
கவர்ச்சி காட்டாமல் ஜெயித்த 5 நடிகைகள்
நடிகைகளை பொறுத்தவரை படத்தில் வாய்ப்பு கிடைக்க ஒரு சில விஷயத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். ஒரு சில நேரங்களில் படத்திற்கு ஏற்ப கவர்ச்சி காட்சிகளையும் ஏற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
எந்த சூழ்நிலையாக இருந்தாலும் நான் கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று உறுதியாக கூறி வாய்ப்பு இழந்தவர்களும் உண்டு. நீங்கள் சொல்வதெல்லாம் செய்ய மாட்டேன் என்று கூறி வெற்றி பெற்ற 5 நடிகைகளை பார்க்கலாம்.
மலையாள படங்கள் மூலம் அறிமுகமானவர் அபர்ணாதாஸ். பீஸ்ட் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் வரும் இவர் டாடா என்னும் படத்தில் ஹீரோயினாக இடம்பெற்று இருப்பார். இப்படத்தில் இவரின் நடிப்பு நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது. என் படங்களில் கவர்ச்சி இருக்காது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அதற்கு ஏற்ற படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக கூறி பட வாய்ப்பை பெற்று வருகிறார்.
தெலுங்கு படங்களின் மூலம் அறிமுகமானவர் நித்யா மேனன். திரைத்துறையில் நடிக்க விருப்பம் இல்லாத இவர் பத்திரிக்கையாளராக விரும்பியிருக்கிறார். அதன்பின் ஒரு சில படங்களில் நடித்த இவர் மெர்சல், காஞ்சனா 2 போன்ற படங்களில் கதாநாயகியாக நல்ல விமர்சனத்தை பெற்றார். குறிப்பாக திருச்சிற்றம்பலம் படத்தில் இவரின் எளிமையான நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.
மலையாள படங்களின் மூலம் அறிமுகமாகிய கீர்த்தி சுரேஷ் அதன்பின் தமிழில் ரஜினி முருகன், தொடரி, பைரவா, சாமி 2 ஆகிய படங்களில் நல்ல விமர்சனத்தை பெற்று மக்களின் நெஞ்சில் இடம் பிடித்தவர். இவர் எந்த படங்களிலும் கவர்ச்சியான நடிப்பை ஏற்காமல் இன்றுவரை தனக்கேற்ற கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்து வருகிறார்.
பிரேமம் படத்தின் மூலம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தவர் சாய் பல்லவி. தமிழில் மாரி 2, என் ஜி கே, கார்கி போன்ற படங்களில் தன் எளிமையான நடிப்பை வெளிப்படுத்தியவர். திரைத்துறையில் மேக்கப் இல்லாத ஆர்டிஸ்ட் என்ற பெருமையும் கொண்டவர். படங்களில் கவர்ச்சியான நடிப்பை தவிர்த்து தனக்கு ஏற்ற கதாபாத்திரம் கொண்ட படங்களை ஏற்று நடித்து வருகிறார்.
நாடகத்தில் ஆர்வம் கொண்ட ஷீலா ராஜ்குமார் சினிமாவில் பெரும்பாலும் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். திரௌபதி, மண்டேலா ஆகிய படங்கள் இவருக்கு நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது. இதுபோன்ற கதாபாத்திரத்திலேயே தன் நாட்டத்தை செலுத்தும் இவர் ஒரு பொழுதும் கவர்ச்சியான படங்களை ஏற்க மாட்டேன் என்பதில் தெளிவாக இருக்கிறார்.















































