Ads

கார்த்தி நடிக்கும் ‘விருமன்

கார்த்தி தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

  • 847
  • More
  • 609
  • More
  • 608
  • More
  • 621
  • More
  • 644
  • More
  • 623
  • More
  • 659
  • More
  • 628
  • More
  • 641
  • More
  • 665
  • More
  • 655
  • More
  • 658
  • More
Comments (0)
Login or Join to comment.
  • 2
Added a post 
புருஷனை சந்தேகப்பட்டு மனைவி ஒரு நாள் அவனோட மொபைல் போனை பரிசோதிச்சா...புருஷனோட contact லிஸ்ட் ல...Super womenSweet heartDream girlPrincessLovely ladyஇந்த பேர் எல்லாம் பார்த்து வெறி ஆகிட்டா... இன்னைக்கு இவனை உண்டு இல்லைனு பண்ணிடலாம்ன்னு... ஒவ்வொரு நம்பருக்கா கால் பண்ண ஆரம்பிச்சா...முதல் நம்பருக்கு கால் பண்ணா அவனோட அம்மா அட்டெண்ட் பண்ணாங்க...ரெண்டாவது நம்பருக்கு கால் பண்ணா அவன் தங்கச்சி அட்டெண்ட் பண்ணிச்சு...மூணாவது நம்பருக்கு கால் பண்ணா அது (மனைவி) அவளோட நம்பரு...நாலாவது நம்பருக்கு கால் பண்ணா அது மகளோட நம்பரு...கடைசி நம்பருக்கு கால் பண்ணா மாமியார் நம்பரு....மனம் நெகிழ்ந்து போன பொண்டாட்டிஅப்பாவி புருஷனை சந்தேகப்பட்டுடோமேன்னு ரொம்ப வருத்தப்பட்டு புருஷனை கூப்பிட்டு மன்னிப்பு கேட்டு 5000 டாலர் பணத்தையும் கொடுத்து போன மாசம் பிரெண்ட்ஸ் கூட அவுட்டிங் போறேன்னு சொன்னீங்க நான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்...இந்த வாரம் போய்ட்டு வாங்கன்னு வழி அனுப்பி வச்சா...வெளிய வந்த நம்மாளு Mechanic ன்னு save பண்ணி வச்சிருந்த அவன் ஆளுக்கு கால் பண்ணி அவுட்டிங் போய்ட்டு வந்தான்...
  • 9
வரலாற்றில் இன்று பங்குனி 291886 – அமெரிக்காவின் அட்லான்டா நகரில் ஜோன் பெம்பேர்ட்டன் என்பவர் முதல் தொகுதி கொக்கக் கோலா மென்பானத்தைத் தயாரித்தார்.1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் நான்காம் பிரிவு இராணுவம் சோவியத் செஞ்சேனையினால் முற்றாக அழிக்கப்பட்டது.1945 – இரண்டாம் உலகப் போர்: வி-1 பறக்கும் வெடிகுண்டு கடைசித் தடவையாக இங்கிலாந்தைத் தாக்கியது.1947 – மடகாஸ்கரில் பிரான்சிய குடியேற்ற ஆட்சிக்கெதிராக மடகாசி எழுச்சி ஆரம்பமானது.1961 – வாஷிங்டன், டி. சி. மக்கள் அரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கும் சட்டம் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.1962 – அர்ஜெண்டினாவின் அரசுத்தலைவர் அர்த்தூரோ புரொந்தீசி இராணுவப் புரட்சி ஒன்றில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.1971 – மை லாய் படுகொலைகள்: அமெரிக்காவின் லெப்டினண்ட் வில்லியம் கலி என்பவன் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றான்.1973 – வியட்நாம் போர்: அமெரிக்கப் படைகள் தெற்கு வியட்நாமை விட்டு முற்றாக வெளியேறினர்.1973 – அமெரிக்காவின் லாவோஸ் மீதான குண்டுத்தாக்குதல்கள் முடிவுக்கு வந்தது.1974 – நாசாவின் மரைனர் 10 விண்ணுளவி புதன் கோளை அண்மித்த முதலாவது விண்கலம் என்ற பெயரைப் பெற்றது.1974 – சீனாவின் சென்சி மாகாணத்தில் சுடுமட்சிலைப் படை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.1999 – உத்தரப் பிரதேசம், சமோலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 103 பேர் உயிரிழந்தனர்.2004 – பல்காரியா, எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியா, உருமேனியா, சிலோவாக்கியா, சுலோவீனியா ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் முழுமையான அங்கத்துவம் பெற்றன.2007 – கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நோர்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.2008 – பூமி மணித்தியாலம் அனைத்துலக மயப்படுத்தப்பட்டது.2010 – மாஸ்கோ மெட்ரோ தொடருந்து நிலையத்தில் இரண்டு தற்கொலைக் குண்டுகள் வெடித்ததில் 40 பேர் கொல்லப்பட்டனர்.2013 – தன்சானியா, தாருசலாம் நகரில் 16-மாடிக் கட்டடம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.2014 – ஐக்கிய இராச்சியத்தில் முதலாவது ஒருபால் திருமணங்கள் இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன.
  • 41
Added a post 
அச்சம் ,,,,,ஒரு மடத்தில் துறவி ஒருவர் இருந்தார். நிறைய சீடர்கள் அவரிடம் கல்வி கற்று வந்தனர். சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த அவர், “எல்லாத்தீமைகளுக்கும் அச்சம் தான் அடிப்படைக் காரணம்;அச்சத்தால் வெறுப்பு வருகிறது; பகை ஏற்படுகிறது; பேராசை உண்டாகிறது; அதனால் நாம் எந்தச் சூழலிலும் அச்சப்படக் கூடாது,'' என்றார். குறுக்கிட்ட சீடர் ஒருவர்,“ஐயா! அச்சத்தால் பேராசை உண்டாகும் என்கிறீர்கள். இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை,'' என்றார். அதற்கு அவர் பதில் ஏதும் சொல்ல வில்லை. அன்றிரவுவழக்கம் போலத் துறவியும், சீடர்களும் உணவு உண்ண அமர்ந்தனர். அப்போது துறவியிடம் வந்த சமையல்காரர், “மடத்தில் அரிசி தீர்ந்துவிட்டதை நான் கவனிக்கவில்லை. இருந்த அரிசியை வைத்து இரவு சமையலை முடித்து விட்டேன். நாளை நகரத்திற்குச் சென்று அரிசி வாங்கி வந்தால் தான்,சமையல் செய்ய முடியும். நண்பகலில் தான்உணவு தயாராகும். காலை உணவு சமைக்க வழி இல்லை,'' என்றார். பிறகு அவர் எல்லாருக்கும் உணவு பரிமாறினார். துறவியும், சீடர்களும் உண்டு முடித்தனர். சீடர்களைப் பார்த்து துறவி,“இன்று நீங்கள் அனைவரும் வழக்கத்தைவிட அதிகமாகச் சாப்பிட்டு உள்ளீர்கள் ஏன்'' என்று கேட்டார். “நாளை காலையில் உணவு கிடையாது என்று சமையல்காரர் சொன்னார். காலையில் பட்டினிகிடக்க வேண்டி இருக்கும். அதனால், இப்போதுஅதிகமாகச் சாப்பிட்டுவிட்டோம்,''என்றார் சீடர்களில் ஒருவன்.“நாளை காலையில் உணவு கிடைக்காது என்று அச்சம் கொண்டீர்கள். அதனால் வழக்கத்தைவிட அதிகமாகச் சாப்பிட்டீர்கள். அச்சத்தால் பேராசை வரும், என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் அல்லவா'' என்றார் துறவி.அச்சத்தால் பேராசை வரும் என்பதை ஒப்புக்கொண்டனர் சீடர்கள்.அனுபவம் என்பது எதை எப்படி செய்ய வேண்டும் என்பது மட்டுமல்ல. எதை எப்போது செய்யக் கூடாது என்று தெளிவாக இருப்பதாகும்.எல்லாமே தெரியும் என்று சொல்லிக் கொள்ளலாம் தவறில்லை.ஆனால்அடுத்தவர்களுக்கு எதுவுமே தெரியாது என்று நினைத்து விடக்கூடாது. அது தவறு துணிவு உங்களை உழைப்பில் உயர வைக்கும் ...பணிவு உங்களை பிறர் மனதில் உயர வைக்கும் .
  • 60
காலை வணக்கம்
  • 47
Added a post 
கடைசியாக எப்போது கீழே சம்மணம் போட்டு உட்கார்ந்தீர்கள்?இதுவரையில்லையென்றால்முதலில்தரையில் 15 நிமிடம் உட்காருங்கள். இதுவரை அப்படி உட்கார்ந்ததே இல்லை என்பதால் கால் முட்டிகள் இரண்டும் தரையில் படியாது. லேசாக முட்டிகள் மேல் கையை வைத்து அமுக்கி உட்கார முயலுங்கள், இப்படி உட்கார்வதால் முதுகை வளைக்கமுடியாதுமுதுகுநேராகத் தான்இருக்கும்.இப்படி ஒரு ஜிம்னாஸ்டிக்ஸுக்கு பின் எழுந்தால் முதுகெங்கும் நல்ல ஆயுர்வேத மசாஜ் செய்தது போன்ற அத்தனை இனிய உணர்வு கிடைக்கும்.நாற்காலியில் உட்கார்வது சில பத்தாண்டுகளாக இருக்கும் வழக்கம்தான்.  நாற்காலி சோபாவில் அமர்வதன் தீமைகள்.இதனால் நம் முதுகுத்தண்டு நேராக இருக்கும் அவசியமில்லை. நம் பின்புறத்தையும், தொடைகளையும் நாற்காலி தாங்கிக்கொள்கிறது. அதனால் முதுகுத்தண்டுக்கு உடலை தாங்கி நிற்கும் அவசியமே இல்லை. இதனால் முதுகுத்தன்டு பலவீனமாகி முதுகுவலி வருகிறது.மக்களும் முதுகுவலி ஸ்பெஷல் நாற்காலி என ஆயிரமாயிரமாக செலவு செய்து வாங்குகிறார்களே ஒழிய கீழே உட்காருவது கிடையாது. இது தலையில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு குட்டிச்சுவற்றில் தலையை முட்டிக்கொள்வது போலத்தான். இதனால் வலி வரும் விகிதம் குறையுமே தவிர நிற்கப்போவது கிடையாது.ஜெரென்டாலஜி, எனப்படும் முதியவர்களை வைத்து ஆய்வு நடத்தும் மருத்துவர்களை கேட்டால் சொல்வார்கள். ஒருவர் எத்தனை ஆண்டுகளில் இறப்பார் என துல்லியமாக தெரியவேண்டு மெனில் அவரை கீழே உட்கார்ந்து எழுந்திருக்க சொல்லுங்கள் என்பது. கீழே உட்கார்ந்து எந்த பிடிமானமும் இல்லாமல், தரையில் கையோ, காலோ ஊன்றாமல் எழுந்திருக்க முடிந்தால் அவருக்கு ஆயுசு நூறு. தரையில் இரண்டு கைகளையும் ஊன்றி, அப்போதும் எழுந்திருக்க முடியாமல் உதவிக்கு ஒருவரோ, இருவரோ வந்து கையை பிடித்து எழுப்பி விழும் நிலையில் இருந்தால் உடனே வக்கீலை வரவழைத்து உயிலை எழுதிவிடலாம்.*ஜெரென்டாலஜி துறை, ஆய்வு ஒன்றில் முதியவர்களை கீழே அமரவைத்து, எழ வைத்து ஆய்வு செய்தார்கள். கை, முட்டி என எதுவும் தரையில் படாமல் எழுந்தால் 0 பாயிண்டு.ஒரு கை ஊன்றி எழுந்தால் 1 பாயிண்டு.இரு கைகளை ஊன்றி எழுந்தால் 2 பாயிண்டு. இப்படி அவர்களின் உட்காரும் பிட்னஸை கணக்கிட்டு அதன்பின் அவர்களை ஆன்டுக்கணக்கில் அப்சர்வ் செய்ததில் தெரிந்த விசயம் பாயிண்டுகள் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க மரண ரிஸ்க் ஒவ்வொரு பாயிண்டுக்கும் 21% கூடுகிறது என்பதுதான்.கீழே சம்மணம் போட்டு உட்காருவது யோகாசனத்தில் சுகாசனம் என அழைக்கப்படுகிறது. இந்தியா, சீனா, ஜப்பான் என கிழக்காசிய நாடுகள் எங்கிலும் சுகாசன முறையில் தான் மக்கள் உட்கார்ந்து எழுகிறார்கள். செருப்பு போடாமல் வீட்டுக்குள் வர சொல்வதற்கும் காரணம் வீடுகளின் தரையில் மக்கள் உட்கார்வார்கள் என்பதுதான்.கீழே உட்காருவது நாகரீகக் குறைவு என கருதி ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து சோபா, சேர்களை வாங்கி முதுகுவலி, மூட்டுவலியை விலைகொடுத்து வாங்கி வைத்திருக்கிறோம்.சோபா, சேரில் நீண்டநேரம் உட்கார்ந்து எழுந்தால் முதலில் வருவது கால் மரத்து போன உணர்வு. அடுத்து பின்புற வலி. காரணம் சோபாவில் உட்காருவதால் பின்புற தசைகளுக்கு வேலையே கிடையாது. பின்புறம் இப்படி இனாக்டிவாக இருப்பது தான் முதுகுவலி, மூட்டுவலி என அனைத்துக்கும் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.கீழே உட்கார்ந்து எழும் சமூகங்களில் வயதானவர்கள் கீழே விழுந்து கையை, காலை முறித்துக்கொள்ளும் அபாயம் துளியும் இல்லை என்கின்றன ஆய்வுகள். காரணம் அவர்கள் வாழ்வதே தரையில் தான். கீழே படுத்து, உட்கார்ந்து எழும் அவர்களுக்கு சப்போர்ட்டிங் தசைகளும், எலும்புகளும் அத்தனை வலுவாகி விடுகின்றன. ஆனால் சோபா, மெத்தையில் படுத்து பாதம் மட்டுமே தரையில் படும்படி வாழும் நாகரீக சமூக முதியவர்களுக்கு வயதானபின் இருக்கும் மிகப்பெரும் ரிஸ்க் கீழே விழுவதுதான்.ஆஸ்டியோ பெரோசிஸ் உள்ளிட்ட எலும்பு குறைபாடுகள் பலவும் உட்கார்வதால் வருகின்றன என சொல்லுகின்றன ஆய்வுகள். சுகாசன முறையில் சம்மணம் போட்டு அமர்ந்து உண்பதும், புழங்குவதும் நம் ஆயுளை கூட்டி, முதுகுத்தண்டு குறைபாடுகளை போக்கி பின்புறத்தையும், முதுகுத் தண்டையும், மூட்டையும் வலுவாக்குகின்றன.அதனால் இதுநாள் வரை கீழே உட்கார்ந்தது இல்லை எனில் இனி உட்கார்ந்து பழங்குங்கள். அப்படி உட்கார்கையில் முட்டி அந்தரத்தில் தொங்குவது போல உயரமாக இருந்தால் அவ்வபோது கையை வைத்து மெதுவாக கீழே அமுக்கி விடுங்கள். இது காலின் அடக்டர் (Adductor Muscle) தசைகளை பிளெக்சிபிள்(Flexible) ஆக்கி போஸ்ச்ரசை (Posture) சரி செய்யும்.சுகாசனம் செய்வோம் .. சுகமாக இருப்போம்.
  • 65
Added a post 
தமிழ் வருடம் சோபகிருது, பங்குனி மாதம் 16 ஆம் தேதி மேஷம் -ராசி: சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். எதிலும் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. பொருளாதாரத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். பயனற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பழைய நினைவுகளால் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். குழப்பம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : ஊதாரிஷபம் ராசி:  எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். புதிய நபர்களிடத்தில் கனிவுடன் பழகவும். சுபகாரியங்களில் கலந்து கொள்வதற்கான சூழல் உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உயர் அதிகாரிகளால் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு மிதுனம் -ராசி:  பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த சில செய்திகள் கிடைக்கும். வாகன வசதிகளை மேம்படுத்திவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பணி மாற்றம் சார்ந்த எண்ணங்கள் ஏற்படும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்கடகம் -ராசி:  தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். குண நலன்களின் சில மாற்றங்கள் ஏற்படும். வித்தியாசமான எண்ணங்களும், முயற்சிகளும் அதிகரிக்கும். எதிலும் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பயணங்களில் புதிய அனுபவம் ஏற்படும். அலுவலகத்தில் பொறுமையை கையாளவும். பொறுமை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புசிம்மம் -ராசி: மறைமுக தடைகளை புரிந்து கொள்வீர்கள். தாயுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். புதிய வேலைக்கான வாய்ப்பு ஏற்படும். புதிய மின்னணு சாதனங்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். பணிவு பிறக்கும் நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை  கன்னி -ராசி:  மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தனவரவுகள் உண்டாகும். வியாபாரத்தில் இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்கள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். ஆர்வம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பழுப்புதுலாம் -ராசி: பணிவான பேச்சுக்களால் நட்பு வட்டம் விரிவடையும். கணிதம் சார்ந்த துறைகளின் மீது ஈர்ப்பு ஏற்படும். உத்தியோகப் பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரங்களை புரிந்து கொள்வீர்கள். சில அனுபவங்களால் புதிய அத்தியாயங்கள் பிறக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்விருச்சிகம்- ராசி:  தனவரவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. வியாபார ரகசியங்களில் கவனத்துடன் இருக்கவும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவீர்கள். உடன் இருப்பவர்களிடம் அதிக உரிமை கொள்வதை குறைத்துக் கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பச்சை  தனுசு -ராசி:  குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். கனிவான பேச்சுக்களால் பிரச்சனைகள் குறையும். மேலதிகாரிகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். தெளிவு பிறக்கும் நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்மகரம் -ராசி: எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகப் பணிகளில் மதிப்பு மேம்படும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நலம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்கும்பம் –ராசி: தொழில் அபிவிருத்தி சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுபாட்டுக்குள் வரும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடிகளை புரிந்து கொள்வீர்கள். மனதில் வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் தோன்றும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். பரிவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்மீனம் -ராசி: விவேகமான செயல்பாடுகளின் மூலம் நன்மதிப்பு ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த பணிகளை மேற்கொள்வீர்கள். எழுத்துத் துறைகளில் சாதகமான சூழல் உண்டாகும். வியாபாரம் சார்ந்த ஒப்பந்தங்களில் கவனம் வேண்டும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். களிப்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : நீலம் இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 74
Added a post 
சோபகிருது வருடம் பங்குனி மாதம் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 29.3.2024 சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 06.21 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி. இன்று மாலை 06.41 வரை சுவாதி. பின்னர் அனுஷம். உத்திரட்டாதி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். கிழமை ராகு காலம் எமகண்டம் குளிகை வெள்ளி காலை 10:30 AM to 12 மதியம் 3 to 4:30 PM காலை 7:30 to 9 AM
  • 79
  • 74
Good Morning...
  • 80
  • 91
Added article 
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் பாலிவுட்டில் அதிகம் சம்பளம் பெரும் நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவாக நடித்த, ஷங்கர் இயக்கிய 2.o படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது, சூர்யா தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், இறுதிச் சுற்று படத்தில் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். அதேபோல் பேட் மியான் சோட்டே மியான் என்ற படத்தில் நடித்திருக்கும் அக்‌ஷய்குமார், மும்பையில் இப்பட ஆடியோ ரிலீஸ் விழாவில் பங்கேற்றார். அவருக்கு அருகில் இந்தி நடிகை ஆல்யா நின்றிருந்தார். அவர் அணிந்திருந்த நீளமான ஆடை தரையில் சரிந்து கிடந்தது. அந்த அடையை கவனிக்காமல் அக்‌ஷய்குமார் மிதித்தபடி நின்றிருந்தார். இதனால் ஆல்யாவால் சில நிமிடங்கள் நகரமுடியவில்லை. ஆனால், அக்‌ஷய்குமார் அந்த ஆடையில் நின்றபடி மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், அவர் மீது விமர்சனம் குவிந்து வருகிறது.
  • 287
Added article 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ’தலைவர் 171’ படத்தில் நடிக்க உள்ளார் என்பது தெரிந்தது.இந்த நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்து சில மாதங்களுக்கு முன்னால் வெளியான நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகும் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ’தலைவர் 171’ படத்தின் டைட்டில் போஸ்டர் வரும் ஏப்ரல் 2 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டரில் ரஜினிகாந்த் ஸ்டைலிஷ் ஆக கையில் விலங்குடன் இருப்பதை பார்க்கும் போது இந்த படத்தில் ஏதோ வித்தியாசமாக லோகேஷ் கனகராஜ் கூற வருகிறார் என்பது மட்டும் புரிய வருகிறது.
  • 292
Added article 
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ஊர்மிளா மடோன்கர். அதன்பினர், ரங்கீலா, சத்யா, ஜூடோய் உள்ளிட்ட பல படங்கலில் நடித்திருந்தார். இவர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் முதல் பாகத்தில் நடித்து, தமிழ் ரசிகர்களிடம் கவனம் பெற்றார். சினிமாவில் நடிப்பதை தொடர்ந்து அரசியலில் களமிறங்கிய ஊர்மிளா கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.  அதன்பின்னர், 2020 ஆம் ஆண்டு சிவசேனா கட்சியில் இணைந்தார். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் நடிகை கங்கனா ரனாவத்தை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலளித்த கங்கனா ரனாவத், என்னைப் பற்றி ஊர்மிளா பேசியதைப் பார்த்தேன். தேர்தலில் போட்டியிடுவது அவ்வளவு சிரமமில்லை. ஊர்மிளா ஒரு வகையில் ஆபாச நடிகை தான். அவரது நடிப்பு திறனுக்காக அவர் அறியப்படவில்லை. அவருக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும்போது எனக்குக் கிடைக்காதா? என்று தெரிவித்தார். சமீபத்தில் கங்கனா ரணாவத் பாஜக சார்பில் இமாச்சர பிரதேசத்தின் மண்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  சமீபத்தில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாலர் சுப்ரியா ஸ்ரீனேட்டின் தன் வலைதள பக்கத்தில் கங்கனா ரணாவத் பற்றி ஒரு பதிவிட்டிருந்தார். இது சர்ச்சையானது. இதற்கு கங்கனா கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில்தான் கங்கனா ரனாவத் கடந்த 2020 ஆம் ஆண்டு ஊர்மிளா பற்றி பேசிய வீடியோவும் பரவி வருகிறது.  இதற்கு கங்கனா ரணாவத் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஆபாச நட்சத்திரம், ஆபாச நடிகை என்பது இழிவான சொல்லா. இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் ஆபாச நட்சத்திரங்களுக்கு கிடைக்கும் மரியாதை பற்றி சன்னிலியோனிடம் கேளுங்கள். நான் எதையும் நியாயப்படுத்தவில்லை, கவர்ச்சி பெண் ஷூலா கி ஜவானி போன்ற வார்தைகளால் நடிகைகளுக்கு ஏற்புடையதாக இருந்தால் இதை ஏன் இழிவாக பார்க்க வேண்டும்? எந்த தனிப்பட்ட விதத்திலும் ஊர்மிளா மடோன்கரை நான் அவமதிக்க வேண்டும் என்று எண்ணவில்லை என்றார்.
  • 275
Added a news 
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 30 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவருக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்திருந்தனர். 3,000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதனால் புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் நீதிபதி ஆனந்த் முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் நான்காம் தேதி நீட்டித்து நீதிபதி ஆனந்த் உத்தரவிட்டார். இதன்மூலம் 30 ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • 276
Added a news 
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார்.  அதன்படி தேர்தல் விதிகள் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர் இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேட்பு மனுதாக்கல் செய்திருந்த நிலையில், இதில் குளறுபடி இருப்பதாக அதிமுக புகார் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோவையில் அதிமுக வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன் கூறியதாவது:   Indian Non Judical பத்திரம் மூலம் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக, நீதிமன்ற பயன்பாட்டிற்காக India Court Free பத்திரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஐ.ஐ.எம்-ல் படித்ததாக கூறும் அண்ணாமலைக்கு அடிப்படை விஷயம் கூட தெரியவில்லை. மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். 
  • 290
Added a news 
உலகின் முன்னணி கணினி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டெல் நிறுவனம் ஏற்கனவே கடந்த ஆண்டு 6650 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்த நிலையில் தற்போது மீண்டும் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா வைரஸ் காலகட்டத்தில் கூகுள், மைக்ரோசாப்ட் உட்பட பல பெரிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்தது என்பதும் சின்ன சின்ன ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கூட பணி நீக்க நடவடிக்கையை எடுத்தது .ஆனால் தற்போது மீண்டும் இயல்பு நிலை திரும்பி விட்டதை அடுத்து ஒரு சில நிறுவனங்கள் அதிகமான ஊழியர்களை பணியில் அமர்த்தி வருவதாக கூறப்படும் நிலையில் கடந்த சில வாரங்களாக மீண்டும் பணி நீக்க நடவடிக்கையை பெரிய நிறுவனங்கள் எடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சமீபத்தில் கூட பேபால் நிறுவனம் 2500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாகவும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 1400 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாகவும் தகவல் வெளியான நிலையில் தற்போது டெல் நிறுவனம் உலகம் முழுவதும் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வருவதாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
  • 310
Added a post 
தமிழ் வருடம் சோபகிருது, பங்குனி மாதம் 15 ஆம் தேதி மேஷம் -ராசி: நெருக்கடியாக இருந்துவந்த சில பிரச்சனைகள் குறையும். அலுவலகத்தில் பொறுப்பு உயரும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மறைவான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வெளீர்நீலம்ரிஷபம் ராசி:  கால்நடை தொடர்பான பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். மனதில் சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சமூகப் பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சில மாற்றமான தருணங்கள் உண்டாகும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. போட்டி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெண்மை மிதுனம் -ராசி:  பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களால் விரயம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் புதிய கண்ணோட்டம் பிறக்கும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனை மேம்படும். உடன்பிறந்தவரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம்கடகம் -ராசி:  முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். வெளியூர் தொடர்பான பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில விஷயங்கள் தாமதங்களுக்கு பின் நிறைவேறும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உதவி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : நீலம்சிம்மம் -ராசி: வியாபாரம் தொடர்பான பணிகளில் பொறுமை வேண்டும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சமூகம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தனித்திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். ஜெயம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்  கன்னி -ராசி:  கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். தடைபட்ட சில காரியங்கள் முடிவுக்கு வரும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய நபர்களின் தொடர்பு அதிகரிக்கும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். மனதளவில் புதுவிதமான பாதைகள் புலப்படும். நிதானம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பச்சைதுலாம் -ராசி: உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். அனுபவ ரீதியான சில முடிவுகளால் மாற்றம் உண்டாகும். வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்துச் செயல்படவும். வாடிக்கையாளர்களிடத்தில் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவதால் காரிய அனுகூலம் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்விருச்சிகம்- ராசி:  திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் ஏற்படும். குழந்தைகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். நெருக்கமானவர்களால் புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது நல்லது. புகழ் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு  தனுசு -ராசி:  குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். முயற்சிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு சாதகமாகும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். வாடிக்கையாளர்களின் ரசனைகளை புரிந்து கொள்வீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பக்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்மகரம் -ராசி: சவாலான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வியாபாரத்தில் அலைச்சல் ஏற்படும். பணி சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கவனம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்கும்பம் –ராசி: பேச்சுக்களில் நிதானத்தை கையாளவும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனை கிடைக்கும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். நண்பர்களிடத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணி நிமிர்த்தமான பயணங்கள் ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். இன்பம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்புமீனம் -ராசி: பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். விவாதங்களில் தலையிடுவதை குறைத்துக் கொள்ளவும். குடும்பத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். விரயம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்  இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 516
Added a post 
சோபகிருது வருடம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி வியாழக்கிழமை 28.3.2024. சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 05.44 வரை திருதியை. பின்னர் சதுர்த்தி. இன்று மாலை 05.28 வரை சுவாதி. பின்னர் விசாகம். பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். கிழமை ராகு காலம் எமகண்டம் குளிகை வியாழன் மதியம் 1:30 to 3 PM காலை 6 to 7:30 AM காலை 9 to 10:30 AM
  • 526
Good Morning...
  • 536
Added a news 
போராட்டம் என்ற போர்வையில் வன்முறையை விதைத்தவர்களிடம் இருந்து பாராளுமன்றம், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி அலுவலகம் உள்ளிட்ட அரச சொத்துக்களை காப்பாற்றி நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தான் மேற்கொண்ட நடவடிக்கைகளை மனித உரிமை மீறல் என சிலர் சுட்டிக்காட்ட முயன்றனர்.இருந்தபோதும் , அந்த நடவடிக்கையை அன்று எடுக்காமல் இருந்திருந்தால் இன்று நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்பியிருக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.கடினமான மற்றும் விரும்பத்தகாத யுகத்தின் பின்னர் ஒரு நாடாக முன்னோக்கி செல்லும் பயணத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க இடமளிக்கக் கூடாது என வலியுறுத்திய ஜனாதிபதி, ஒவ்வொரு துறையிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு சகல தரப்பினருக்கும் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் நேற்று (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.நாட்டின் தற்போதைய பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்து கலந்துரையாடும் நோக்குடன் முன்னாள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டுக்கு புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும், அதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.பரீட்சை சுமையை குறைத்து பாடசாலை கல்வியில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, பல்கலைக்கழக கட்டமைப்பில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் தேர்தலின் பின்னர் புதிய பாராளுமன்றத்தின் கீழ் அந்த வேலைத்திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
  • 660
Added article 
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே பூர்ணிமா யூட்யூப் சேனல் மூலம் பிரபலமடைந்தவர் என்பதால் அவருக்கு ஆரம்பத்தில் பிக்பாஸில் நல்ல வரவேற்பு கிடைத்தது.பூர்ணிமா நினைத்தபடியே பிக்பாஸ் மூலம் பெயரும், புகழும் கிடைத்தது. இருந்தாலும், அவரது செயல்பாடுகள் அந்த வீட்டுக்குள் விமர்சனத்தை சந்தித்தது.அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தனது மனது சொல்லியபடி விளையாடினார். அந்த சீசனில் 96 நாள் விளையாடி 5 லட்சம் ரூபாய் எடுத்துக்கொண்டு அவர் வெளியேறினார்.அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும் அவருக்கு தொடர்ந்து பல படவாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது.பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கியுள்ள “வளையம்” என்கின்ற வெப் தொடரில் ஒப்பந்தமாகியுள்ளார் பூர்ணிமா.இதில் பிரபல நடிகர் கதிர் நடிகை திவ்யா பாரதி உள்ளிட்டோர் கமிட் ஆகியுள்ளனர். இது தவிர தற்போது, பிரபல நடிகர் ஒருவர் நடிப்பில் உருவாகும் புதிய இணைய தொடரிலும் பூர்ணிமா ரவி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
  • 660
Added article 
தமிழ் சினிமாவில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'மைனா' படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் மனதை கட்டி போட்டவர் அமலா பால். இதை தொடர்ந்து, விஜய், ஆர்யா, ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்த அமலா பால், பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகனும், இயக்குனருமான ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இயக்குனர் விஜய் குடும்ப வழக்காடியும், நடிகை அமலா பால் வீட்டின் குடும்ப வழக்கப்படியும் இவர்கள் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பின்னர், இயக்குனர் ஏ.எல். விஜய் குடும்பத்தினர் கண்டிஷனுக்காக திரையுலகில் இருந்து விலகிய அமலா பாலுக்கு, 'பசங்க 2' மற்றும் 'அம்மா கணக்கு' போன்ற படங்களில் நடிக்க கிடைத்த வாய்ப்பு, மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையை தூண்டியது.மேலும் அமலா பாலின் திரையுலக ஆசை... அவரது குடும்ப வாழ்க்கையில் மிகப்பெரிய பூகம்பமாக வெடிக்க, அமலா பால் - ஏ.எல்.விஜய் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய முடிவு செய்தனர். விவாகரத்துக்கு பின்னர் ஏ.எல்.விஜய் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், குடும்பம் - குழந்தை என சந்தோஷமாகி வாழ்ந்து வருகிறார். ஆனால் அமலா பால் விவாகரத்துக்கு பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நிலையில், கடந்த ஆண்டு நம்பர் மாதம் ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு முன்பே அமலா பால் கர்ப்பமாக இருந்த நிலையில், தற்போது... அமலா பால் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். முழுக்க முழுக்க தன்னுடைய கர்ப்பகாலத்தை கணவருடன் செலவழித்து வருவதோடு, தனக்கு பிடித்த வற்றை செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது நீச்சல் குளம் பக்கத்தில் இவர் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது நடந்து வருவது போல் எடுக்கப்பட்ட BTS வீடியோ ஒன்றை அமலா பால் சமூக வலைத்தளத்தில் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
  • 660
Added article 
சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறைவடைந்தது. இதை தொடர்ந்து இன்று இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.சமீப காலமாக, சின்னத்திரையில் ஒன்றாக இணைந்து நடிக்கும் பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. சிலர் ஒரே சீரியலில் ஹீரோ - ஹீரோயினாக நடிக்கும் போது, இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நிஜமாகவே ஒர்க் அவுட் ஆகி, அந்த காதல் திருமணத்தில் முடிகிறது.சுந்தரி, இலக்கியா போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் அரவிஷ், கடந்த சில வருடங்களாக திருமகள் சீரியல் ஹீரோயின் ஹரிகாவை காதலித்து வந்தார்.இவர்களின் காதலுக்கு பெற்றோர் பச்சை கொடி காட்டிய நிலையில், கடந்த ஆண்டு... இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் மிகவும் பிரமாண்டமாக நடந்தது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர். இதை தொடர்ந்து ஹரிகா மற்றும் அரவிஷ் திருமணம் இன்று கேரள முறைப்படி நடைபெற்றுள்ளது. ஹரிகா சிவப்பு நிற பட்டு புடவையில் அழகு தேவதை போல் ஜொலிக்க, அரவிஷ் பட்டு வேஷ்டி - பட்டு சட்டையில் மாப்பிள்ளையாக கெத்தாக இருக்கிறார். இவர்களின் திருமணம் குறித்த வீடியோவை இருவருமே சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 
  • 660
Added a post 
இன்று காலை ஒரு கஸ்டமர் கேரிலிருந்து அழைப்பு...வழக்கம் போல ஹிந்தியில் ஆரம்பித்தார்கள்... நானும் வழக்கம் போல (ஹிந்தி தெரிந்தும்) தமிழில் ஆத்திசூடி சொன்னேன்... மறுபடியும் வழக்கம் போல ஆங்கிலத்தில் ஆரம்பித்தார்கள்... ஆனால் வழக்கம் போல நான் ஆங்கிலத்தில் பேசவில்லை (சமீபகாலமாக பல நம்மூர் பெரியவர்கள் ஆங்கிலம் தெரியாமல் இத்தகைய கஸ்டமர் கேர் அழைப்பு களில் அவதிப்படுவதை பார்த்த பின் முடிந்தவரை தமிழிலேயே கஸ்டமர்கேரிடம் பேசுகிறேன்)இறுதியாக"ராஜகோபாலன் சார்...விச் லாங்குவேஜ் யூவார் கம்ஃபடபிள் வித்" என்றது எதிர்க்குரல்"ஐம் கம்ஃபடபிள் ஒன்லி வித் தமிழ் என்றேன்" ஒரு வித குழப்பத்தில் ஃபோன் கட் செய்தார்IT அலுவலகத்தில் ஆங்கிலம் தானே பேசுகிறீர்கள் என நீங்கள் வாதம் வைக்கலாம்IT அலுவலகத்தில் மொழி இல்லா சமவெளி...க்ளோபல் கம்யூனிகேஷன்... இங்கு பொதுமக்கள் தொடர்பு கிடையாது... பப்ளிக் சர்வீஸ் இல்லைஆனால் இத்தகைய கஸ்டமர் கேர், நம் மண்ணின் சொத்து எடுத்து நம் மக்களின் பணத்தை வைத்து வியாபாரம் செய்யும் பெரு முதலாளிகளின் முகம்... இந்த மண்ணின் கஸ்டமர்களுக்கு கேர் என சொல்லிவிட்டு இந்த மண்ணின் மொழி தெரியாத ஆட்களை பணியில் அமர்த்துவது எவ்வளவு பெரிய கயவாலித்தனம்... இவனுங்க காசு வேண்டும் ஆனால் இவர்களுக்கு ஏற்றவாறு நாங்க மாற மாட்டோம், எங்கள் மொழியில் தான் இவர்கள் பேச வேண்டும் என்கிற திமிர்.திமிர் க்கு திமிர் தான் காட்ட வேண்டும்.அதுக்கு தான் யார் எடுத்தவுடன் ஹிந்தியில் பேசினால் நான் ஆத்திசூடி சொல்லி அவர்களை நல்வழி ப்படுத்த முயற்சி ப்பேன்இப்படி இருக்க மறுபடியும் அதே கஸ்டமர் கேரிடமிருந்து கால்.... இம்முறை செந்தமிழில்வணக்கம் சார் என்று ஆரம்பித்து எதிர்க்குரல்பேசி முடித்தபின்"ஏன்ங்க முன்னாடி தமிழில் பேசாமல் ஹிந்தியில் ஆங்கிலத்தில் பேசினாங்க" என்றேன்"சார் ஆங்கிலம் ஹிந்தி அதிகம் பேர் கஸ்டமர்கேரில் இருக்காங்க சார்... தமிழ்ல குறைவுதான் " என்றார்நாம இந்த பெரு முதலாளிகளின் திமிர் க்கு திமிர் காட்டுவது ஒருபக்கம் இருந்தாலும் நாம நினைத்தால் இங்கே நம்மூரில் பலருக்கு வேலை வாய்ப்பு பெற்று தர முடியும் என்றே தோன்றியதுஎந்த கஸ்டமர்கேர், வங்கிகள், இன்சூரன்ஸ் என எந்த கால் வந்தாலும் தமிழில் இல்லையெனில் "தமிழ் வேண்டும்" என சொல்லி துண்டித்து விடுங்கள்.. உங்களுக்கு பல மொழிகள் தெரிந்து இருந்தாலும்... இப்படி பெரும்பாலானவர்கள் செய்தோம் என்றால் தமிழ் பேசக்கூடிய பலரை அவர்கள் பணியமர்த்த தான் வேண்டும் அந்த கட்டாயம் ஏற்படும்... இதை ஒரு உறுதிமொழியாக எடுத்து செய்வோம்....மறவாதீர்கள் நீங்கள் துண்டிக்கும் ஒவ்வொரு ஆங்கில ஹிந்தி அழைப்பும் வேலை இல்லா ஒருவர் க்கு வேலை வாங்கி தர முடியும் ...இதல்லாமல், எதாவது காசு போட்டுட்டு இல்ல சாமான் வாங்கி போட்டுட்டு ஆங்கிலம் ஹிந்தி தெரிந்தால் தான் உங்களுடைய வேண்டியவை கிடைக்கும் என அநீதி இழைக்கப் படும் ஒரு மூதாட்டி க்கு நல்லது செய்தது போலவும் ஆகும் .மற்றவர்களிடமும் இந்த வேண்டுகோளை வையுங்கள்...
  • 664
Added a post 
●X: சார்... நான் T. Nagar லேந்து பேசறேன் உங்ககிட்ட, உங்க பொண்ணு கல்யாண விஷயமா பேசணும்.○Y : நீங்க என் பொண்ணு கல்யாண விஷயமா பேசுறதுக்கு முன்னால, நாங்க எங்க பொண்ணுக்கு எப்படிப்பட்ட, வரனா பார்க்கறோம்ன்னு சொல்றோம்! அப்புறம் நீங்க பேசுங்க.●X : சார்! கொஞ்சம் பொறுங்க! நான் என்ன சொல்ல வர்றேன்னா...○Y : நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்... நான் சொல்றதை முதல்லே கேளுங்க! பிறகு நீங்க சொல்லுங்க!...●X: சரி! முதல்லே நீங்க என்ன சொல்லனுமோ சொல்லுங்க! அப்புறம் நான் சொல்லறேன்.○Y : நாங்க எங்க பொண்ணுக்கு 6,5,4,3,2,1 இருக்கிற பையனாக பார்க்கறோம்.●X : 6,5,4,3,2,1, அப்படின்ன என்ன? Y : 6,5,4,3,2,1ங்கறது என்னதுன்னா..6 ன்ன பையன் 6 டிஜிட்ல சம்பளம் வாங்கனும் அதாவது குறைஞ்ச பட்சம் மாசம் 1லட்சம் சம்பளம் சம்பாதிக்கணும்.5 ன்ன பொண்ணுக்கு நிச்சயதார்த்தின் போது 5 லட்சத்துக்கு வைர நெக்லஸ் போடணும்.4 ன்ன, 4 சக்கரம் உள்ள கார், பையன் பேருலே வச்சு இருக்கணும்.3 ன்ன, மூணு ரூம் உள்ள சொந்த பிளாட் பையன் பேருலே இருக்கணும்.2 ன்ன, பையனோட அப்பா, அம்மா கல்யாணத்திற்கு பிறகு, 2 பேரும் பையனோட சேர்ந்து இருக்கக்கூடாது.1 ன்ன, கல்யாணத்துக்கு பிறகு, என் பொண்ணு 1குழந்தை தான் பெத்துப்பா! அதுவும் அவ விருப்பப்படும் போதுதான்.அப்புறம் எங்களுக்கு பையனை பிடிச்சுடுத்துன்ன, நீங்க பையனோட salary சர்டிபிகேட் "கொடுக்கனும்.வைர நெக்லஸ் போடறதுக்கு, தகுதி இருக்கான்னு தெரிஞ்சுக்கறதுக்கு, பையனோட பேங்க் ஸ்டேட்மெண்ட் வேணும்.பையன் பேர்ல இருக்கிற காரோட RC certificate, பிளாட்டோட property document வேணும்.●X: மேலே சொன்ன விஷயங்களெல்லாம் உங்க பொண்ணு தன்னுடைய கல்யாணத்திற்கு போட்ட கண்டிஷன்களா?○Y : என் பொண்ணு சின்ன பொண்ணு சார்! அவளுக்கு இதெல்லாம் தெரியாது! ரொம்ப வெகுளியா பழகுவா சார்! இதெல்லாம் நாங்க போடற கண்டிஷன்கள்!ஒரே பொண்ணு ரொம்பவே செல்லம் கொடுத்து வளர்த்துஇருக்கோம்!" புகுந்த வீட்லே போய் கஷ்டப் படக்கூடாது என்பதற்காக நாங்க போடற கன்டிஷன்கள் இது!மேலும், அவளுக்கு வாசல் தெளித்து கோலம் போடத்தெரியாது! சமையல் பண்ணத் தெரியாது! லீவு நாளுன்ன 10 மணிக்குத்தான் எழுந்துந்துப்பா, புடவை கட்டிக்கத்தெரியாது! அதனாலே விசேஷங்களுக்கு சுடிதார்தான் போட்டுப்பா!அப்புறம் இன்னொரு விஷயம்! என் பொண்ணு சுயமரியாதைக்காரி, யார் காலிலேயும் விழுந்து கும்பிடமாட்டா! இதுக்கெல்லாம் நீங்க ok ன்னு சொன்னா மேற்கொண்டு, என் பொண்ணு கல்யாண விஷயமா, என் மனைவி உங்ககிட்ட பேசுவா! ●X : சார்! எனக்கு நீங்க பேசினதே தலைய சுத்தறது... இதுலே உங்க மனைவி வேறயா? நான் என் பையனுக்கு வரன் தேடலே சார்! ○Y : அப்புறம் எதுக்கு என் பொண்ணு கல்யாண விஷயமா பேசணும்ன்னு சொன்னீங்க...●X : என்ன எங்க சார் பேசவிட்டீங்க நீங்க! நான் T Nagar லே இருக்கிற போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பேசறேன்...உங்க பொண்ணு, இன்னிக்கு உங்க தெரு மெக்கானிக் ஷாப் பக்கத்திலே இருக்கிற ஒரு பையனை காதலிச்சு, தெருமுனையிலே இருக்கிற கோயிலிலே கல்யாணம் பண்ணிட்டு ஸ்டேஷனுக்கு வந்துருக்கா! நீங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டீங்க! மேலும் நீங்க உங்க ஊரு சனத்தை கொண்டு கல்யாணம் பண்ணினா இவங்களை பிரிச்சுடுவீங்களாம்! அதனாலே, அவங்க குடும்பம் நடத்தறதுக்கு, போலீஸ் protection வேணும்ன்னு கேட்டு வந்துருக்கா சார்!○Y : என்னது... என்றவாறே மயக்கமாய் கீழே சாய்கிறார்...
  • 733
Good Morning
  • 735
Added a post 
ஒரு கணவனும் மனைவியும் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தனர், அப்போது மனைவிக்கு திடீரென ஒரு சந்தேகம்..."நான் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருக்கிறேன் ஒரு கேள்விக்கு கூட பதிலை காணோமே, இவருக்கு என்னாச்சு!" ஒருவேளை தன்னுடைய கணவனுக்கு காதுதான் கேட்கவில்லையோ காலையில் நன்றாகத்தானே இருந்தார் என்று? பயந்தவள் ஆனால் அதை... தன் கணவனிடம் நேரடியாக கேட்க அவளுக்கு கொஞ்சம் தயக்கம், உடனே தன்னுடைய செல்போனை எடுத்து இந்த விஷயத்தை அவளின் உறவுக்கார பெண் டாக்டருக்கு மெசேஜ் எழுதி அனுப்பினாள்...அந்த டாக்டரிடம் இருந்து வந்த பதிலில்...இருபது அடி தூரத்தில் நின்றுகொண்டு உங்கள் கணவரிடம் ஏதாவது பேசிப் பாருங்கள்,... அவரின் காதில் விழவில்லையா? அல்லது கேட்காதது போல் நடிக்கிறாரா! என்று அவர் கண்களை உற்றுப் பாருங்கள்,.... மேலும் சந்தேகம் எனில் சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் இருந்துப் பேசுங்கள்...அதற்கும் பதில் வரவில்லை எனில் திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லுங்கள், காது கேட்காதது போல் நடித்தாலும் சொன்னதையே திரும்ப சொன்னால் யாருக்கேனும் கோபம் வரும்தானே? அதுவும் பிடிபடவில்லை எனில்... அவரை என் கிளினிக்கு அழைத்து வாருங்கள்...குழப்பத்தில் இருந்தவள், டாக்டர் சொல்லியதை செய்து பார்க்க... எழுந்து வீட்டு வாசலில் நின்று உள்ளிருந்த கணவனிடம்... இன்று பசங்களுக்கு பள்ளிக்கூட கட்டணம் கட்டியாச்சானு? கேட்டாள்...பதில் எதுவும் இல்லை...பின் வீட்டு வரவேற்பறையில் நின்று அதே கேள்வியைக் திரும்ப கேட்டாள்... அதற்கும் பதில் ஒன்றும் வரவில்லை... மீண்டும் ஹாலில் நெருங்கி வந்து திரும்பத் திரும்ப அதே கேள்வியை கேட்டாள்... ம்ம்ஹும்ம்...மறுபடியும் சமையலறை வாசலில் நின்றுகொண்டு மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள்... கணவரிடமிருந்து எந்தவொரு பதிலுமே வரவில்லை..."அய்யய்யோ... போச்சு என் புருசனுக்கு ரெண்டு காதுமே கேட்கவில்லையே என்ன செய்வேன், என்று புலம்பியவள்... வேகமாக ஓடிவந்து கணவனின் அருகில் அமர்ந்து கொண்டு அவன் காது அருகே சென்றுச் சத்தமாக மீண்டும் அதே கேள்வியை கேட்டாள்.... படார் என தலையை திருப்பிய கணவன் தலையை சொரிந்தபடியே எழுந்து கோபத்துடன்...”ஏன்டீ லூசு ! இப்படி காதுல வந்து கத்துற, எத்தனை தடவைதான் கேட்ட கேள்வியே திரும்பத் திரும்ப கேட்ப... நானும் கட்டியாச்சு கட்டியாச்சுனு சொல்லிக்கிட்டே இருக்கேன்..."அவன் மனைவி அதிர்ச்சியில் அப்படியே உறைந்துபோய்விடுகிறாள்...........ஓ... என்று தலையை சொரிந்தவள் மயங்கி கீழே விழுகிறாள்...உண்மையில் காது கேளாமல் போனது அவன் மனைவிக்குத்தான்............!இப்படித்தான் பலர் பிரச்சனையை தன்னிடம் வைத்துக்கொண்டு... அது பிறரிடம் இருப்பதாக நினைத்துக்கொண்டு வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்,
  • 763