கமலஹாசனுக்கு பிடித்த பெயர்
கமலஹாசன் ஏதேனும் ஒரு கருத்தை தன் படங்களில் வைத்துவிடுவார். முக்கியமாக அவர் இயக்கும் படங்களில் வருங்காலத்தில் வரப்போகும் தொழில்நுட்பங்கள், வருங்காலத்தில் வரும் ஆபத்துக்கள் பற்றி முன்கூட்டியே சொல்லிவிடுவார்.
கமல் படங்களில் ஹேராம், தசாவதாரம், அன்பே சிவம், விஸ்வரூபம் இன்னும் பல படங்களில் யாரும் எதிர்பார்க்காத பல விஷயங்கள் நடக்கப் போவதை பல வருடங்களுக்கு முன்பே சொல்லி தமிழ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி விடுவார். இது இந்திய அளவில் தமிழ் சினிமாவுக்கு நல்ல பெயர்களையும் வாங்கி கொடுத்துள்ளது.
தனது படங்களில் தன் நண்பர்களுக்காகவும் சில விஷயங்களை செய்துள்ளார் முக்கியமாக இவர் இயக்கிய படங்களாக இருந்தாலும் சரி நடிக்கும் படங்களாக இருந்தாலும் சரி கிரேசி மோகனை பயன்படுத்திக் கொள்வார். முக்கியமாக கமல் நடித்த ஐந்து படங்களில் தொடர்ந்து ஹீரோயின்களுக்கு ஒரே பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஜானகி என்ற பெயர் இவரது படங்களில் அதாவது பம்மல் கே சம்பந்தம் சிம்ரன், வசூல்ராஜா எம்பிபிஎஸ் சினேகா, காதலா காதலா ரம்பா, அவ்வை சண்முகி மீனா, தெனாலி ஜோதிகா என அனைவருக்குமே ஜானகி என்ற பெயரை வைத்திருப்பார். ஒருவேளை கமலின் நெருங்கிய உறவாக இந்த பெயர் இருக்குமா என யோசித்து வந்தனர்.
இது கிரேசி மோகனின் நட்புக்காக செய்யப்பட்ட ஒரு வேலை கிரேசி மோகன் கமலுடன் படத்தில் வேலை செய்யும் பொழுது எந்த கதாபாத்திரத்திற்கு வசனம் எழுதினாலும் சம்பளம் வாங்குவதற்கு முன்பே ஜானகி என்ற பெயரை வைக்குமாறு கேட்டு விடுவாராம். அதற்கு பல இயக்குனர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் ஆனால் கமல் ஒப்புக்கொண்டு விடுவாராம்.
கிரேசி மோகனின் ஆசிரியர் பெயர் ஜானகி. அவரால்தான் நல்ல நிலைமைக்கு வந்தோம் என்று வாழ்வில் வெற்றி பெற்ற பிறகும் சினிமாவில் அவரது பெயரை கிரேசி மோகன் பயன்படுத்தியுள்ளார். நட்புக்காக கமல் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அவர் நடிக்கும் படங்களில் ஜானகி என்ற பெயரை பயன்படுத்தி வந்துள்ளார்.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva