
சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு திருமணம்
சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறைவடைந்தது. இதை தொடர்ந்து இன்று இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
சமீப காலமாக, சின்னத்திரையில் ஒன்றாக இணைந்து நடிக்கும் பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. சிலர் ஒரே சீரியலில் ஹீரோ - ஹீரோயினாக நடிக்கும் போது, இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நிஜமாகவே ஒர்க் அவுட் ஆகி, அந்த காதல் திருமணத்தில் முடிகிறது.
சுந்தரி, இலக்கியா போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் அரவிஷ், கடந்த சில வருடங்களாக திருமகள் சீரியல் ஹீரோயின் ஹரிகாவை காதலித்து வந்தார்.
இவர்களின் காதலுக்கு பெற்றோர் பச்சை கொடி காட்டிய நிலையில், கடந்த ஆண்டு... இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் மிகவும் பிரமாண்டமாக நடந்தது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர்.
இதை தொடர்ந்து ஹரிகா மற்றும் அரவிஷ் திருமணம் இன்று கேரள முறைப்படி நடைபெற்றுள்ளது. ஹரிகா சிவப்பு நிற பட்டு புடவையில் அழகு தேவதை போல் ஜொலிக்க, அரவிஷ் பட்டு வேஷ்டி - பட்டு சட்டையில் மாப்பிள்ளையாக கெத்தாக இருக்கிறார். இவர்களின் திருமணம் குறித்த வீடியோவை இருவருமே சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva