
அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குநர் யார்?
ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து தயாராகியுள்ள படம் ‘ரத்னம்’. இந்த படம் வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்களையும் மோசமான வசூலையும் பெற்றுள்ளது. இதனால் விஷால் கேரியரில் மிக மோசமான வசூல் செய்த படமாக ரத்னம் அமைந்துள்ளது.
விஷால் அடுத்து துப்பறிவாளன் 2 மற்றும் முத்தையா இயக்கும் புதிய படம் ஆகியவற்றில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்குப் பிறகு விஷால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பயோபிக்கில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. சினிமா வட்டாரத்தினரும் இந்த தகவலை உறுதி செய்துள்ளனர். சமீபகாலமாக விஷால் பாஜகவுக்கு ஆதரவான கருத்துகளைப் பேசி வருகிறார். அதனால் பாஜகவினரான அண்ணாமலை பயோபிக்கில் அவர் நடிப்பது ஆச்சர்யமில்லை என்ற கருத்து எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘ரிபெல்’ என்ற படத்தை இயக்கிய நிகேஷ் இந்த படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. ஷூட்டிங் ஜனவரியில் தொடங்கும் என தெரிகிறது.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva