ஒரு மணி நேரத்தில் பாடலை பாடி அசத்திய விஜய்
விஜய் பன்முகத் தன்மை கொண்டவர் என்பது பலரும் அறிந்ததே. ஹீரோவாக நடிக்க தகுதி இல்லை என பலரும் கேலி, கிண்டல் செய்த நிலையில் பல திறமைகளை வளர்த்துக் கொண்டார். விஜய்க்கு ஈடாக யாராலும் நடனம் ஆட முடியாது என்ற பெயரைப் பெற்றார்.
ஆரம்பத்தில் இருந்தே விஜய் தன்னுடைய படங்களில் பாடல்கள் பாடி வருகிறார். தனது அம்மா ஷோபாவுடன் இணைந்து பல படங்களில் பாடியுள்ளார். சில காலமாக பாடலை தவிர்த்த விஜய் இப்போது தன்னுடைய படங்களில் ஒரு பாடல் பாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
விஜய் பாடும் பாடல் குழந்தைகளை பெரிய அளவில் கவரும். இப்போது விஜய் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்திலும் விஜய் குரலில் ஒரு பாடல் இடம்பெற்றிருக்கிறது. இந்தப் பாடலை அனிருத் பாடி ரிகர்சல் செய்து விஜய்க்கு காண்பித்துள்ளார்.
தளபதி கோடு போட்டால் ரோடே போடக் கூடியவர், அதை அப்படியே மனதில் வைத்துக்கொண்டு ஒரு மணி நேரத்தில் பாட்டை பாடி முடித்து விட்டாராம். ரெக்கார்டிங் ஸ்டுடியோக்கு ஒன்பது மணிக்கு வந்த விஜய் பத்து மணிக்கு பாடலை முடித்துவிட்டு சென்றுவிட்டாராம்.
சாதாரணமாக பாடகர்களால் கூட ஒரு மணி நேரத்தில் இவ்வளவு வேகமாக பாடலை பாட முடியாது. பிழையின்றி சரியான சுதியோடு ஒரு மணி நேரத்தில் விஜய் பாடி கொடுத்துவிட்டு சென்றுள்ளார். இதைக் கேட்டு அப்படியே அனிருத் அதிர்ச்சியில் உறைந்து விட்டாராம்.
விஜய் ஒரு நல்ல நடிகர் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆனால் இவருக்குள் இப்படி ஒரு பாடல் திறமை இருக்கிறதா என அனிருத் அவரது பாணியில் தளபதியை பாராட்டி தள்ளி உள்ளாராம். விஜய் பாடிய அந்த பாடல் வேற லெவலில் உருவாகி இருக்கிறதாம்.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva