்னேஷ் சிவன், நயனுக்காக தனது படத்தில் இடம் பெற்றுள்ளா பாடலான, கண்ணான கண்ணே பாடலை பாடினார்.
கண்ணான கண்ணே நீ கலங்காதடி என்ற வரிகளை விக்னேஷ் சிவன் பாடப் பாட நயன்தாரா அழுதார். உடனே நயனைக் கட்டிப்பிடித்த விக்னேஷ் சிவன் அவரது நெற்றியில் முத்தம் வைத்தார். இந்தக் காட்சிகள் பார்ப்பதற்கு மிகவும் ரொமாண்ட்டிக்காக இருந்தது. இணையத்தில் வேகமாக பரவியது.
விருது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற நயன்தாரா - நயன் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். காது குத்தும் கடைக்குச் செல்லும் நயன், அங்கு தனக்குப் பிடித்த தோடை தேர்வு செய்கின்றார். அதன் பின்னர் அங்கிருக்கும் ஊழியர்கள், நயனுக்கு அந்த தோடை குத்தி விடுகின்றனர்.
நயனுக்கு காதில் இருந்து ரத்தம் வருகின்றது. அப்போது, விக்னேஷ் சிவன் எழுதிய ரத்தமாறே பாடலைப் பாடி க்யூட்டான ரியாக்ஷன் கொடுக்கின்றார். நயன் தனது வலது காதில் இரண்டு தோடுகள் குத்தியுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva