நடிகை பார்வதியின் நற்குணம்
தங்கலான் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகை பார்வதி பேசினார். மேடைகளில் அவர் அரசியல் சரித்தன்மையோடு பேசுவதில் ஆச்சரியமில்லை. ஆனால், இந்நிகழ்ச்சியில் அவரிடம் இன்னொரு விஷயம் மிகவும் கவனிக்க வைத்தது.
தற்போது ஆடியோ வெளியீட்டு விழா என்ற பெயரில் நடக்கும் பெரும்பாலான விழாக்கள் உண்மையில் பாடல்களை மையமாகக் கொண்டு நடப்பவை அல்ல. படத்திற்கு ஒரு விளம்பரம் தேவை; அதற்காக ஒரு நிகழ்ச்சி. இதுவே யதார்த்தம். இது எல்லோருக்குமே தெரிந்த விஷயமும்கூட!
ஆனால், பெயரளவில் மட்டும் அதன் பெயர் 'ஆடியோ வெளியீட்டு விழா'. ஆனால் பெயரளவுக்கு நடக்கும் இந்த விழாக்களில் சும்மா பெயரளவுக்கு, சம்பிரதாயத்துக்காவது இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள் பற்றிப் பேசுவதுதான் அடிப்படை நாகரிகம். அறமும்கூட.
ஆனால் பெரும்பாலான படங்களின் ஆடியோ வெளியீடு அப்படி நடப்பதே இல்லை. சில நடிகர்களுக்குத் தங்கள் படத்தின் பாடலாசியர்கள் யார், யார் என்றுகூட தெரியவில்லை!
சில ஆண்டுகளுக்கு முன்பு, காலா படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா பிரம்மாண்டமாக நடந்தது. சக நடிகர்கள், தயாரிப்பாளர், தவளைக் கதை, குதிரையோட்டம், நதிநீர் இணைப்பு, தத்துவம், உலகம், அறிவு, குடும்பம், பொருளாதாரம் குறித்தெல்லாம் பேசிய ரஜினி, படத்துக்குத் தொடர்பே இல்லாத நபர்கள் பற்றியும்கூட பேசினார். ஆனால் கடைசி வரை, இசை பற்றி மட்டுமல்ல; 'சந்தோஷ் நாராயணன்' என்ற பெயரைக்கூட அவர் உச்சரிக்கவில்லை. சுத்தமாகவே மறந்துவிட்டார். (நிகழ்ச்சியை நேரில் பார்க்கவில்லை; யூடியூப்பில் அப்படித்தான் உள்ளது) 'கல்யாண அவசரத்துல தாலி கட்ட மறந்த கதை' என்ற சொலவடை ஒன்று உண்டு. அந்த காலா ஆடியோ ரிலீஸ் விழா(?)வைக் கண்டபோது அதுதான் நினைவுக்கு வந்தது. கண்டிப்பாக
ரஜினி திட்டமிட்டு அதைச் செய்திருக்க வாய்ப்பில்லை. ஜஸ்ட் மறந்திருப்பார் அவ்வளவுதான்.
ஆனால் ரஜினி போன்ற ஓர் உச்ச நடிகரின் பட விழாவில் நடந்த அந்த சம்பவம் எவ்வளவு அபத்தமான ஒன்று என குறிப்பிடவே அதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. சந்தோஷ் நாராயணனின் இடத்தில் இருந்து பார்த்தால்தான் இதை உணர முடியும்.
இப்போது பார்வதி விஷயத்துக்கு வருவோம்.
தங்கலான் ஆடியோ ரிலீஸ் விழாவில் பேச வருகிறார் பார்வதி. தமிழ் சினிமாவின் ஆடியோ ரிலீஸ் விழாக்கள் இருக்கும் நிலையைப் பார்த்தால், விழாவில் இசையமைப்பாளர் பற்றி ஒருவர் எப்போது வேண்டுமானாலும்கூட பேசலாம். எப்படியோ அட்லீஸ்ட் பெயரையாவது சொன்னால் சரிதான் என்ற நிலைதான் உள்ளது.
ஆனால், பார்வதி தனது பேச்சைத் தொடங்கும்போதே முதலில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குறித்து பேசிவிட்டுத்தான் மற்றவர்கள் பற்றிப் பேசவே ஆரம்பித்தார்.
நடப்பது படத்தின் ஆடியோ வெளியீடு. அந்நிகழ்ச்சியின் நாயகன்- இசையமைப்பாளர்தான். அந்த வகையிலேயே அவரை முதலில் குறிப்பிட்டுப் பேசினார் பார்வதி. அதன் பிறகே ஏனையோர் பற்றி அவர் பேசுகிறார். இத்தனைக்கும் அவர் ஒரு வளரும் இளம் நடிகைதான்!
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva