
திரிஷாவிற்கு அதிகரிக்கும் அழகும், படவாய்ப்பும்
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிறகு திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. குந்தவை கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் திரிஷாவின் மார்க்கெட் உயர்ந்துள்ளது. அவரின் அழகும் கூடியுள்ளது. தற்போது 7 படங்கள் அவர் கைவசம் வைத்து இருக்கிறார். திரிஷா நடிப்பில் சதுரங்க வேட்டை 2, தி ரோடு படங்கள் ஏற்கனவே முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் லியோ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இது தவிர கவுரவ் நாராயணன் இயக்கும் படம் மற்றும் விடாமுயற்சி படத்தில் அஜித் ஜோடியாகவும், தனுஷின் 50-வது படத்திலும், மணிரத்னம் இயக்கும் படத்தில் கமல்ஹாசனுடனும் நடிக்க திரிஷாவிடம் பேசி உள்ளனர். தமிழில் பிசியான நடிகையாக திரிஷா மாறி இருக்கிறார். வெப் தொடர் ஒன்றிலும் நடிக்கிறார்.















































