அனிருத்திற்கு நடிகர் விஜய் கொடுத்த அன்பு பரிசு
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர், அனிருத். இவர் இசையமைத்த ஜவான் திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வசூலில் 1000 கோடியை கடந்துள்ளது. இதையடுத்து இந்திய அளவில் அனிருத் பிரபலமாகிவிட்டார். பல வட இந்திய செய்தி நிறுவனங்கள் இவரை நேர்காணல் எடுத்து வருகின்றன. அப்படி அவர் கலந்து கொண்ட நேர்காணலில் விஜய் தனக்கு கொடுத்து அன்பு பரிசு குறித்து பேசியுள்ளார்.
விஜய் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியாகி 100 கோடிக்கும் மேல் வசூலை குவித்த படம், கத்தி. இந்த படத்தில் சமந்தா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை இயக்கியிருந்தார். அனிருத்தின் இசையில் வெளியான பாடல்களும் பின்னணி இசையும் மரண ஹிட் அடித்தன. குறிப்பாக, சண்டை காட்சியின் போது கத்திகள் உராசுவது போன்ற இசையை போட்டிருந்தார் அனிருத். இது இன்றளவும் பல விஜய் ரசிகர்களின் ரிங் டோனாக உள்ளது.
அனிருத் இசையமைக்கும் ஸ்டுடியோவில் சமீபத்தில் நேர்காணல் நடைப்பெற்றது. இதில், தொகுப்பாளருக்கு தனது ஸ்டுடியோவை சுற்றி காண்பித்த அனிருத், அங்கிருந்த ஒரு பியானோவை பற்றி பேசினார். இது, நடிகர் விஜய் கத்தி படத்தின் ஆல்பம் ஹிட் ஆனவுடன் தனக்கு கொடுத்த பரிசு என்று கூறினார். இதை நினைவு பரிசாக தான் பத்திரமாக வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். படத்தின் மெயின் இசையை இயக்குநர்களுக்கு போட்டு காண்பிப்பதற்கு முன்னர் இந்த பியானோவில்தான் முதலில் மெலடியாக இசையமைத்து காண்பிப்பதாக அவர் கூறினார்.
தற்போது அனிருத் இசையமைத்துள்ள லியோ படம் குறித்து அவரிடம் அந்த நேர்காணிலில் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது லோகேஷ் கனகராஜ் குறித்து பேசிய அவர், இதுவரை ஒரு முறை கூட அவர் “இந்த இசையை மாற்றிக்கொள்ளலாம்” என்று தன்னிடம் கூறியது இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் ஏற்கனவே மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களில் அனிருத் பணியாற்றியுள்ளார்.
இந்தியா முழுவதும் பிரபலமான ராக்ஸ்டார்..!
அனிருத், தமிழ் சினமாவை தாண்டி தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வந்தார். தற்போது பாலிவுட்டில் வெளியாகியுள்ள ஜவான் படத்தை அடுத்து இவருக்கு பான் இந்திய அளவில் பெரிய ரசிகர் பட்டாளமே சேர்ந்துள்ளது. இந்த படத்தின் தமிழ் மற்றும் இந்தி ஆல்பங்கள் ஆகிய இரண்டும் பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளன. இதையடுத்து அனிருத்தின் கதவை பல பாலிவுட் பட வாய்ப்புகள் தட்டி வருவதாக கூறப்படுகிறது.
அனிருத்தின் அடுத்தடுத்த படங்கள்:
அனிருத், கை வசம் படு பிசியான ஸ்கெட்யூலை வைத்துள்ளார். விஜய் நடிப்பில் அக்டோபர் மாதம் வெளியாக உள்ள ‘லியோ’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் இவர்தான். இந்த பாடலில் இரண்டே பாடல்கள்தான் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றது. இரண்டு நாட்களுக்கு முன்னதாக படத்தின் இன்னொரு பாடலான ‘Leo Das-Badass’ வெளியானது. இந்த பாடலின் வரிகளும் இசையும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே இப்பாடல் 5 மில்லியன் வியூஸ்களை கடந்தது.
இவர், இந்தியன் 2 படத்திற்கும் இசையமைத்து வருகிறார். அஜித்தின் விடா முயற்சி படத்திற்கும் இவரே இசையமைக்கிறார். அடுத்து தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் அவரது 50வது படத்திற்கும் இவரே இசையமைக்கிறார். மேலும், இந்திய அளவில் இருக்கும் பல சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் அனிருத் கைக்கோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva