தாயின் மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்ட நடிகர்

கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்கு, ஜேபி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது.

 கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தாயை பறிகொடுத்து சோகத்தில் தவித்து வரும் நடிகர் கிச்சா சுதீப் தன் தாய் மறைவு குறித்து உருக்கமான பதிவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 அதில், எனக்கு பாரபட்சமின்றி அன்பு காட்டி என் வாழ்க்கைக்கு மதிப்பு கொடுத்த மனித வடிவிலான கடவுள். என்னுடைய முதல் ரசிகை. என்னுடைய மோசமான படங்களையும் விரும்பியது என் தாய் மட்டுமே. என்னுடைய வலிகளை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகளே இல்லை. இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

 24 மணி நேரத்தில் எல்லாமே மாறிவிட்டது. ஒவ்வொரு நாளும், என் விடியல் என் தாயின் குட் மார்னிங் மெசேஜில் தான் ஆரம்பிக்கும். அப்படி அவரிடமிருந்து கடைசியாக வெள்ளிக்கிழமை தான் எனக்கு மெசேஜ் வந்தது. அடுத்த நாள் எனக்கு எந்த மெசேஜும் வரவில்லை.

 இத்தனை வருடங்களில் எனக்கு என் அம்மாவிடமிருந்து மெசேஜ் வராமல் இருந்தது இதுவே முதன் முறை. இதையடுத்து, போன் செய்து பேசினேன் இருவரும் பிக்பாஸ் தொடர்பான சனிக்கிழமை எபிசோடுக்காக பேசிக் கொண்டிருந்தோம். அதனால் நேரம் போனதே தெரியவில்லை.

 நான் பிக்பாஸ் ஸ்டேஜுக்கு செல்வதற்கு முன் என் அம்மா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வந்ததால்,சகோதரியிடமும், மருத்துவரிடமும் பேசிவிட்டு மீண்டும் பிக்பாஸ் மேடைக்குச் சென்றேன். பிக்பாஸ் மேடையில் சில பிரச்சினைகள் குறித்து பேசிக்கொண்டு இருந்தேன், ஆனால், என் மனதில் அம்மாவை பற்றிய எண்ணமே ஓடிக்கொண்டிருக்கிறது.

 ஏற்றுக்கொண்ட வேலையை முடிக்க வேண்டும் என்ற கடமை உணர்ச்சியால் வார்த்தைகள் அற்று முதன்முறையாக மேடையில் தவித்து நின்றேன். ஷூட்டிங் முடிந்த பின்பு நான் மருத்துவமனைக்குச் சென்றேன். அம்மா வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு இருந்தார். ஆனால், சில மணி நேரத்தில் எல்லாமே மாறிவிட்டது. என்னால் இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 நான் ஷூட்டிங் செல்வதற்கு முன்பு என் அம்மா என்னை கட்டியணைத்து அனுப்பிவைத்தார். வந்து பார்க்கும்போது அவர் இல்லை. என் வாழ்வின் விலைமதிக்க முடியாத ஒன்று என்னை விட்டு சென்றுவிட்டது. மிஸ் யு அம்மா என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

  • 85
  • More
சினிமா செய்திகள்
தாயின் மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்ட நடிகர்
கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரின் இறுதிச்
மூன்றாவது திருமணம் செய்ய போகும் நடிகர்
இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா  தமிழில் அன்பு என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் சுமாராக ஓடிய போதும், இந்த படத்தில் வரும்
அமெரிக்காவில் ஷார்ட் உடையில் நடிகை அஞ்சலி
தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பாப்புலர் நடிகை அஞ்சலி. அவருக்கு ஏராளம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.தற்போது நியூயார்க்கில் இருக்கும் அஞ்சலி ஷார்ட் உடைய
கங்குவா படம் பற்றிய அப்டேட்
நடிகர் சூர்யா நடித்துள்ள படங்களில் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படமாக உள்ளது கங்குவா.சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த பட
கனிகாவிற்கு வளையல் அணியும் விழா
கடந்த சில நாட்களுக்கு முன் சினேகன்-கனிகா இருவரும் கர்ப்பமாக இருப்பதாக சந்தோஷ செய்தி வெளியிட்டார்கள். இந்த நிலையில் கனிகாவின் 5வது மாத நிகழ்ச்சி அழகாக
9 நாள் முடிவில் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் மொத்த வசூல்
தனக்கு கிடைத்த வாய்ப்பை வேட்டையன் என்ற படத்தை இயக்கி தனது திறமையை வெளிக்காட்டி இருக்கிறார் ஞானவேல்.இப்படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரி
நடிகை ரம்யா கிருஷ்ணன் விவகாரத்து செய்கிறாரா?
தமிழில் 1983ம் ஆண்டு வெளியான வெள்ளை மனசு என்கிற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.ஐட்டம் டான்ஸ், அம்மன் வேடம், போல்டான கதாபாத
எஸ்.எஸ் சந்திரன் வேண்டாம்; கவுண்டமணியை போடுங்க - நடிகர் ராமராஜன்
கரகாட்டக்காரனில் கண்டிஷன் போட்டு ஜெயித்த ராமராஜன்கரகாட்டக்கரன் படத்தில் கவுண்டமணி இல்லை என்றால் நான் படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று ராமராஜன்
மடோனா செபாஸ்டியனின் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்
2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் நட
நடிகர் மயில்சாமியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
நகைச்சுவை நடிகர் மயில்சாமி பென்ஸ் காரை தொட்டு பார்த்ததற்காக “அந்த” ஆளு அடிச்சாரு.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகர்மறைந்த மயில்சாமி நிகழ்ச்சி ஒன்றுக்கு
நடிகர் அரவிந்த்சாமி பெற்ற புத்தக அனுபவம்
அரவிந்த்சாமி ஒரு நிறுவனத்தின் இயக்குநர். சினிமா நடிகர். அவருடைய அனுபவத்திலிருந்து, பணம் குறித்து தான் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்தபோது, The Psychology O
வேட்டையன் படத்தில் நடிக்க ராணா வாங்கிய சம்பளம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படத்தை லைகா தயாரித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் ரஜ
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு