பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனாவிற்கு வழங்கப்பட்ட காரின் விலை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பட்டம் பெற்ற அர்ச்சனாவிற்கு ரூபாய் 50 லட்சம் ரொக்க பணம், ஒரு வீடு போக கூடுதலாக மாருதி சுஸூகி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் பல்வேறு புதிய அம்சங்களை கொண்ட காராக இருக்கிறது.
தனியார் தொலைக்காட்சியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின்படி போட்டியாளர்களை ஒரு வீட்டில் போட்டு நூறு நாட்கள் அங்கேயே அடைக்கப்படுகிறார்கள். அங்கு அவர்கள் நடந்து கொள்ளும் விதமெல்லாம் கேமராவில் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.தமிழில் ஏழு ஆண்டுகளாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சி தமிழகத்தின் மிகப் பிரபலமான நிகழ்ச்சியாக இருக்கிறது.
இந்த ஆண்டு 7வது சீசனில் பல போட்டியாளர்கள் இந்த வீட்டிற்குள் இருந்தார்கள். பல்வேறு சம்பவங்கள் வீட்டிற்குள் அரங்கேறியது பலர் வெற்றி கனியை பறிப்பதற்காக பல்வேறு விதமான செயல்களில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் இந்த வீட்டில் ஒரு போட்டியாளராக இருந்த அர்ச்சனா மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் போட்டியாளராக களமிறங்கிய ஒரு சில நாட்களிலேயே மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.
இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளராக வீட்டில் இருந்து வெளியேறி சரியாக நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாள் வந்தது. இந்த நாளில் தான் பிக் பாஸ் போட்டியின் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். அதன்படி மக்கள் பலரும் எதிர்பார்த்த நிலையில் அர்ச்சனாவே பிக்பாஸ் சீசன் 7 போட்டியின் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுபவருக்கு ரூபாய் 50 லட்சம் ரொக்கம், ஒரு வீடு மற்றும் மாருதி சுஸூகி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது மக்கள் மத்தியில் இந்த கிராண்ட் விட்டாரா கார் குறித்து தான் அதிகம் பேசப்படுகிறது. மாருதி சுஸூகி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா காரை பொருத்தவரை அந்நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையாகவும் எஸ்யூவி கார்களின் ஒன்றாக இருக்கிறது.
இந்த கார் மொத்தம் 17 விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. சிக்மா, டெல்டா, ஸிட்டா, ஆல்ஃபா ஆகிய பெயர்களில் பல்வேறு விதமான ஆப்ஷன்களுடன் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. மார்க்கெட்டில் ரூபாய் 10.70 லட்சம் முதல் 19.92 லட்சம் என்ற விலையில் இந்த கார் விற்பனையாகி வருகிறது.
இந்த காரில் ஹைபிரிட் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்கள் உள்ளன. வேரியன்டை பொறுத்து இந்த காரின் மைலேஜ் மாறுபடும் குறைந்தபட்சம் 20.58 கிலோமீட்டர் முதல் 27.97 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கப்படுகிறது. இதன் இன்ஜினை பொறுத்தவரை 1462 முதல் 1490 சிசி திறன் கொண்ட இன்ஜின்கள் பொருத்தப்படுகின்றன. வேரியன்டை பொறுத்து இன்ஜின் ஆப்ஷனும் மாறுபடுகிறது. இந்த காரில் உள்ள முக்கியமான அம்சங்களாக இது பெட்ரோல் ஹைபிரிட் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன் கொண்ட வாகனமாக இருக்கிறது. இது ஆல்வில் டிரைவ், இவி மோட் டிரைவிங்,ஆம்பியர் லைட்டிங் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 6 ஏர் பேக்குகள், 360 டிகிரி பார்க்கிங் கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் உள்ளன.
இந்த கார் சாலையில் ஓட்டும் போது நல்ல ரெய்டு குவாலிட்டியை தரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் டிசைன் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறந்த பிராக்டிகல் அம்சங்கள் நல்ல இன்ஜின் என இந்த கார் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்ற காராக இருக்கிறது. இந்த கார் இன்றும் மார்க்கெட்டில் நல்ல விற்பனையில் இருப்பதால் மக்கள் மத்தியில் இந்த காருக்கு நல்ல பெயர் இருக்கிறது.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva