
குதிரைவால் டீசர் வெளியீடு
கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘குதிரை வால்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் மற்றும் யாஷி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘குதிரை வால்’. வித்தியாசமான தலைப்பில் உருவாகி வரும் இப்படமும் வித்தியாசமானதுதான். இந்த படத்தை அறிமுக இயக்குநர்களான மனோஜ் லியோனஸ் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.
இந்த படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயனாக நடித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சலி பாட்டீல் நடித்துள்ளார். பிரதீப் குமார் மற்றும் மார்ட்டின் விஸ்ஸர் இசையமைத்துள்ளனர். உளவியல், ஆள் மன கற்பனைகள், டைம் டிராவல் குறித்த ஒரு அறிவியல் புனைவுப்படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டதாகவும் இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் குதிரை வாலுடன் வித்தியாசமாக இருக்கும் கதாநாயனின் காட்சிகள் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்த படம் சில சர்வதேச விழாக்களிலும் பங்கேற்று நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva