பிக் பாஸ் சீசன் 8 - தொகுப்பாளராக களமிறங்கும் மாஸ் நடிகர் யார் தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில், பிக் பாஸ் எட்டாவது சீசனை யார் தொகுத்து வழங்கப்போகிறார்கள் என்கிற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோ தானபிக் பாஸ். முதலில் இந்தியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி அதன் பின், தமிழ்,மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி இது வரை 17 சீசன்களை கடந்துள்ளது. இந்த 17 சீசனையும் சல்மான் கான் தொகுத்து வழங்கினார்.
எதிர்வரும் பிக் பாஸ் சீசனை நான் தொகுத்து வழங்க முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியின் மூலமாக என் மீது அன்பு மழை பொழிந்த எனது ரசிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என கமல் அறிக்கை வெளியிட்டு விட்டு விலகினார்.
கடந்த ஏழு சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் கொடுத்து வழங்கிய நிலையில் தற்போது அவர் வெளியேறி இருப்பது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அடுத்து யார் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் என்ற ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில், சிம்பு, சரத்குமார், சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி மற்றும் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரது பெயர்கள் தாறுமாறாக அடிப்பட்டன.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனை யாரும் எதிர்பார்க்காத வகையில், 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதாகவும் அதற்கு அக்ரிமெண்டில் கையெழுத்திட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே சன் தொலைக்காட்சியில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் நடுவராக இருந்தால், இந்த ஷோவை அவர் தொகுத்து வழங்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இன்னும் பத்து நாட்களில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva