
மூன்றாவது திருமணம் செய்ய போகும் நடிகர்
இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா தமிழில் அன்பு என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் சுமாராக ஓடிய போதும், இந்த படத்தில் வரும் தவம் இன்றி கிடைத்த வரமே பாடல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த பாடலாக உள்ளது.
நடிகர் பாலா 2010 ஆம் ஆண்டு பாடகி அம்ருதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வந்தனர். இவர்களுக்கு அவந்திகா என்கிற மகள் இருக்கும் நிலையில் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக 2016 ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
சில வருடங்கள் தனிமையில் வாழ்ந்த நடிகர் பாலா, 2021 கேரளாவை சேர்ந்த டாக்டர் எலிசபெத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ரகசியமாக நடந்தது. திருமண போட்டோ வெளியான பிறகு தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரிந்தது.
தற்போது இரண்டாவது மனைவியுடனும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. பாலாவின் முதல் மனைவி அம்ருதா, கடந்த வாரம் காவல் நிலையத்தில் பாலா தன்னையும், தன்னுடைய மகளையும் தினமும் வழிமறித்து தொல்லை கொடுப்பதாக புகார் கொடுத்தார். இதையடுத்து, காவல்துறையினர் பாலாவை ஆஜராகுமாறு கூறியும் அவர் ஆஜராகாததால் போலீசார் அவரை கைது செய்தனர்.
தற்போது ஜாமீனில் வெளியே வந்து இருக்கும் பாலா, நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தன்னிடம் ரூ.250 கோடி சொத்து இருக்கிறது என்றும், தனது குடும்ப சொத்தில் இருந்து பங்காக இந்த ரூ.250 கோடி வந்ததாகவும், இந்த சொத்து குறித்த அறிவிப்பு வெளியானதும் தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் வருகிறது. இதனால், கேரளாவை விட்டு வேறு எங்காவது சென்றுவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன்.
மூன்றாவது முறையாக சட்ட ரீதியாக திருமணம் செய்து குடும்பத்துடன் வாழ விரும்புகிறேன். தனது ரூ.250 கோடி சொத்துக்கு நான் சொல்பவரே வாரிசு என்றும் பாலா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva