Feed Item
·
Added article

நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்

நல்லா தெரியும்ணே என்றார் கஜபதி. அப்படியா அந்த பணத்தைக் கொடு என்று கஜபதியிடம் இருந்து பணத்தை வாங்கி தான் ட்ரைவரிடம் கொடுத்து இளங்கோவனிடம் கொடுக்க சொல்லி அனுப்பினார்

கஜபதிக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது அவரின் முகம் மாறுவதைக் கண்ட எம். ஆர். ராதா என்னையா ஒரு மாதிரி இருக்க என்றார்.

என்னண்ணே நான் கொடுத்துற மாட்டனா அவ்வளவு நம்பிக்கை இல்லையா என்றார் கஜபதி.

அதற்கு எம். ஆர். ராதா இளங்கோவன் எவ்வளவு பெரிய வசனகர்த்தா கொடிகட்டி பறந்தவரு. செட்ல ஒரு வசனத்தை மாத்தணும்னா கூட அவரைத் தேடி போய் அனுமதி வாங்கி தான் மாத்துவாங்க..

அவரு ஓகோன்னு இருக்கிறப்ப நீ பாத்திருக்க அவரை நல்லா தெரியும்னு வேற சொல்ற. இப்ப அவரு நிலைமை சரி இல்லை. அவரு வீட்டை ஜப்தி செய்ய போறாங்களாம். நீ போய் பணம் குடுக்குறப்ப என்ன நினைப்பாரு நம்ம நிலைமை இப்படி ஆயிருச்சேன்னு வருத்தப்படுவார்ல.

அதான் அவருக்கு தெரியாதவங்க மூலம் கொடுத்து அனுப்பிச்சேன். அவரு அவமரியாதையா நினைக்க கூடாதுல்ல என்று தெளிவு படுத்தினார்.

  • 109