விபச்சார வழக்கில் நடிகை தேவிப்பிரியா கைது
சீரியல் சினிமா என கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்பவர் நடிகை தேவிப்பிரியா. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருக்கிறார்.
சீரியல், சின்னத்திரை நிகழ்ச்சிகள், வெள்ளித்திரை என மாறி மாறி கலக்கிக் கொண்டிருக்கிறார் தேவிப்பிரியா. குறிப்பிட்டு சொன்னால் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமானவர்.
இவர் எழுதிய டாக்குமென்டரி மூலம் பிரபலம் அடைந்து நடிகர் விஜயின் மின்சார கனவு என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து உயிரோடு உயிராக என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிப்பது மட்டுமில்லாமல் பல்வேறு திரைப்படங்களில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றி இருக்கிறார். நடிகைகள் சிம்ரன், நதியா உள்ளிட்ட முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் நடிகை தேவிப்பிரியா.
நடிகை ராதிகா இயக்கி நடிக்கும் சீரியல்களில் ஆஸ்தான நடிகையாக வலம் வரும் தேவிப்பிரியா போலீஸ் கதாபாத்திரம், வில்லி கதாபாத்திரம், குணசத்திர கதாபாத்திரம், ஹீரோயின் கதாபாத்திரம் என எது கிடைத்தாலும் அடித்து துவம்சம் செய்யக்கூடிய ஒரு ஆள். கனகச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர்.
சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி என்ற சீரியல் தான் இவர் முதலில் நடித்த சீரியல் இந்த சீரியலில் இவர் நடித்த கதாபாத்திரத்திற்கு பெருமளவு வரவேற்பு கிடைத்ததால் சின்னத்திரை இன்று வரை கைவிடாமல் வைத்திருக்கிறது.
சின்னத்திரை உலகில் பல வெற்றி சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர். இப்படி தற்போது பிஸியாக இருக்கும் தேவிப்பிரியா-வின் வாழ்க்கைக்கு பின்னால் மிகவும் மோசமான ஒரு வரலாறு இருக்கிறது.
தேவிப்பிரியாவின் வாழ்க்கையில் மாறாத மற்றும் மறக்க முடியாத வடுவாக இருக்கக்கூடிய ஒரு விஷயம் இது. இளம் வயதில் தன்னுடைய காதலின் காரணமாக.. காதலனின் தாயாரால் பழிவாங்கப்பட்டார் தேவிப்பிரியா என்பது தான் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம்.
எப்படி என்றால்.. விபச்சார வழக்கில் சிக்க வைக்கப்பட்டார் தேவிப்பிரியா. சென்னை மாநகர பெண் உறுப்பினர் ஒருவரின் மகனுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார் நடிகை தேவிப்பிரியா என கூறப்படுகிறது. அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளும் யோசனையிலும் இருந்திருக்கிறார். ஆனால் இதற்கு அவருடைய அம்மாவான சென்னை மாநகர பெண் உறுப்பினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்.
பலமுறை தேவிப்பிரியாவை மிரட்டியும் இருக்கிறார் என கூறப்படுகிறது. இதற்கு தேவிப்பிரியா மசியாததால் அவரை விபச்சார வழக்கில் சிக்க வைத்திருக்கிறார்.
அதன் பிறகு நீதிமன்றத்தில் போராடி தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்து தற்போது மீண்டும் சீரியலில் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் தேவிப்பிரியா. இந்த விவகாரத்தை பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva