
காரின் மறைவில் உடை மாற்றிய நடிகை
நடிகை மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யா சாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் பெங்களூரை சேர்ந்தவர். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவும் படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் 'தெறி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
மீனாவின் கணவர் வித்யா சாகர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் ஆறு மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார். அவரது நுரையீரல் நோய் தொற்றுக் காரணமாக மோசமாக பாதிக்ப்பட்டது. இதனையடுத்து அவருக்கு மாற்று நுரையீரல் பொருத்த ஏற்பாடுகள் நடந்தது.வித்யாசாகருக்கு மாற்று உறுப்பு கிடைப்பது தாமதம் ஆகி கொண்டே இருந்தது. இதனால் கடந்தாண்டு ஜுன் 28 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி வித்யா சாகர் உயிரிழந்தார். கணவரின் மரணம் மீனா வாழ்க்கையில் கடும் சோகத்தை ஏற்படுத்தியது. மீனாவை அவரது தோழிகள் கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு கொண்டு வந்தனர்.மீனா திரைத்துறையில் நுழைந்து நாற்பது வருடங்கள் நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக மீனா 40 என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரஜினி உட்பட திரைத்துறையை சார்ந்த பலரும் கலந்துக்கொண்டனர். மீனா கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான 'என் ராசாவின் மனசிலே' படத்தின் மூலமாகத்தான் கதாநாயகியாக அறிமுகமானார். மீனா 40 நிகழ்ச்சியில் பேசிய ராஜ்கிரண், மீனா என்னை பார்த்து படத்துல மட்டும் பயந்ததா எல்லாரும் நினைச்சுட்டு இருந்தாங்க. ஆனா நிஜத்துலயும் ரொம்ப பயந்தாங்க. படப்பிடிப்பு ஆரம்பிச்ச முதல் நாளில் இருந்தே என்கிட்ட பேசவே இல்ல. அதேநேரம் நடிப்புன்னு வந்துட்டா மீனா கால நேரம் எல்லாம் பார்க்க மாட்டாங்க. எந்த சூழ்நிலையா இருந்தாலும் நடிச்சிடுவாங்க.
அப்போ இப்போ உள்ள மாதிரி கேரவன் எல்லாம் கிடையாது. படத்துக்காக ஒரு பாடல் காட்சியை ஐந்து, ஆறு லொகேஷன்ல வேற வேற காஸ்டியூம்ல எடுக்க வேண்டியது இருந்தது. இதுக்காக மீனா ரோட்டோரமாக காரை நிறுத்தி அதன் மறைவில் ஆடையை மாத்திட்டு வந்துட்டாங்க. அந்தளவு டெடிகேஷன் உள்ள நடிகை மீனா. இப்போ உள்ள நடிகைகள் கிட்ட இதையெல்லாம் நம்ம எதிர்பார்க்க முடியாது என மீனா குறித்து பெருமையாக பேசியுள்ளார் ராஜ்கிரண்.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva