Ads

தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 924
 • More
 • 625
 • More
 • 608
 • More
 • 579
 • More
 • 570
 • More
 • 598
 • More
 • 596
 • More
 • 607
 • More
 • 609
 • More
 • 585
 • More
Comments (0)
  Author
   ·   · 18 albums
  •  · 15 friends
  • S

   23 followers
  Info
  Created:
  Updated:
  Recent Images
  • 17
  • More
  • 12
  • More
  • 9
  • More
  • 14
  • More
  • 23
  • More
  • 17
  • More
  • 15
  • More
  • 11
  • More
  • 19
  • More
  • 15
  • More
  • 18
  • More
  • 22
  • More
  • 17
  • More
  • 16
  • More
  • 11
  • More
  • 13
  • More
  • 21
  • More
  • 13
  • More
  • 20
  • More
  • 16
  • More
  • 15
  • More
  • 13
  • More
  • 14
  • More
  • 15
  • More
  Added article 
  'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து அவர் இயக்கிய 'திரவுபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய திரைப்படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக தற்போது மோகன் ஜி இயக்கத்தில் 'பகாசூரன்' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன், நட்டி நட்ராஜ், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த நிலையில், 'பகாசூரன்' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த மேக்கிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'பகாசூரன்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
  • 102
  Added article 
  நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'தளபதி 67' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை திரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர் மிஸ்கின், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி (நடிகராக அறிமுகமாகிறார்), மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது. இந்த நிலையில் 'தளபதி 67' படத்தின் டைட்டில் நேற்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. அதன்படி 'தளபதி 67' படத்தின் டைட்டில் வீடியோ சோனி மியூசிக் இந்தியா யூ-டியூப் சேனலில் நேற்று வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு 'லியோ' என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்த நிலையில் 24 மணி நேரத்தில் 'லியோ டைட்டில் வீடியோ 27 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த வீடியோ 1.3 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது. தற்போது 'லியோ டைட்டில் வீடியோ யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.மேலும் ஷாருக்கானின் ஜவான் மற்றும் விக்ரம் இன்ட்ரோ பிரோமோ ரெக்கார்டை இந்த படம் முந்தியுள்ளது. இந்தியாவிலேயே 24 மணி நேரத்தில் அதிகம் லைக்குகளை அள்ளிய டைட்டில் பிரோமோ வீடியோ' லியோ' வீடியோ மாறி உள்ளது. மேலும் 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. 
  • 102
  Added a news 
  இலங்கையின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நிலையில் மன்னார் மாவட்டத்தில் சுதந்திர தினத்திற்கு எதிரான கரிநாள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.இன்று (சனிக்கிழமை) தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ் சிவகரன் தலைமையில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு கைகளை சங்கிலியால் கட்டி வாய் மற்றும் மூக்குகளை கறுப்பு துணிகளால் மூடிய படி பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் சுதந்திர தினத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.குறிப்பாக 75 ஆண்டாகியும் எமது அடிப்படை உரிமை நசுக்கப்படுகிறது,சிங்களத்தின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்,பெளத்த தேசிய வாதமும் சிங்கள இனவாதமுமே எம்மை அடிமைப்படுத்துகின்றன என எழுதப்பட்ட பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • 101
  Added a news 
  எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டை எட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.கடன் உத்தரவாததிற்காக தற்போது சீனாவுடன், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்றும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்தியா ஏற்கனவே கடன் உத்தரவாதங்களை வழங்கியுள்ளதாகவும், மீதமுள்ள கடனாளர்களுடன் பேச்சுவார்த்தை விரைவில் நிறைவுபெறும் என்றும் கூறியுள்ளார்.மோசமான கொள்கைகள் காரணமாக இலங்கை தற்போதைய இக்கட்டான நிலையில் இருப்பதாக அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார். இருப்பினும் அரசாங்கம் மக்களின் இன்னல்களைப் போக்க பாடுபடுகிறது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
  • 102
  Added a news 
  75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் சிறையில் உள்ள 622 கைதிகள் இன்று (04) ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட உள்ளனர்.போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்படும் கைதிகளும் இவர்களுள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.இது தவிர சிறைச்சாலையில் நல்லடக்கத்துடன் செயற்பட்ட 31 கைதிகளும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பின்னர் நாளை விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
  • 104