
திரிஷாவின் அடுத்த பிறந்தநாளில் திருமணம் கைகூட வாழ்த்தும் பிரபலங்கள்
பொன்னியின் செல்வன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு லியோ படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் திரிஷா. இவர்கள் ஜோடி ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்த நிலையில் மறுபடியும் இவர்கள் இருவரும் இணைந்ததால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
திரிஷா 40 வயதை தாண்டிய நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் கனவு கன்னியாகவே டாப் ஹீரோயினாக வலம் வருகிறார். தனிப்பட்ட வாழ்க்கையில் பல சிக்கல்களில் மாட்டிக்கொண்டு சர்ச்சையில் சிக்கிருக்கிறார். திரிஷாவுக்கு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வருண்மனியுடன் 2015இல் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
ஆனால் சில காரணங்களால் அது நின்று போய்விட்டது. அதனால் விரக்தியில் தெலுங்கு சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி நடிக்கப் போய்விட்டார். அங்கே பாலகிருஷ்ணா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்தார்.
தெலுங்கு நடிகர் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இதன் மூலம் அங்கே நிறைய பட வாய்ப்புகளை பெற்றார். திரிஷா இது போன்று தொடர்ந்து நடித்தால் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்துக் கொள்வார் என்ற பயத்தில் ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகமும் சேர்ந்து இவருக்கு எதிர்ப்பை தெரிவித்தார்கள். ஹைதராபாத்துக்கும் வரக்கூடாது என்று பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டது.
திரிஷா ரிலேஷன்ஷிப்பில் இருந்த நடிகர் ராணா டகுபதி. இவர்கள் இருவருமே உறவில் இருப்பதாக பல சர்ச்சையில் சிக்கி அவருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் இணையதளங்களில் வெளியாகி வந்தது. முதலில் இவர்கள் அப்படி எங்களுக்குள் எந்த உறவும் இல்லை என்று சொன்ன நிலையில் இவரது புகைப்படங்கள் இவர்களை காட்டிக் கொடுக்கும் விதமாக வந்தது.
அதன் பின் வேறு வழி இல்லாமல் இவர்கள் ஒத்துக் கொண்டார்கள். இதனால் திரிஷா நடிப்பதற்கு அங்கே வாய்ப்புகள் குறைந்து விட்டது. அதன் பிறகு தமிழில் மறுபடியும் பொன்னின் செல்வன் படத்தின் மூலம் ரீ என்டரி ஆனார். அதில் குந்தவையாக நடித்து பல பேர் மனதில் இடம் பிடித்து விட்டார். இந்த படத்தின் மூலம் இவருக்கு கிடைத்த வரவேற்பு அதிக அளவில் உள்ளதால் தொடர்ந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் தேடி வருகிறது.
லியோ படத்திலும் நடிப்பதால் இவருடைய மார்க்கெட் அதிகரித்து தான் வருகிறது. சமீபத்தில் இவருடைய 40வது பிறந்தநாளை கொண்டாடிய இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து அடுத்த வருடம் திருமணம் ஆவதற்கு வாழ்த்துகளையும் தெரிவித்து இருக்கிறார்கள்.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva