Ads

புரவி புயலின் கோரத் தாண்டவம்

புரவி புயலில் ஏற்பட கோரா விபத்து படங்கள்

  • 925
  • More
  • 873
  • More
  • 870
  • More
  • 811
  • More
  • 916
  • More
  • 860
  • More
  • 924
  • More
  • 975
  • More
Comments (0)
Login or Join to comment.
List your business with tamilpoonga business listing.
  • 27
  • 14
Added a post 
ஸ்ரீ குரோதி வருடம் சித்திரை மாதம் 14 ஆம் தேதி சனிக்கிழமை 27.4.2024 சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 07.33 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி. இன்று அதிகாலை 03.01 வரை அனுஷம். பின்னர் கேட்டை. அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 76
  • 75
  • 80
  • 80
  • 80
Added a post 
கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் பெயரில் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அதே பெயரையே உத்தியோகபூர்வமாகப் பயன்படுத்துமாறு வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.“நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என்ற பெயர் 4 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் திருத்துமாறு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இந்தப் பெயர் மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தால் அறிக்கையும் கோரப்பட்டுள்ளது. இதேவேளை, 'கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை' என்ற பெயரே உத்தியோகபூர்வமானது” என மாகாண கல்விப் பணிப்பாளர் குயின்ரஸ் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.பாடசாலையின் தற்போதைய அதிபர், நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற இறப்பர் முத்திரையைப்பயன்படுத்தி க.பொ.த. சாதாரண தர பரீட்சை மாணவர்களின் அனுமதி அட்டைக்கு கையொப்பம் இட்டுள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு ஊடகத்திற்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • 172
Added a post 
உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்தாலும், எமது கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டீ.வி.சானக தெரிவித்துள்ளார். அத்துடன் எரிசக்தி துறையுடன் தொடர்புடைய இறக்குமதி, தரம், விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றிற்கு ஒரு சுயாதீனமான ஒழுங்குமுறை அமைப்பின் அவசியத்தை கண்டறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சுயாதீன அமைப்பை நிறுவுவதன் நோக்கம், நாட்டில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பெட்ரோல், டீசல், ஜெட் எரிபொருள், எல்பிஜி, எல்என்ஜி மற்றும் மசகு எண்ணெய் ஆகியவற்றின் தரம், விநியோகப் போட்டி மற்றும் விலைகளை ஒழுங்குபடுத்துவதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (26) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 180
Added a post 
சட்டவிரோதமான முறையில் பெறப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான சட்டத்தை கொண்டு வருவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.தரகு மூலம், மோசடி, ஊழல் மற்றும் இலஞ்சம் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான சட்டத்தை கொண்டு வருவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.கண்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும், 25 வருடங்களாக கொண்டுவரப்படாத பல சட்டமூலங்கள் கடந்த இரண்டு வருடங்களில் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அமைச்சரவையில் கலந்துரையாடி இணக்கப்பாட்டின் பின்னர் சிறந்த தீர்மானங்கள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 177
Added a post 
ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை தந்த போது விடுத்த கோரிக்கைக்கு இணங்க, ஈரானின் தெஹ்ரானில் நடைபெறும் EXPO கண்காட்சியில் இலங்கையின் பிரதிநிதியாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர பங்கேற்கவுள்ளார்.இந்த EXPO கண்காட்சியில் கலந்துகொள்வதில்லை என முன்னர் தீர்மானித்திருந்த போதிலும், ஈரான் ஜனாதிபதியின் கோரிக்கை நிமித்தமே தமது முடிவை மாற்றிகொண்டதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இதற்கமைய விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர நேற்று(26) ஈரானுக்கு பயணமானார்.இதன்போது ஈரானின் விவசாய அமைச்சரை சந்தித்து புதிய விவசாய தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பில் கலந்துரையாட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 173
Added a post 
இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தயாராகி வரும் நிலையில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான பசில் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இச் சந்திப்பு நேற்றையதினம் (26) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.இச் சந்திப்பு தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில்இலங்கையின் அரசியல் முன்னேற்றங்கள் உட்பட பரஸ்பர ஆர்வமுள்ள தலைப்புகளில் சுமுகமான விவாதங்கள் தொடர்பிலும் இச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது000
  • 171
Added a post 
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றையதினம் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 06 விக்கெட்டுக்களை இழந்து 261 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.அணி சார்பில் அதிகபடியாக, ஃபில் சால்ட் 75 ஓட்டங்களையும், சுனில் நரைன் 71 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.இந்நிலையில், 262 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.அணி சார்பில் அதிகபடியாக,ஜோனி பேர்ஸ்டோ 108 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.இருபதுக்கு20 போட்டிகளில் அதிக ஆறு ஓட்டங்கள் அடிக்கப்பட்ட போட்டியாக குறித்த  போட்டி பதிவானது. அத்துடன் இந்த போட்டியில் மொத்தமாக 42 ஆறு ஓட்டங்கள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.000
  • 174
Added a post 
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 7 நாடுகளுக்கு இலவச விசா வழங்க, அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.நேற்று (26) நாடாளுமன்ற அமர்வில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனைக் தெரிவித்துள்ளார்.இதன்படி இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படவுள்ளது. இதேநேரம் மேலும் 60 நாடுகளுக்கு இலவச விசா வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.000
  • 178
Added a post 
இமுன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கிய இரகசிய வாக்குமூலத்தில், இந்நாட்டு பிரஜையோ அல்லது இந்த நாட்டில் இருக்கும் வேறு நாட்டு பிரஜையோ ஏப்ரல் - 21 பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடவில்லை என தெரிவித்ததாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். நேற்று (26) நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் விசாரணைகள் நடைபெற்று வருவதால் சில உண்மைகளை வெளியிட முடியாது எனவும், அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 173
Added a post 
இலங்கையின் விவசாயத் துறைக்கு அமெரிக்க விவசாயத் திணைக்களம் வழங்கும் ஆதரவு தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளரான அலெக்சிஸ் டெய்லர், அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் ஆகியோர் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஏனைய சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளை நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் சந்தித்திருந்தனர்.அதிகரித்த உணவுப் பாதுகாப்பை ஊக்குவித்தல் மற்றும் காலநிலையுடன் தொடர்புடைய சவால்களுக்கு எதிராக மீண்டெழுவதை அதிகரிப்பதற்கு இலங்கையின் விவசாய அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான அமெரிக்காவின் ஆதரவு இதன்போது கோடிட்டுக்காட்டப்பட்டது.சுற்றுச்சூழலுகேற்ற மற்றும் மேம்படுத்தப்பட்ட சந்தை இணைப்புகள் ஊடாக உணவுப் பாதுகாப்பு மற்றும் காலநிலையுடன் தொடர்புடைய சவால்களுக்கு எதிராக மீண்டெழும் தன்மையினை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் 2024 Food for Progress எனும் முன்முயற்சியில் இலங்கை முக்கிய பங்கு வகிக்கின்றமையும் உறுதிப்படுத்தப்பட்டது.இலங்கையில் 15,000 இற்கும் மேற்பட்ட பாற்பண்ணையாளர்கள் தங்கள் பாலுற்பத்தியை மேம்படுத்துவதற்கு உதவிசெய்த 27.5 மில்லியன் டொலர் பெறுமதியுடைய மார்கெட் ஓரியென்டட் டெய்ரி ( Market-Oriented Dairy) எனும் செயற்திட்டம் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.எரிசக்தி நுகர்வினைக் குறைக்கும் வகையிலான கால்நடை வளர்ப்பு மற்றும் தீவன நுகர்வு உத்திகள் தொடர்பாக விரிவான பயிற்சியினை வழங்குவதன் மூலம் பாற்பண்ணையாளர்கள் காலநிலை மாற்றங்களுக்கு இசைவாக்கமடைவதை மேம்படுத்துவதே அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் பாற்பண்ணை செயற்திட்ட இலக்காக காணப்படுகின்றது.மேலும், கல்வி அமைச்சின் பங்காண்மையுடன் சேவ் த சில்ட்ரன் அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்படும் அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் McGovern-Dole செயற்றிட்டமானது 2018 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதிலுமுள்ள சுமார் 100,000 ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு நாளாந்த உணவை வழங்கியுள்ளது.பதுளை, கொழும்பு, கிளிநொச்சி, மொனராகலை, முல்லைத்தீவு, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் திருகோணமலை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு உணவு வழகப்படுகின்றது.ஏற்பாடுகளை மேலும் அதிகரிப்பதற்காக 32.5 மில்லியன் டொலர் பெறுமதியான ஐந்தாண்டு செயற்திட்ட விரிவாக்க நடவடிக்கையிலும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் ஈடுபட்டுள்ளது.ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு எமது பரந்த இலக்கின் ஒரு பகுதியாக அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் ஊடாக இலங்கையில் உணவுப் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது.இலங்கையின் தேசிய பாடசாலை உணவு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள சுமார் 200,000 மாணவர்களுக்கு உணவு வழங்குவதே இந்த செயற்றிட்டத்தின் இலக்காக குறிப்பிடப்பட்டுள்ளது.000
  • 172
  • 162
Added a news 
புதிய விசா முறைமைக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள www.srilankaevisa.lk இணையத்தளத்தினை போன்று போலி இணையத்தளம் ஊடாக சிலர் பணம் செலுத்துகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.Online ஊடாக விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தின் e visa பகுதியை மாத்திரம் பயன்படுத்துமாறு திணைக்களம் அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.கடந்த 17 ஆம் திகதியில் இருந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் புதிய விசா முறைமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
  • 165
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர்.தெற்கு பிரேசிலின் போர்டோ அலெக்ரே நகரில் தற்காலிக வீடற்ற தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டு வரும் கைவிடப்பட்ட ஹோட்டலில் இந்த தீ விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.
  • 166
changed a profile cover 
  • 166
கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யாவில் பெய்து வரும் கன மழை காரணமாக 44 பேர் உயிரிழந்துள்ளனர்.60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • 166
  • 166
  • 166
காலை வணக்கம்
  • 168
Added a news 
மாங்குளம் வசந்தநகர் சந்தியில் இராணுவ வாகனமொன்றும் லொறியும் மோதிய விபத்தில் இராணுவ சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்ததுடன் 9 சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர்.முல்லைத்தீவு முறிகண்டி ஏ 9 வீதியில் மாங்குளம், வசந்தநகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாயொருவர் பலியாகியுள்ளார். மேலும் 9 இராணுவ சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர்.ஏ.09 வீதியின் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பாரஊர்தி ஒன்றும் திருமுருகண்டி பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு திரும்ப முற்பட்ட கப்ரக வாகனமும் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இவ்வாறு உயிரிழந்த இராணுவ வீரரின் சடலம் கிளிச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
  • 376
Added a news 
மலையகப் புகையிரதப் பாதையில் புகையிரதத்தில் பயணிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர் பாதுகாப்பற்ற மற்றும் ஆபத்தான செயற்பாடுகளால் ஆபத்தில் சிக்கக்கூடும் என புகையிரதப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் இருந்து பதுளை புகையிரத நிலையம் வரையான பகுதியில் சில வெளிநாட்டவர்கள் புகையிரத மிதி பலகைகளில் தொங்கி செல்ஃபி எடுப்பதற்காகவும், சில வெளிநாட்டவர்கள் புகையிரத மிதி பலகைகளில் தொங்கி முத்தமிடுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.இதுபோன்ற பாதுகாப்பற்ற செயல்களில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகள், கடந்த 21ம் தேதி ரயிலில் இருந்து தவறி விழுந்து விபத்துக்கு உள்ளானார்கள் எல்ல புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் பயணித்த வெளிநாட்டு பெண்களும் விபத்தினால் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.மலையக புகையிரத பாதையில் பாதுகாப்பற்ற முறையில் புகையிரதங்களில் பயணிக்கும் வெளிநாட்டவர்களுக்கு அறிவிக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென உல்நாட்டு புகையிரத பயணிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
  • 381
Added a news 
காணாமல் ஆக்கப்பட்டோர் வியடம் தற்போது ஒரு சிலரது சுயநலத்துக்காக சர்வதேசத்தை நோக்கிய வியாபாரமாக ஆக்கப்பட்டமையே உண்மையில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் உறவுகள் அவலங்களுடனும் ஏக்கத்துடன் இன்றும் இருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உருவாக்கப்பட்டுவிட்டது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (26) ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்த சிறீரங்கேஸ்வரன் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்ததுடன் அது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –எமது நாட்டைப் பொறுத்தளவில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயமென்பது பெரும் பேசு பொருளான ஒரு விடயமாக உள்ளது.அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகளுக்கு நீதியும் பரிகாரமும் கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.ஆனால் பாதிக்கப்பட்ட உறவுகள் அதை நோக்கி சரியாக தமது கோரிக்கைகளை முன்னெடுத்திருந்த போதிலும் ஒரு சில சுயநல அரசியல் வாதிகள் தமது தேவைகளுக்காக அந்த உறவுகளின் உணர்வுகளை வியாபாரமாக்கி விட்டுள்ளதன் வெளிப்பாடே இதுவரை எந்தவொரு தீர்வையும் எட்ட முடியாதிருக்கின்றது.இதேவேளை சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சிறிதளவேனும் முன்னேற்றம் ஏற்படவில்லை என தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.ஆனால் 1983 ஆம் ஆண்டிலிருந்து 2009 வரையான காலப்பகுதிககுள் காணாமல் அக்கப்பட்டவர்களது விடயம் தொடர்பில் இலங்கை அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு உண்மையாகவே பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து எத்தகைய ஆதரவு அல்லது ஒத்துழைப்புகள் கிடைத்திருக்கின்றது என்பதே இங்கு பார்க்கப்பட வேண்டிய முக்கிய விடயமாக உள்ளது.இதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நியாயம் கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினாகிய நாம் 1995 களில் அதாவது சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட காலப் பகுதியில், பல்வேறு அழுத்தங்கள் இருந்தபோதிலும் அவற்றை உடைத்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பாதுகாவலர் சங்கத்தை அமைத்து உறவுகளை மீட்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம்.இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களது பெற்றோர்கள் இன்றும் தமது பிள்ளைகள் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் போராட்டங்களையும் கோரிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.அது அவர்களது உணர்வுடன் கூடிய விடயம்.ஆனால் அதை கொச்சைப்படுத்தும் வகையில் ஏற்பாட்டுக் குழு அல்லது சங்கம் என்று கூறி அவர்களது கட்டமைப்புக்குள் உள்நுழைந்த சுயநல அரசியல் குழுவினர் அவர்களது வலிகளையும் வேதனைகளையும் தமக்கான அரசியல் வியாபாரத்தின் முதலீடாக்கி வருமானம் ஈட்டும் ஒரு மையப்பொருளாக அந்த போராட்டத்தை திசைவழிமாறச் செய்துவிட்டனர்.அந்தவகையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகளது உணர்வுகளுக்கு மதிப்பளித்து  சுயநலன்களையும் அரசியல் இலாபங்களையும் குறித்த தரப்பினர் கைவிட்டு தீர்வுகளையும் பரிகாரத்தையும் தேடிகொள்ளும் வகையில் அந்த உறவுகளுக்கு ஒத்துழைப்பது அவசியம் என்றும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • 380
Added a news 
அமெரிக்காவில் TikTok சமூக ஊடக வலையமைப்பை தடை செய்யும் திட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கையெழுத்திட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்க செனட் சபையில் கையெழுத்திட்ட பின்னரே அமெரிக்க ஜனாதிபதி அதற்கான தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளார்.புதிய முன்மொழிவின்படி, TikTok ஐ வைத்திருக்கும் நிறுவனத்திற்கு அதன் பங்குகளை ஏலம் விட 09 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
  • 386