
நடிகை பானுப்ரியா எப்படி இருக்கிறார்?
கணவர் இறந்தபின் எல்லாமே மறந்திருச்சு... மனமும் வெறுமையாகிவிட்டது என்று கலங்கிய பானுப்ரியா தனக்கு நினைவாற்றல் குறைந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.
திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பானுப்ரியா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பானுப்ரியா, நடனத்திலும் சிறந்து விளங்கினார். இவர், கடந்த 1998-ம் ஆண்டு ஆதர்ஷ் கவுஷல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அபிநயா என்கிற மகளும் உள்ளார்.
இவர் கடைசியாக தமிழில் பாண்டிராஜ் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் மற்றும் அசோக் செல்வன் நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
அதன்பின் பட வாய்ப்புகள் இன்றி தவித்து வரும் நடிகை பானுப்ரியா, தனக்கு நினைவாற்றல் குறைந்துவிட்டதாக கூறி உள்ளார்.
“எனது கணவர் 2 ஆண்டுகளுக்கு முன் இறந்த பின்னர் எனக்கு நினைவாற்றல் மிகவும் குறைந்துவிட்டது. எதையும் நியாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. மனமும் வெறுமையாகிவிட்டது. ஷூட்டிங்கில் டயலாக் மறந்து போன சம்பவங்களும் நடந்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக தான் இப்படி நடக்கிறது” என கூறினார்.
தன்னைப் பற்றி பரவிய வதந்திகள் குறித்து அவர் பேசுகையில், நான் என் கணவனை விவாகரத்து செய்துவிட்டதாக செய்திகள் பரவின. அது எதுவும் உண்மையில்லை. தற்போது என் கணவர் உயிருடன் இல்லாததால் அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை. 3 ஆண்டுகளுக்கு முன் எனது உடல்நிலை குறித்தும் வதந்திகள் பரவின. அப்போது நடிகை ராதா பதறியடித்து வந்து என்னிடம் நலம் விசாரித்தார் என பானுப்ரியா தெரிவித்தார்.
தற்போது முழுநேரமும் வீட்டிலேயே இருப்பதாகவும், புத்தகம் படிப்பது, பாடல்களைக் கேட்பது, வீட்டு வேலைகளை செய்வது என தன்னை பிசியாக வைத்துக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
அதேபோல் அவரது ஒரே மகளான அபிநயா, தற்போது லண்டனில் பட்டப்படிப்பு படித்து வருவதாகவும் பானுப்ரியா கூறியுள்ளார்.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva