
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய விஜய் வெங்கட்பிரபு கூட்டணி
விஜய் மற்றும் வெங்கட் பிரபு இணையும் தளபதி 68 படத்தை பற்றித்தான் ஒட்டுமொத்த திரையுலகமும் பேசி வருகின்றனர். விஜய் தற்போது லியோ படத்தில் பிசியாக நடித்து வந்தாலும் அப்படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்னரே தன் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் தளபதி.
68 ஆவது படத்திற்காக விஜய் வெங்கட் பிரபுவுடன் இணைகிறார் என்பது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்தது. யாரும் எதிர்பார்க்காத கூட்டணியாக விஜய் மற்றும் வெங்கட் பிரபு இணைவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. AGS தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்காக விஜய்க்கு 200 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு தளபதி 68 படத்தின் பூஜை நடைபெறுமாம்.
விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி தளபதி 68 பூஜை நடைபெறும் என்றும், ஜூலை மாதம் படப்பிடிப்பை துவங்கி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகின்றது.
இயக்குனரும், வெங்கட் பிரபுவின் தந்தையுமான கங்கை அமரன் தளபதி 68 படத்தை பற்றி பேசிய விஷயம் தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அவர் பேசியதாவது, வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தை பார்த்துவிட்டு விஜய் வெங்கட் பிரபுவை பாராட்டி தள்ளினார். இதுபோன்ற ஒரு கதையில் தான் நடிக்க விரும்புவதாகவும் வெங்கட் பிரபுவிடம் கூறினாராம் விஜய். இதை கங்கை அமரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் தளபதி 68 படத்தை பற்றி கணிக்க துவங்கிவிட்டனர். மங்காத்தா போல ஒரு விறுவிறுப்பான மற்றும் வித்யாசமான படமாகத்தான் தளபதி 68 இருக்கும் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.
தளபதி 68 படத்தை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் இணையத்தில் அவ்வப்போது வெளியாகும் தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றது. தளபதி 68 படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அதில் ஒரு கதாபாத்திரத்திற்காக வித்யாசமான கெட்டப்பில் விஜய் தோன்றுவாராம்.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva