Ads
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் புயலும் இல்லத்தில் முன்னாள் போராளியும் மாவீரர்களின் பெற்றோருமான பஷீர் காக்கா ஏற்றி வைத்தார்
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் புயலும் இல்லத்தில் முன்னாள் போராளியும் மாவீரர்களின் பெற்றோருமான பஷீர் காக்கா ஏற்றி வைத்தார்.
Empty
Added a post
சென்னையிலோ, டில்லியிலோ, கொல்கத்தாவிலோ, டோக்யோவிலோ, சிங்கப்பூரிலோ இல்லை. தமிழ்நாட்டில் - விருத்தாசலத்ததில் தான் இருக்கிறது...கிடைத்தற்கரிய பழைய நூல்களைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கும் இந்த தமிழ் நூல் காப்பகமே.. ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் இது. தம் வாழ்நாள் பணியாக இந்த நூலகத்தை நிறுவியுள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்தே நூல்களைச் சேமித்து வைத்து இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளார். இந்த நூலகத்தில் மிகப்பழமையான பல நூல்கள் உள்ளன. இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பெற்ற பெப்ரீஷியஸ் அகராதி, சங்க இலக்கியம் தொடங்கி சிற்றிலக்கியங்கள் வரை பல் தொகை நூல்களின் முதல் பதிப்புகள், தொல்காப்பியம் முதல் பதிப்பு, கம்பராமாயணத்தின் பத்துக்கு மேற்பட்ட பதிப்புகள் எனப் பல முதல் பதிப்பு நூல்கள் அமைந்திருப்பது தமிழ் நூல் காப்பகத்தின் தனிச்சிறப்பு. திருக்குறளின் அத்தனைப் பதிப்புகளோடு திருக்குறள் தொடர்பான 1500 க்கும் மேற்பட்ட நூல்களும் இங்கு உள்ளன.கம்பன், இளங்கோ, பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளின் பல்வேறு பதிப்புகளும் அவை பற்றிய அனைத்து ஆய்வு நூல்களின் தொகுப்பும் உள்ளன. நான்கு வேதங்கள், உபநிடதங்கள், ஆங்கில, தமிழ்க் கலைக்களஞ்சியங்கள், பல்கலைக் கழகங்களின் வெளியீடுகள், சமைய நூல்கள், சித்தாந்த சாத்திரம், பன்னிரு திருமுறை, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் எனப் பல பரிமாணங்களில் நூல்கள் வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.மறைமலை அடிகள், தெ.பொ.மீ., வையாபுரி, மு.வ.,பாவாணர், ந.சி.கந்தையா, முதலிய ஆய்வு முதல்வர்களின் நுட்பமான ஆய்வு நூல்கள், காந்தியடிகள், காரல்மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார், அண்ணா முதலிய சமுதாய சிந்தனையாளர்களின் அரிய நூல்தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன. ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் உலகின் தலை சிறந்த திரைப்படங்களின் குறுந்தகடுகள் இசைக் குறுந்தகடுகள் எனப் பல அரிய குறுந்தகடுகளும் அமைந்திருப்பது நூலகத்தின் கூடுதல் சிறப்பு.தரைத் தளத்தில் நூலகமும் மேல் தளத்தில் கூட்டம் நடத்துவதற்கான அரங்கும் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான அறைகளும் அமைந்த கலை நயம் மிக்க கட்டடமாகத் திகழ்கிறது இது.அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதன்மைக் கட்டடத்தின் பெரிய தூண்களும், நேப்பாள மன்னர் அரண்மனையை நினைவூட்டும் மேல் முகப்பும் என, தன்னைக் கவர்ந்த வடிவமைப்புகளை பழனிவேல் என்ற பொறியாளரின் உதவியோடு வடிவமைத்துள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்கள்.நூலகத்திற்கான தனி கட்டிடத்தை 50 இலட்ச ரூபாய் செலவில் 2000ஆம் ஆண்டில் கட்டி முடித்ததோடு நூலகத்தின் முன்புறம் கண்ணைக் கவரும் அழகிய பூங்காவையும் கலை நுணுக்கத்தோடு உருவாகி வைத்துள்ளார். இவரது முயற்சியைப் பாராட்டி பொள்ளாச்சி மகாலிங்கம், பதிப்புச்செம்மல் மெய்யப்பன், பொற்கோ, முனைவர் சுந்தரமூர்த்தி, க.ப.அறவாணன், கவிஞர் புரட்சிதாசன், த.பழமலை, க்ரியா ராமகிருஷ்ணன், விடியல் சிவா, ஆகியோர் தங்கள் சேகரிப்பிலிருந்து பல நூல்களை கொடையளித்துள்ளனர்.பல்லடம் மாணிக்கம் அவர்கள், நிறங்கள் என்ற கலை இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி பல நூல்களை வெளியிட்டுள்ளார். வள்ளுவம் என்ற இதழை நடத்தியுள்ளார். 24 இதழ்களோடு அது நின்று போனாலும் இலக்கிய இதழ்களில் குறிப்பிடத்தகுந்ததாகும்.தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பல்லடம் மாணிக்கம் தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும், அதன் மூலம் தமிழ் வளர்க்கவேண்டும் என்கிறார்.பிரபஞ்சன், சிவகாமி, திலகவதி ஆகிய எழுத்தாளர்களுடனான இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிகளும், பெண்கள் இலக்கியச் சந்திப்பு-2007 ஆகிய இலக்கிய நிகழ்வுகளும் தமிழ்நூல் காப்பகத்தில் தான் நடைபெற்றன. எல்லாவற்றுக்கும் மேலாக ஆசியாவிலேயே பெரிய தனிநபர் நூலகமும் இந்த தமிழ்நூல் காப்பகம் தான்.
- 117
Added a post
திருவாரூர் அருகே கஞ்சனூரில் தேவ சர்மா என்ற அந்தணன் இருந்தான்.அவன் ஒரு முறை வைக்கோல் கட்டுகளை, அறியாமலும்..தெரியாமலும் ஒரு இளம் பசுங் கன்றின் மீது போட்டு விட, அதன் பாரம் தாங்காமல் அந்த இளம் கன்றுக்குட்டி துடிதுடித்து இறந்து போனது.அந்தக் கன்று, அந்த ஊரில் சிறந்த பக்தி மானான ஹரதத்தர் என்பவருக்குச் சொந்தமானது.பசுங்கன்றைக் கொன்றதால், அவனை மகாபாவி என்று பலரும் ஒதுக்கினார்கள். இந்த நிலையில் நடந்த விபரீதத்தை எடுத்துக் கூறுவதற்காக, பசுங்கன்றின் உரிமையாளரான ஹரதத்தரின் வீட்டிற்குச் சென்றான், தேவ சர்மா.அங்கு வீட்டுக்குள் நுழைந்தபோது, வாசல்படி தலையில் இடித்து ‘சிவ.. சிவ’ என்று கத்தினான்.குரல் கேட்டு வெளியே வந்த ஹர தத்தர், தேவ சர்மா பற்றியும், அவன் வந்த நோக்கம் பற்றியும் அறிந்து கொண்டார்.*பின்னர், ‘நீ சிவ என்று சொன்னதுமே, பசுவைக் கொன்ற உன்னுடைய பாவம் நீங்கி விட்டது.*இரண்டாவதாக சிவ என்று கூறிய தற்காக, உனக்கு கயிலாய பதவியும் கிடைக்கப் போகிறது’ என்று தேவசர்மாவுக்கு ஆறுதல் கூறினார்.ஆனாலும் கூட ஊர் மக்கள் பலரும் தேவசர்மாவை மனதார மன்னிக்க வில்லை. ஊரை விட்டு விலக்கியே வைத்திருந்தார்கள்.ஒரு நாள் ஹர தத்தர், கஞ்சனூரில் உள்ள அந்தணர்கள் அனைவரையும், அங்குள்ள ஈசன் எழுதருளியுள்ள அக்னீஸ்வரர் ஆலயத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதன் படியே ஊர் மக்கள் அனைவரும் ஆலயத்தில் கூடியிருந்தனர்.அப்போது ஹர தத்தர், தேவசர்மா விடம் ஒரு புல் கட்டைக் கொடுத்து, ‘நீ சிவ.. சிவ என்று சொன்னதுமே உன்னுடைய பசுவைக் கொன்ற பாவம் நீங்கி விட்டதாக நான் கூறினேன். ஆனால் அதை ஊர் மக்கள் யாரும் நம்ப வில்லை.எனவே நீ இங்குள்ள கல் நந்திக்கு இந்தப் புல்லைக் கொடு. அது அதை சாப்பிட்டால் உன்னுடைய பாவம் நீங்கிவிட்டதாக இங்கிருப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள்’ என்றார்.அதைக் கேட்டு கூடியிருந்த மக்கள் அனைவரும் எள்ளி நகையாடினர். ‘கல் நந்தி எப்படி புல் சாப்பிடும்’ என்பதால் வந்த நகைப்பு அது.ஆனால் ஹர தத்தரோ இறைவன் மீதான நம்பிக்கையில், ‘இறைவா! உன்னுடைய நாமத்தை ஒரு முறை சொன்னாலே பசுங்கன்றை கொன்ற பாவம் நீங்கிவிடும் என்று நான் சொன்னது உண்மையானால், கல் நந்தியை புல் சாப்பிட்டு மெய்ப்பிக்கச் செய்ய வேண்டும்’ என்று மனமுருக வேண்டினார்.என்ன ஆச்சரியம்.. தேவசர்மா கொடுத்த புல்லை அந்த கல் நந்தி சாப்பிட்டது.அங்கிருந்த அனைவரும் சிவ நாமத்தின் உயர்வையும், பக்திக்கு கிடைக்கும் பலனையும் கண்டு இறைவனை மனதார வழி பட்டனர்.இந்த கல் நந்தி இன்றும் அதே கஞ்சனூர் அக்னீஸ் வரர் ஆலயத்தில் இருக்கிறது. நேரில் சென்று தரிசிக்க விரும்புவர்கள் *திருவாரூர் - கும்பகோணம் சாலையில் 40 km தூரத்தில் உள்ள அதே கஞ்சனூர் சிவன் கோவிலில் இன்றும் அந்த புல் சாப்பிட்ட நந்தியை காணலாம்.....*
- 140
Added a news
ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த நிலநடுக்கமானது இன்று (19) நண்பகல் 12:17 மணியளவில் ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லை பகுதியில் ஏற்பட்டுள்ளது.இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் பூமிக்கு 130 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்தோடு, வட இந்தியா மற்றும் பாகிஸ்தானிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், இந்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் சில குலுங்கியுள்ள நிலையில் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.000
- 153
Added a news
தேர்தல்கள் ஆணைக்குழு நாளை மறுதினம் திங்கட்கிழமை (21.04.2025) கூடவுள்ளது.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மன்னார் பிரதேசத்தில் வெளியிட்ட கருத்தொன்று தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஆணைக்குழு கூடவுள்ளது.ஜனாதிபதி கடந்த நாளொன்றில் மன்னார் பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு, தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு விசேடமாக நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதன்படி, இந்தப் முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக ஆணைக்குழு நாளைமறுதினம் கூடவுள்ளது.000
- 155
Added a news
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை வீடு வீடாக சென்று விநியோகிக்கும் பணி இன்று சனிக்கிழமை (19) ஆரம்பமாகியுள்ளது.உத்தியோகப்பூர்வ தேர்தல் அறிவிப்புகளை விநியோகிப்பதற்கான சிறப்பு நாளாக 27 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கை 29 ஆம் திகதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, அனைத்து தபால் வாக்குச் சீட்டுகளும் 21 ஆம் திகதிக்குள் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ஏதேனும் நீதிமன்றத் தீர்ப்பு கிடைக்கப்பெற்றால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அஞ்சல் வாக்களிப்பு தாமதமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இதுவரை 227 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு தபால் வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.மீதமுள்ள 112 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுகள் நாளை மறுநாள் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.000
- 158
Added a news
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்கா ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு அமெரிக்க வரி முறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என 28 வறுமையான மற்றும் சிறிய நாடுகளின் பெயர் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வழங்கியுள்ளது. அத்துடன் அந்த நாடுகள் தொடர்பில் பொருளாதார ரீதியில் அதிகமாகக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இந்த 28 நாடுகளின் பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்படவில்லை என மேலும் தெரிவிக்கப்படுகிறது000
- 159
Added a news
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத்தின் தலைவர் ஈலோன் மஸ்க்கிற்கும் இடையே தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இந்தியப் பிரதமர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவுடனான இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை முன்னேற்றுவதற்காக இந்தியா செயற்பட்டு வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அதேநேரம், அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி.வோன்ஸ் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்குச் செல்லவுள்ள நிலையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.000
- 161
Added a news
கல்வியில் கடைமட்டத்தில் உள்ளவர்களையும் சர்வதேச ரீதியில் நட்சத்திர வீரர்களாக வலம்வர வைப்பது விளையாட்டுத்துறையே என பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார். சித்திரைப் புதுவருட பெண்களுக்கான மாபெரும் கரப்பந்தாட்ட விளையாட்டு நிகழ்வு நேற்றைய (2025.04.18) தினம் வடமராட்சி கிழக்கு செம்பியன் விளையாட்டுக் கழகத் தலைவர் கிருஸ்ணபிள்ளை புஸ்பராசா தலைமையில் இடம்பெற்றது. அதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்றைய காலகட்டத்தில் பல தகவல் தொழிநுட்ப இலத்திரனியல் சாதனங்களின் பாவனைகள் அதிகரித்துள்ள நிலையில் இளம் சமூகத்தினர் அதில் மூழ்கி வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. ஆயினும் ஆர்வமுள்ளவர்கள் ஆரோக்கியமான விளையாட்டுத் துறையில் ஈடுபடுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாகவுள்ளது. விளையாட்டின் மூலம் ஒரு வீரனது உடல், ஆற்றல், சிந்தனை உற்சாகமடைகிறது. அவனது கல்வி கடைமட்டத்தில் இருந்தாலும் கூட அவன் நட்சத்திர வீரனாக பிரகாசிக்கின்றான். எனவே வளங்கள் குறைந்த நிலையில் உள்ள எமது பகுதி விளையாட்டு கழகங்கள் விளையாட்டு ஆர்வத்தில் உள்ளமையை பார்க்கும்போது பெருமையாகவுள்ளது. அதிலும் பெண்களுக்கான கரப்பந்தாட்ட நிகழ்வை முதற்தடவையாக எமது பகுதி கழகங்கள் முன்னெடுத்துள்ளன. அது சிறந்த செயற்பாடுகள். இதனை ஊக்குவிக்க அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். சுpத்திரை புத்தாண்டு மகளிருக்கான கரப்பந்தாட்ட நிகழ்வில் மாமுனை கலைமகள் விளையாட்டுக்கழகமும் செம்பியன் விளையாட்டுக் கழகமும் இறுதி சுற்றுக்குத் தெரிவாகின. இறுதிப் போட்டியில் மாமுனை கலைமகள் விளையாடடுக்கழகம் வெற்றிக் கேடயத்தை கைப்பற்றியது.
- 161
Added a post
திருச்செந்தூருக்குச் சென்று கடவுளைத் தரிசிக்கும் முன்பு முதலில் கடலில் நீராட வேண்டும்.பின் ஈரத்துணியுடனேயே கடற்கரையில் உள்ள நாழிக்கிணற்றில் 10 ரூபாய் கட்டணம் செலுத்தி கிணற்று படிகளில் இறங்கி அங்குள்ள ஊற்றில் 2 வாளி தண்ணீர் நம் மேலே ஊற்றுவார்கள். அதில் குளித்துவிட்டு பின்னர் உடை மாற்றுபவர் மாற்றலாம்பின் நேரடியாகக் கோவிலுக்கு செல்லாமல் அருகிலுள்ள மூவர் (மௌன சுவாமி, காசி சுவாமி, ஆறுமுக சுவாமிகள்) சமாதிக்கு சென்று வணங்கி விட்டுத்தான் முருகரை காண செல்ல வேண்டும்.இவர்கள் யார் என்ற கேள்வி கட்டாயம் எழும்.. சிதிலமடைந்திருந்த திருச்செந்தூர் திருக்கோயிலை புனரமைத்தவர்கள்.மேலும், வாக்கு சொல்பவர்கள், ஜோதிடம் பார்ப்பவர்கள், பரிகாரம் செய்பவர்கள் இவர்களுக்கு ஏற்படும் தோஷங்களுக்கு மூவர் சமாதுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். சென்று விளக்கேற்றுவது நன்மை.பின் கோயிலுக்கு வரும் வழியில் முன் பக்கமே பொருள் பாதுகாப்பு அறை உள்ளது.அதைக் கடந்து கோயிலை நோக்கி வந்தால் காலணி பாதுகாக்க அறை உள்ளது. அங்கு தேங்காய், பழம், பூக்கள் மாலைகள் வாங்கலாம். திருச்செந்தூரில் விலை அதிகம்.பின் முருகர் கோயிலுக்கு வந்து இலவச தரிசனம் அல்லது கட்டண தரிசனம் செய்யலாம். அர்ச்சனை செய்பவர்கள் சீட்டு வெளியில் கவுண்டரிலேயே வாங்கிக் கொள்ளவும்.கட்டண தரிசனம் மூலம் முருகனின் கர்பகிரகம் எதிரே உட்காந்து தரிசனம் செய்ய அனுமதிப்பார்கள்.உள்ளே சென்று மூலவரை தரிசனம் செய்து விட்டு அருகில் ஒரு குகை பாதை போல் இருக்கும்.அங்கே கதவு திறந்திருந்தால் 5 ரூபாய் அங்கேயே டிக்கெட் எடுத்துக் குனிந்து செல்ல வேண்டும்.மூலவரை வலமிருந்து இடமாக சுற்றுவது போல் இருக்கும்.உள்ளே சென்றால் ஒரே ஆவுடையில் ஐந்து லிங்கங்கள் கொண்ட பஞ்சலிங்கத்தை தரிசனம் செய்யலாம்.கூட்டமாக இருக்கும் நாட்களில் பஞ்சலிங்க தரிசனம் விடுவதில்லை.மூலவர்கள் இரண்டு உண்டு. 2-வது வள்ளி தேவ சேனா சமேத சண்முக முருகரை காணலாம்.தரிசனம் முடித்து பிரகாரம் வந்து வலமிருந்து இடமாகச் சென்று மேதா குரு தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்ய வேண்டும்.சூரசம்ஹார போரில் இங்கிருந்து முருகருக்கு ஆலோசனை வழங்கியதால் இது குருவின் இருப்பிடம் ஆகும்.இன்னொரு சிறப்பு என்னவென்றால் இங்கு ஆமை வாகனத்தில் ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி அருள்புரிகின்றார். செல்வம், ஆன்ம பலம் செழிக்க இவரை வணங்குதல் வேண்டும்.பின் அருகில் வள்ளி சன்னதி தரிசனம் முடித்து வலமாக சுற்றி வந்து தெய்வானை சன்னதியை தரிசனம் செய்து விட்டு சண்டிகேஸ்வரர் தரிசனம் முடித்து சனீஸ்வரர் சன்னதி பைரவர் அருகருகே உள்ளது.தரிசனம் செய்து விட்டு வெளிப்பிரகாரம் வந்து மீண்டும் வலமிருந்து இடமாகப் பிரகாரம் சுற்றினால் ராஜகோபுரம் நோக்கி விநாயகர் வீற்றிருப்பார்அவரை தரிசித்து கடந்து சென்றால் சூரசம்ஹார மூர்த்தி சன்னதியில் அவரை தரிசித்து அருகில் சகஸ்ர லிங்கமாய் அருள்பாலிக்கும் சிவபெருமானை தரிசித்து விட்டு வந்த வழியே திரும்பி பிரகாரம் வர வேண்டும். அங்கே பெருமாள் நாராயணன் சன்னதி உண்டு.பெருமாளை தரிசித்து விட்டு வெளியே வருகிற வழியில் கொடிமரம் அருகே கோவில் சுவரில் ஒரு துளை இருக்கும்.அந்த ஓட்டையில் உங்கள் காதுகளை வைத்தால் வெளிப்புறத்திலிருந்து வரும் கடல் காற்று ஓம் என்று ஒலிக்கும்.கவனித்தால் நீண்டதாய் ஓம் எனும் ப்ரணவ மந்திரம் ஒலிப்பதைக் கேட்டு அருள் பெறலாம்.பின் கொடிமரம் வணங்கி முருகருக்கு நன்றி சொல்லி அருகில் கல்யாண விநாயகரை வணங்கி தரிசனத்தை முடிக்கலாம்.
- 167
Added a post
ஒரு ஊரில் ஒருவர் இருந்தார். மிகவும் நல்லவர். யாருக்காவது ஏதாவது கொடுத்துக் கொண்டே இருப்பார். தினமும் யாராவது ஒருவருக்கு ஏதாவது கொடுக்கவில்லை என்றால் அவருக்கு தூக்கம் வராது. அப்படி ஒரு பழக்கம். அதுமட்டுமல்ல அவர் கொடுப்பது அடுத்தவர்களுக்கு தெரியாது. அவ்வளவு ரகசியமாக கொடுப்பார்.ஒரு நாள் இரவு அவர் ஏற்கனவே தயாராக கட்டி வைத்திருந்த பண முடிப்பை கையில் எடுத்துக் கொண்டார். வீட்டை விட்டு வெளியில் வந்தார். தெருவில் இறங்கி நடந்தார். இன்றைக்கு யாருக்கு தர்மம் செய்வது என்று யோசித்துக் கொண்டே இருட்டில் நடந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் ஒருவர் வருவது போல் இருந்தது. உடனே அவரிடம் போனார் . தன்னிடமிருந்த பண முடிப்பை அவசரம் அவசரமாக அவர் கையில் திணித்து விட்டு திரும்பி வந்துவிட்டார்.அப்பாடா ஒரு வழியாக தருமம் செய்தாகி விட்டது என்கின்ற மகிழ்ச்சி.. மனநிறைவு அவர் முகத்தில்.. நிம்மதியாக தூங்கி எழும்பினார்.மறுநாள் காலையில் ஊர் பூராவும் ஒரே பேச்சு . நேத்து ராத்திரி ஒரு திருடன் கையில் யாரோ பணத்தை கொடுத்து விட்டு போய் விட்டார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். இதை கேள்விப்பட்டதும் பெரியவருக்கு வருத்தமாகிவிட்டது. போயும் போயும் ஒரு திருடனுக்கு உதவி செய்தோம் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டதே என்று நினைத்தார்.சரி இன்றைக்கு யாருக்காவது உதவி செய்வோம் என்று முடிவு பண்ணினார். எதிரில் ஒரு பெண்ணின் உருவம் மங்கலாகத் தெரிந்தது. உடனே அந்தப் பெண்ணிடம் பணத்தை கொடுத்துவிட்டு போனார். மறுநாள் காலையில் ஊர் பூராவும் நேத்து ராத்திரி விபச்சார பெண்ணின் கையில் யாரோ பணத்தை கொடுத்து விட்டு போய் இருக்கிறார்கள் என்று பேச்சு. அடடா இன்றைக்கும் தவறு நடந்து விட்டது என்று வருத்தப்பட்டார். இருக்கட்டும் இன்றைக்கும் ஏதாவது தர்மம் செய்வோம் என்று நினைத்தார்.மூன்றாம் நாள் இரவும் புறப்பட்டார். அப்போதும் எதிரில் ஒருவர் வந்தார். இவர் பணத்தை கொடுத்தார்.மறுநாள் மக்கள் இரவு ஒரு செல்வந்தர் கையில் யாரோ பணத்தை கொடுத்துவிட்டு போய் இருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.தினம் தினம் இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்துக் கொண்டு படுத்து தூங்கினார். அன்று இரவு ஒரு கனவு. அந்த கனவில் இறைவன் வந்தார். நீ கொடுத்த தர்மம் வீணாகப் போய்விடவில்லை. உன்னிடம் பணம் வாங்கிய அந்த திருடன் தவறை உணர்ந்து திருந்தி விட்டான். அந்தப் பெண்ணும் தெளிந்து திருந்திவிட்டாள். அந்த செல்வந்தனும் கொடையாளி ஆகிவிட்டான் என்று கடவுள் சொன்னார். அதாவது நல்ல மனதுடன் தர்மம் செய்தால் அது ஒருபோதும் வீணாகப் போய் விடாது. அது மட்டுமல்லாமல் தருமம் தன்னை மட்டுமல்ல அடுத்தவர்களையும் தீமையிலிருந்து காப்பாற்று சக்தி வாய்ந்தது.
- 168
Added a news
கனடாவில் கல்வி கற்க சென்ற இந்திய இளம்பெண் ஒருவர், இரண்டு கும்பல்களுக்கிடையிலான மோதலின்போது, குண்டு பாய்ந்து பரிதாபமாக பலியானார்.இந்தியரான ஹர்சிம்ரத் (Harsimrat Randhawa, 21) என்னும் இளம்பெண், கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்றிருந்தார். வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில், ஹாமில்ட்டன் பகுதியில் பகுதி நேர பணி செய்துவந்த ஹர்சிம்ரத், பேருந்துக்காக காத்திருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த ஒரு கருப்பு நிற Mercedes காரிலிருந்த ஒருவர், மறுபக்கம் நின்றுகொண்டிருந்த ஒரு வெள்ளை நிற sedan காரிலிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போது, அவர் சுட்ட ஒரு குண்டு பேருந்துக்காக காத்திருந்த ஹர்சிம்ரத்தின் மார்பில் பாய்ந்துள்ளது.துப்பாக்கியால் சுட்டவர்கள் தப்பியோடிவிட, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஹர்சிம்ரத், காயங்கள் காரணமாக பலியாகிவிட்டார்.பொலிசார் இந்த தாக்குதலை நடத்தியவர்களைத் தேடிவரும் நிலையில், ஒரு நல்ல வாழ்க்கைக்காக கனடா சென்ற தங்கள் மகள் அநியாயமாக பலியான அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளது ஹர்சிம்ரத்தின் குடும்பம்.
- 174
Added a post
அந்த வயதான முதியவள் அவளுடைய செக்கை பேங்க் கேஷியரிடம் கொடுத்து,"எனக்கு ஐநூறு ரூபாய் பணம் எடுக்க வேண்டும்" என்றாள்உடனே அந்த பேங்க் கேஷியர் பெண் அந்த முதியவளிடம்,"ஐயாயிரம் ரூபாய்க்கு கீழே தொகை எடுக்க வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் ATM கார்டை பயன்படுத்தி எடுங்கள்" என்றாள்உடனே அந்த முதியவள்,"ஏன்?" என்று கேட்டாள்.உடனே அந்த பெண் கேஷியர் சற்று எரிச்சலுடன் அந்த முதியவளிடம்,"இது தான் பேங்க் சட்டம். வேற எந்த விஷயமும் இல்லைனா இடத்தை காலி பண்ணுங்க, உங்களுக்கு பின்னால் நிறைய பேர் வெயிட் பண்றங்க" என்று கூறினாள் சற்றே கடுமையுடன்..!அந்த முதியவள் இப்பொழுது அமைதியாக நின்றாள்.அவள் தனது செக்கை மீண்டும் அந்த கேஷியர் பெண்ணிடம் கொடுத்து,"தயவு செய்து என் அக்கவுண்ட்டில் உள்ள பணம் முழுவதும் எனக்கு திரும்ப கொடுத்துவிடுங்கள்" என்றாள்.அந்த கேஷியர் பெண் அந்த முதியவள் அக்கவுண்டில் உள்ள பண நிலுவையை பார்த்த பொழுது அதிர்ச்சியானாள்.அவள் தனது தலையை ஆட்டிக் கொண்டு அந்த முதியவளிடம், "என்னை மன்னித்து கொள்ளுங்கள் பாட்டி, உங்கள் கணக்கில் மூன்றரை கோடி ரூபாய் உள்ளது, எங்கள் வங்கியில் இப்பொழுது அவ்வளவு பணம் இல்லை. எனவே தாங்கள் தயவுசெயுது நாளை ஒரு நேரம் ஒதுக்கி வர இயலுமா? என்று மிக பணிவோடு பவ்யமாக கேட்டாள்உடனே அந்த முதியவள்,"இப்பொழுது நான் எவ்வளவு பணம் எனது அக்கவுண்டில் எடுக்க இயலும்?" என்று கேட்டாள்உடனே அந்த பெண்,"மூ்ன்று லட்சம் வரை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்" என்றாள்உடனே அந்த முதியவள் அந்த பெண்ணிடம் மூன்று லட்சம் ரூபாய் தனக்கு வேண்டும் என்று கூறினாள்.அந்த பெண்ணும் மூன்று லட்சம் ரூபாய் வேகமாக மிக பணிவுடன் கொடுத்தாள்.அந்த முதியவள் இப்பொழுது ஐநூறு ரூபாயை அவளது கைப்பையில் வைத்துவிட்டு மீதம் இருந்த 2,99,500 ரூபாயை மீண்டும் அவளது அக்கவுண்டில் டெபாசிட் செய்ய சொன்னாள்.அந்த கேஷியர் பெண் இப்பொழுது வாயடைத்து நின்றாள்.....சட்டங்கள் தளர்க்கப்படாதவையாக இருந்தாலும், நாம் மனிதர்கள் சில சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகலாம்.ஒருவருடைய தோற்றத்தையோ, உடையையோ வைத்து ஒருவரை எடை போட கூடாது.மாறாக அனைவரையும் மரியாதையாக நடத்த வேண்டும்.ஒரு அட்டைப் படத்தை வைத்து அந்த புத்தகத்தை கணிக்க கூடாது.
- 183
Added a post
சூபி துறவியிடம் ஒரு நபர் 1000 பொற்காசுகள் கொண்ட பையை நீட்டி," எனக்கு சந்தோஷமாக எப்படி இருப்பது சொல்லுங்க,இந்த பையை உங்களுக்கு தருகிறேன் என்று சொன்னான்.துறவி எதுவும பேசாமல் அந்த பையை அவனிடம் பிடுங்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தார்,அவன் பதட்டமாக பின்னாடியே ஓடினான்சிறிது தூரம் சென்ற பிறகு துறவி நின்று,அந்த பையை அவரிடமே கொடுத்தார்,"இது தான் சந்தோஷத்தை அடையும் வழி" என்று கூறினார்.அவனுக்கு ஒன்றும் புரியல, துறவி விளக்க ஆரம்பித்தார்......"இந்த பை உன்னிடம் தான் ஏற்கனவே இருந்தது,ஆனால் அப்போது நீ சந்தோஷமாக இல்லை,இப்போ சிறிது நேரம் உன்னிடம் இருந்து பறித்து கொண்டு மறுபடி கொடுத்தேன்,மீண்டும் சந்தோஷம் வந்து விட்டது,அப்போ என்ன அர்த்தம்?,இது கிடைத்தால் தான் சந்தோஷம் என்று நீ ஒரு வரையறை வைக்கிறாய்..... பணம் வீடு வேலை என்று அது கிடைக்கும் வரை நீ சந்தோஷமாக இருப்பதே இல்லை,அந்த வரையறை என்பது நீயாக உனக்கு விதித்து கொண்டவை தானே?""ஒரு இலக்கை அடையும் பொருட்டு பாதை எங்கும் நீ சந்தோஷத்தை புறக்கணித்து செல்கிறாய்,அது தேவை தானா?""மொத்தத்தில் அந்த பை,(சந்தோஷம்) என்பது இயல்பாகவே உன்னிடம் இருப்பது தான்",என்று கூறி முடித்தார்.
- 320
Added a post
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். தந்தை வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். ஆதாயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் ரிஷபம்மனதில் ஒருவிதமான குழப்பம் ஏற்படும். புதிய முயற்சிகளில் பலமுறை யோசித்து ஈடுபடவும். சக வியாபாரிகளால் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் கெடுபிடிகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். தேவையற்ற விரயங்களால் நெருக்கடிகள் உண்டாகும். நினைத்த செயல்கள் முடிவதில் அலைச்சல் ஏற்படும். சாந்தம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : நீலம் மிதுனம்நீண்ட நாள் உறவினர்களின் சந்திப்பு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கால்நடை தொடர்பான பணிகளில் ஆர்வம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு கடகம்சமயோசிதமாக பேசி காரியத்தை முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். மனை மீதான கடன் உதவிகள் கிடைக்கும். வெளியூர் வர்த்தகத்தில் புதிய அனுபவம் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கால்நடைகளின் மூலம் வரவுகள் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் சிம்மம்எதிர்காலம் சார்ந்த சில முயற்சிகள் கைகூடும். ஆடம்பரம் சார்ந்த செலவுகளை குறைப்பீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வாடிக்கையாளர்களிடத்தில் கனிவு வேண்டும். உத்தியோகத்தில் எதிர்பாராத பொறுப்புகளால் அலைச்சல் உண்டாகும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். சுபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் கன்னிஉறவுகளின் வழியில் அனுசரித்து செல்லவும். கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். புரட்சிகரமான சிந்தனைகள் மனதில் தோன்றும். உற்பத்தி துறைகளில் அலைச்சல்கள் உண்டாகும். எதிலும் சிக்கனமாக செயல்படவும். கூட்டுத் தொழிலில் சாதகமான வாய்ப்புகள் அமையும். லாபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் துலாம்எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். சிறு தூரப் பயணம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வாகனங்களால் சில விரயங்கள் நேரிடும். கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. நலம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் விருச்சிகம்புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சுப காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். தன வரவு குறித்ததான சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். உறவினர்களின் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். இரக்கம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம் தனுசுபொருளாதாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதில் இனம்புரியாத சில கவலைகள் தோன்றி மறையும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். பலம் மற்றும் பலவீனங்களை அறிவீர்கள். பல வேலைகளை பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். பங்குதாரர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சுகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் மகரம்வழக்கு விஷயங்களில் புரிதல் ஏற்படும். கால்நடை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். இரவு நேர பணிகளால் ஆதாயம் கிடைக்கும். பயணம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தாரின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். அமைதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு கும்பம்கலைப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் உயர்வு ஏற்படும். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். புது விதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உதவி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் மீனம்தொழில் ரீதியான எண்ணம் சாதகமாகும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். ஆன்மிகம் சார்ந்த காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும். எதிர்காலம் சார்ந்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். முயற்சிகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை
- 339
Added a post
1. தமிழ்ப் புத்தாண்டு - சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. - இந்த நாளில் புதிய ஆடை அணிதல், வீட்டை அலங்கரித்தல், பழைய கடன்களை தீர்த்தல், புதிய தொடக்கங்களை முன்னெடுத்தல் போன்றவை நடைபெறும். - கோயில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெறும். 2. சித்திரை பொங்கல் - இது விவசாயத் தொடக்க விழா, சூர்ய பகவானுக்கு நன்றி செலுத்தும் நாள். - கோவில்களில் பொங்கல் வைத்து பிரசாதமாக வழங்கப்படும். 3. சித்திரைத் திருவிழா (மதுரை மீனாட்சி அம்மன் கோவில்) - மதுரையில் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் விழா சித்திரை மாதம் முழுவதும் நடைபெறும். - தெருக்கூத்து, கரகாட்டம், அலங்கார ஊர்வலம் போன்ற நிகழ்வுகள் நடைபெறும். - சித்திரைப் பூரம் (முழு நிலவு நாள்) அன்று அம்மன் மற்றும் சுவாமி திருமணம் விமர்சையாக கொண்டாடப்படும். 4. சித்திரை மாத புனித நாட்கள் - பிரதோஷம் (ஏப்ரல் 25, 2025) - மாத சிவராத்திரி (ஏப்ரல் 25, 2025) - அக்ஷய திருதியை (ஏப்ரல் 30, 2025) - அக்னி நட்சத்திரம் ஆரம்பம் (மே 4, 2025) - மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் (மே 8, 2025) - சனி பிரதோஷம் (மே 10, 2025) - நரசிம்ம ஜெயந்தி (மே 11, 2025) - சித்ரா பௌர்ணமி (மே 12, 2025) 5. இயற்கை அழகு , காலநிலை - சித்திரை மாதத்தில் வெயில் அதிகரிக்கும், ஆனாலும் இது பழம் பழுக்கும் காலம். - மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் போன்றவை அதிகம் கிடைக்கும்.
- 340
Added a post
விசுவாவசு வருடம் சித்திரை மாதம் 6 ஆம் தேதி சனிக்கிழமை 19.4.2025திதி : இன்று மாலை 03.00 வரை சஷ்டி. பின்னர் சப்தமி. நட்சத்திரம் : இன்று காலை 07.19 வரை மூலம். பின்னர் பூராடம். நாமயோகம் : இன்று இரவு 09.20 வரை சிவம். பின்னர் சித்தம். கரணம் : இன்று அதிகாலை 03.13 வரை கரசை. பின்னர் மாலை 03.00 வரை வணிசை. பிறகு பத்தரை.அமிர்தாதியோகம்: இன்று காலை 06.01 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம். நல்ல நேரம்... காலை : 10.30 முதல் 11.30 மணி வரைபகல் : 12.30 முதல் 01.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
- 348