நின்று கொண்டு இருப்பவர் உசைன் போல்ட். வணங்குபவர் Gatlin. இது நடந்த இதே stadium த்தில் Gatlin போதை பொருள் உபயோகித்து ஓடியத்திற்காக 2012 இல் தடை செய்யப்பட்டு cheat பட்டம் வாங்கினார்.
உலக தடகள வீரர்கள் மத்தியில் அவரை ஒரு ஏமாற்றுக்காரர் என்று ஏசினார்கள். ஆனால் அதே போட்டியில் தங்கம் வென்ற போல்ட் அவரைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. பல பேட்டிகளில் அவரை நோண்டி நோண்டி கேட்ட போது அவர் சொன்னது.
Galtin ஒரு திறமையானவர். அவர் போதை பொருளை உபயோகித்தால் தடை செய்யப்பட்டு இருக்கலாம். ஆனால் என்னைப் பொருத்தவரை அவர் போதை பொருளை உபயோகிக்காமல் இன்னும் முயற்சி எடுத்து இருந்தால் கண்டிப்பாக என்னை கூட ஜெயிக்கலாம் என்றார். உலகம் அவர் செய்த தவறை மட்டும் பார்க்கிறது. நான் அவரின் திறமையை மட்டும் பார்க்கிறேன் என்றார்.
அப்போது எல்லோரும் சிரித்தார்கள். ஒரு கருப்பருக்கு இன்னொரு கருப்பர் வக்காலத்து வாங்குகிறார் என்று.
ஆனால் அந்த பேட்டி Galtin க்குள் ஒரு பெறும் மாறுதலை உண்டாக்கியது. 6 வருடம் உழைத்து போதைகளை விட்டு விட்டு மீண்டும் களத்துக்கு வந்தார்.
அதே களத்தில் அவர் உசைன் போல்ட்டையே வென்றார்.
அவர் தரையில் அமர்ந்து போல்ட்டை வணங்கிய காட்சிதான் இது.
அவர் வணங்கியது அவரை ஏசிய மக்களை பார்த்து அல்ல. அவரின் திறமையை பார்த்து அதன் வலிமையை உணர்த்திய போல்டை.
அதனால் இந்த உலகத்தில் ஒருவரின் திறமையை பாருங்கள். அவரின் குணத்தை பார்க்காதீர்கள். திறமை குணத்தை வெல்லும்.
- 144